Wednesday, June 17, 2026

தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன்.

தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன். 
திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும்போதே நிசும்பசூதனி தேவி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது தெரிய வருகிறது.

பேரரசர்கள் தங்கள் வெற்றிக்குத் தெய்வமாக விளங்கும் கொற்றவைக்கு ஆலயங்கள் அமைப்பது பண்டைய மரபு. தஞ்சை நகரின் புகழுரைக்கும் செந்தலைத் தூண்கள் (நியமத்துத் தூண்கள்) சுவரன்மாறன் எனும் பெரும்பிடுகு முத்தரையன் எடுப்பித்த நியமத்து மாகாளத்துப் பிடாரி கோயிலின் தூண்களே என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நியமத்து மாகாளத்துப் பிடாரி தேவியைப் பாண்டியன் மாறஞ்சடையன், தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன், சோழ மன்னன் ராஜகேசரி வர்மனான ஆதித்தன் போன்ற பெரு மன்னர்கள் போற்றி வழிபட்டனர் என்பதை அதே தூண்களில் உள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. இதனால் தமிழகத்து, அனைத்து மன்னர் மரபினர்களும் தேவிக்கு எத்துணை ஏற்றம் தந்து வழிபட்டனர் என்பது தெரிய வருகிறது. இதே நெறியில்தான் விஜயாலயனும் தஞ்சையில் நிசும்பசூதனியை பிரதிஷ்டை செய்தான்.


கோயில் நுழைவுவாயில்
அன்னை பராசக்தி துர்க்கையாக, காளிதேவியாகப் பல்வேறு வடிவங்கள் பூண்டு, தீமையின் உருவாகத் திகழ்ந்த அரக்கர் பலரை வதம் செய்தாள் என்பதைத் தேவி மகாத்மியம் உரைக்கிறது. தேவியின் உன்னதத்தை வேதத்தில் கூறப்படும் 'ராத்திரி சூக்தம்' என்பதிலிருந்து பல நூல்கள் எடுத்துரைக்கின்றன.

கோயில் முகப்பு
தேவி துர்கா பரமேசுவரியாக இரத்தபீஜன் எனும் அரக்கனை அழித்தபோது, முதலில் நிசும்பனும் பின்னர் அவன் தம்பி சும்பனும் தேவியுடன் போர் தொடுத்தனர். அகம்பிடித்த அரக்கர்கள் இருவரையும் தேவி அழித்தாள். அப்போது அவள் பூண்ட வடிவே 'நிசும்பசூதனி' என்பதை நூல்கள் கூறுகின்றன.


விஜயாலயன் பிரதிஷ்டை

தஞ்சை கீழவாசலில் விஜயாலய சோழன் பிரதிஷ்டை செய்த நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளிதேவியின் வடிவம் பீடத்தின் மேல் அமர்ந்த கோலத்திலுள்ளது. இச்சிற்பத்தின் வலக்கால் மடங்கி ஆசனத்தின் மீது அமர்ந்திருக்க, இடக்கால் தொங்கிய வண்ணமாக உள்ளது. கையில் கத்தியும் கேடயமும் உள்ளன. மேல் பாகத்தில் வலக்கையில் ஏந்திய சூலத்தைக் கொண்டு காலடியில் இருக்கும் அரக்கனைக் குத்தித் தள்ளுவது போல அமைந்துள்ள இத்திருமேனிக்குப் பாம்பினாலாகிய குசபந்தமும், சடைமுடியும் விளங்குகின்றன.

நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன்</strong>
நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன்
கீழவாசல் பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் யோக பட்டத்தில் அமர்ந்திருக்கும் சிவனாரது திருவுருவமும், காளி கோயிலை ஒட்டிய மணற்பகுதியில் மார்பு வரை புதைந்துள்ள கெளமாரி உருவமும் மிகப் பழமையான 8 - 9 ஆம் நூற்றாண்டுச் சிற்பங்களாகும். இந்தப் பழைமை எச்சங்களோடு தேவி இங்குக் கோயில் கொண்டுள்ளாள். பொதுவாக எல்லா ஊர்களிலும் காளி கோயிலாக அல்லது பிடாரி கோயிலாகத் தேவியின் திருமுற்றங்கள் காணப்படும். இங்கு இடம் பெற்றிருக்கும் திருவுருவங்கள் 4 அல்லது 8 கரங்களுடன் திகழும். பெயர்களும் காளி, காளாபிடாரி, பட்டாரகி என்பனவாகக் குறிக்கப்பெறும்.


ஆனால் தஞ்சையில் விஜயாலயன் பிரதிஷ்டை செய்த தேவிக்கு "நிசும்பசூதனி' என்ற சிறப்புப் பெயர் காணப்படுகிறது. இதனால், இவ்வடிவம் மற்றக் காளி, பிடாரி உருவங்களிலிருந்து மாறுபட்டுத் திகழ்ந்திருக்க வேண்டும். தஞ்சைக் குயவர் தெருவிலுள்ள உக்கிரமாகாளி மற்ற இடங்களில் காணப்படும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்த, காளாபிடாரியாகவே காணப்படுகிறாள். ஆனால் தஞ்சை பூமால் ராவுத்தன் கோயில் தெரு வடபத்ரகாளியோ தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத புதுமையான வடிவில் திகழ்கிறாள்.



ஆறு அடி உயரத்துக்கும் மேலுள்ள இச்சிலையில் தேவி அமர்ந்து காணப்படுகிறாள். பல கரங்கள். அக்கரங்களில் பல படைக்கலன்கள். தலையில் கேசம் தீச்சுடர்போல் மேல் எழுகிறது. முகத்தில் ஓர் உறுதி. அசுரப் பூச்சிகளை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம். வலது காதில் பிரேத குண்டலம். இடக்காதில் பெரியகுழை. சதை வற்றிய உடலில் வெறும் எலும்புதான். ஆயினும் திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள். அவற்றைச் சுற்றிலும் பாம்பு கச்சாகச் சுழல்கிறது. மண்டை ஓடுகள் பூணூலாக அவள் உடலில் திகழ்கின்றன. எட்டுக்கரங்கள். அவை சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளன. ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைச் சுட்டுகிறது. அவளது வலது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின் மீது ஊன்றியுள்ளது. அந்தத் தலையே பெரிதாக உள்ளது. அதன் மீது ஊன்றியுள்ள அவளது காலில், எலும்பாக இருப்பினும், அழுத்தும் வலிமையைக் காணலாம். அவளது இடக் காலை அசைத்துக் கிடத்தியுள்ளாள். அவ்விருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மூச்சுத் திணறுகின்றனர். ஓடுகின்றனர். என்ன பெருமிதமான சிற்பம். மயிர்க்கூச்செறியும் அமைப்பு. சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள் நால்வரும் வதைபடும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

<strong>வடபத்ர காளியம்மன்</strong>
வடபத்ர காளியம்மன்
கம்பீரமான தோற்றம்


தீமையை அழித்து அடியவர்களுக்கு அன்னை அருளமுது அளிக்கின்றாளோ எனக் கருதுமாறு கம்பீரமாக அமர்ந்துள்ளாள். இதை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதேவடிவில் அன்னை எலும்புருவில் காட்சியளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இவள்தான் விஜயாலயன் வடித்த நிசும்பசூதனி என்பதில் ஐயமில்லை.

அவளுக்காக விஜயாலயனால் எடுக்கப்பட்ட கோயில் அழிந்தாலும், திருமேனி நிலை குலையாமல் இருப்பது தஞ்சையின் பெரும் பேறாகும். வரலாற்று ஏடுகள் குறிக்கும் தஞ்சை நகரின் தொன்மையான தேவியின் தெய்வத் திருவுருவமும் இதுதான் என்பது சிறப்புக்குரிய செய்தி.

வேண்டிய சக்தியைக் கொடுத்த காளி


விஜயாலய சோழன் காலம் முதல் வேண்டிய சக்தியைக் கொடுத்து அருள்புரிகிறாள் நிசும்பசூதனி என்கிற வடபத்ரகாளியம்மன். சிறப்பாக ஆட்சிபுரிவதற்கு இக்காளியையே விஜயாலய சோழன் நாடினான். இக்கோயில் தேவியை வழிபட்ட சோழ மன்னர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர்.

இக்கோயிலில் ஆப்பசார பூஜைகள் செய்தால் மன மற்றும் உடல் ரீதியான முடக்கத்தை நீக்கி, சோர்விலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். பொதுவாக, எதிரியைக் கண்டுபிடித்துவிடலாம்; ஆனால், துரோகியைக் கண்டறிய முடியாது. இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் அனைத்து எதிர்ப்புகளும் உடைத்தெறியப்படும். காரியத் தடை எதுவாக இருந்தாலும் தகர்த்தெறியப்பட்டு, வெற்றியைத் தரும்.

இந்தக் கோயிலையும் வலம் வரலாம்.. நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்

மண்டபத் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள எண் திசை காளிகள்
ராகு, கேது நிவர்த்தி தலம்

இக்கோயிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி அல்லது ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் சென்று வழிபட்டால் ராகு, கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும். இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய பிரச்னைகள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.

ஒரே இடத்தில் எண் திசை காளிகள்

அக்காலத்தில் தஞ்சை நகரைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் காளி கோயில் அமைக்கப்பட்டது. இதில், முதலாவது காளி கோயில் வடபத்ர காளியம்மன் கோயில். எட்டு திசைக்கும் செல்ல முடியாத பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்தால், தூண்களில் உள்ள எண்திசை அம்பாள்களையும் ஒரே இடத்தில் வழிபட்டுவிடலாம்.

ஆண்டுப் பெருவிழா

இக்கோயிலில் தை மாத முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை 21 நாள்களுக்கு ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதில், பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பெளர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாள்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

செல்லும் வழி

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தன் கோயில் வழியாக இக்கோயிலுக்குச் சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலுக்கு நடந்தும், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களிலும் செல்லலாம். வெளியூர்களிலிருந்து ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து ஆட்டோ மூலம் பயணம் செய்யலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தஞ்சாவூருக்கு வந்து வரலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, June 15, 2026

காலபைரவர் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் உள்ளன.

காலபைரவர் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் உள்ளன .
கால பைரவர் சிவபெருமான் சார்பாக நவக்கிரகங்களையும் மனிதர்களையும் நிர்வாகம் செய்து வருகிறார்.

அதனால் கால பைரவருக்கு கால தேவன் என்று ஒரு பெயர் உண்டு.

காலபைரவர் உடைய மூச்சுக்காற்றுதான் வாக்கிய கணித பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் என்று விரிவடைகிறது.

கர்மவினையை நீக்குவதற்கு அதுவும் நம்முடைய முற்பிறவி கர்மவினைகளை  ஒரே பிறவியில் நீக்குவதற்கு பைரவர் வழிபாடு  செய்ய வேண்டும்.

பைரவ மந்திரம் தினமும் 108 முறை எழுதி வர வேண்டும்.

மிக வேகமாக வரம் தரும் கடவுள்களில் பைரவர் வராகி காளி சின்ன மஸ்தா பிரித்திங்கரா தேவி பத்ரகாளி அங்காள பரமேஸ்வரி ருத்ரகாளி மகாகாளி போன்ற தெய்வங்கள் முதன்மையானவை.

தமிழ்நாட்டில் காலபைரவருக்கு எட்டு படை வீடுகள் உள்ளன.

இந்த எட்டு படை வீடுகளும் சிவன் கோயில்களாக உள்ளன.

இந்த கோயில்களில் மூலவராக சிவலிங்கம் இருக்கிறது.

அப்படி சிவலிங்கம் இருந்தாலும் அந்த சிவலிங்க வடிவத்தில் காலபைரவர் தான் இருந்து அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.

போன மூன்று பிறவிகள் முழுவதும் பழுத்த சிவனடியாராக இருந்திருந்தால் இந்த பிறவியில் பைரவர் வழிபாடு செய்ய முடியும் 

அல்லது 

போன மூன்று பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவியில் மட்டுமாவது சித்தர் ஒருவருடைய நேரடி சீடராக 40 வருடங்கள் வரை வாழ்ந்து இருந்தால் இந்த பிறவியில் பைரவர் வழிபாடு  நமக்கு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

சிவனும் பைரவரும் ஒருவரே என்பதை  நிரூபணம் செய்வதற்காக எட்டு படை வீடுகளில் சிவலிங்க வடிவத்தில் காலபைரவப் பெருமான் அருள் பாலித்து வருகிறார்.

 1.திருக்கோவிலூர் சிவன் கோயில்

2.பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை சிவன் கோயில்

 3 .தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் எட்டாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்டியூர் அருள்மிகு  பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோயில்(ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி வந்து வழிபட வேண்டிய பைரவர் கோயில் இது)

4. திருக்கடையூர் காலசம்கார மூர்த்தி கோயில் மற்றும் திருக்கடையூர் மயானம் என்ற சிவன் கோயில்

5. மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பனார்கோயில்

6. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருக்கும் வழுவூர் வீரட்டானம்(அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி வந்து வழிபட வேண்டிய அனுஷ நட்சத்திர பைரவர் கோயில் இது)

7. திருவாரூரில் இருந்து நாகை செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருவிற்குடி (இங்கேதான் மகாவிஷ்ணுவுக்கு செல்வத்தின் கடவுள் என்ற வரத்தை மகா கால பைரவ பெருமான் வழங்கினார்)

8. மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கொறுக்கை

இங்கேதான் ஈசனுடைய நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட நெருப்பு மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. இந்த கோயிலுக்கு அருகில் ஒரு தென்னந்தோப்பு அமைந்துள்ளது. அங்கு இன்றும் மன்மதனின் சாம்பல் இருக்கிறது.

நிறைவாக சிதம்பரம் சென்று அங்கே உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த எட்டு கோயில்களையும் தரிசனம் செய்வதற்கு குறைந்தது 4 நாட்கள் ஆகும் .

இந்த கோயில்களுக்கு சென்று வந்தால் போதுமானது சென்று வழிபட்டு வந்தால் போதுமானது.

உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் பைரவ மந்திரத்தை கீழே கொடுக்கின்றோம் .

 இந்த கோயில்களில் ஒரு மணி நேரம் வரை அமர்ந்திருக்க வேண்டும்.

 அவ்வாறு அமர்ந்திருந்து  உங்களுடைய ஜென்ம நட்சத்திர கால பைரவ மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜெபிக்க வேண்டும்.

 இதன் மூலமாக மிகப் பெரிய அளவில் உன்னுடைய கருமவினை குறைந்து விடும் என்பது உறுதி.

 இந்த எட்டு கோயில்களுக்கும் நீங்கள் சென்று வழிபட்டு முடித்து ஒரு வருடம் ஆக வேண்டும் .

அதன் பிறகு உங்களுடைய போன நான்கு முற்பிறவி பற்றிய உண்மை ரகசியங்கள் உங்களைத் தேடி வரும்.

 எனக்கு அவ்வாறு கிடைத்தது !!!

அந்த அனுபவத்தை உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

 அடியேனது குரு அகத்தியரின் ஆணைப்படி இதை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

நம்முடைய ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

வார தாரக சித்தர் என்பவர் பைரவ உலகத்தில் வாழ்ந்து வரும் தலைமை பைரவ சித்தர் ஆவார்.

 இவரை உபாசனை செய்து தான் ஆரியபட்டர், பாஸ்கராச்சாரியார் போன்றவர்கள் அழியா புகழ் பெற்ற ஜோதிட நூல்களை இயற்றினார்கள்.

நாம் வாழ்ந்து வரும் இந்த பூமியில் 

24 மணி நேரம் என்பது ஒரு நாள் என்றும்
 ஏழு நாட்கள் என்பது ஒரு வாரம் என்றும்

 30 நாட்கள் என்பது ஒரு மாதம் என்றும்

 365 நாட்கள் ஒரு வருடம் என்றும்

 காலத்தை நிர்ணயம் செய்தவர் இவர் தான்!!!

 மகா காலபைரவர் பெருமாளின் பரிபூரண ஆசீர்வாதம் பெற்ற பைரவ சித்தர் இந்த வார தாரக சித்தர் ஆவார்.

 ஜோதிடராக இருக்கும் ஒவ்வொருவரும் தினமும் காலையில் இவரை ஒரு முறையாவது  நன்றியோடு நினைக்க வேண்டும்.

அசுபதி ,மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும். 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ் வாரதாரக சித்த குரு நமஹ
ஓம் ஹ்ரீம் பம் பிஷன பைரவாய நமஹ

பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் ருரு பைரவாய நமஹ 

 கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவாய நமஹ

 ரோகிணி ,அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம்  ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ
ஓம் ஹ்ரீம் பம் கபாலபைரவாய  நமஹ

மிருகசீரிடம், சித்திரை ,அவிட்டம் நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் சண்ட பைரவாய நமஹ

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு  நமஹ

ஓம் ஹ்ரீம் பம் சம்ஹார பைரவாய நமஹ

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் அசிதாங்க பைரவாய நமக

பூசம், அனுஷம் ,உத்திரட்டாதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரங்களை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் குறோதன பைரவாய நமக

ஆயில்யம் ,கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரங்களை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் உன்மத்தபைரவாய நமஹ

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

சிவபுரம் சிவகுருநாதசுவாமி காலடியில் ராகுவுடன் கோவில்.

*சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோவில்*
*காலடியில் ராகுவுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்*
*சிவபுரம் என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும்*

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 130 வது தேவாரத்தலம் ஆகும்.

 இறைவன் திருநாமம் சிவகுருநாதசுவாமி. இறைவியின் திருநாமம் ஆர்யாம்பாள், சிங்காரவல்லி.

*இத்தலத்தில், பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம்*. 

*இதனாலேயே ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு*.  அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை ' என்றழைக்கப்படுகிறது. 

*சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.*

பொதுவாக சிவாலயங்களில், சுற்று சுவற்றில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருப்பார். ஆனால் இத்தலத்தில் காலடியில் முயலகன் மட்டுமின்றி ராகுவும் இருப்பது ஒரு விசேடமான அம்சமாகும். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும்.

ஒருமுறை நந்தியின் சாபத்துக்கு ஆளாகி வராகமாக உருமாறிய மகாவிஷ்ணு, இத்தலத்தில் இறைவன் வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண்பன்றியாக இருந்து சிவனை வழிபட்ட சிற்பம் உள்ளது. #ஈசனைதேடிகுழு2026--
முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. 

வெளிப் பிராகாரத்தில் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு 11 தேய்பிறை அஷ்டமியில் தயிர்சாதமும், வடைமாலையும் சார்த்தி அர்ச்சனை செய்துவந்தால் தீராத நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற, இழந்த பொருள் மற்றும் செல்வத்தை திரும்பப் பெற, தொழில் வளம் பெற பலன் கிட்டும். ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி ஆகிய சனி உபாதைகளும் 11 தேய்பிறை அஷ்டமியில் இத்தலத்து இறைவனையும், பைரவரையும் வழிபட நீங்கும்.  இத்தலத்தில், கோவிலுக்கு எதிரிலுள்ள சந்திர தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தில் நீராடுவது சிறப்பாகும். குபேரன், ராவணன், அக்னி முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். ஒருமுறை நந்தியெம்பெருமானின் சாபத்துக்கு ஆளான குபேரன் தனது பதவியை இழந்தான். குபேரன் பூவலகில் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். தீபாவளி நாளில் இத்தலத்தில் குபேர பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இங்கு வந்து இத்தல இறைவனை வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையிலிருந்து சிவபுரி செல்லலாம். 

திருவேற்காடு தேவி கருமாரியம்மன்.

*அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்*
                  
.  
இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. 

மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு. 

*சுவாமி* : தேவி கருமாரியம்மன். 

*தீர்த்தம்* : வேலாயுத தீர்த்தம். 

*தலவிருட்சம்* : கருவேல மரம். 

*தலச்சிறப்பு* : இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். 

இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு. 

ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு நிகழ்ச்சியாக செய்யப்படுகின்றது.  

மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு. இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 
கடன் தீர்த்தல், வியாதி, வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக நம்பப்படுகிறது. 

*தல வரலாறு* : அந்த காலத்தில் வெள்வேல மரங்கள் இவ்விடத்தில் அதிகம். எனவே வேற்காடு எனப்பெயர் பூண்டது. நான் மறைகளே வெள்வேல மரங்களாகி நின்ற வரலாறு இதோ! வெள்ளத்தால் உலகம் ஒரு முறை அழிவுற்றது. 

சிவன் உலகை மீண்டும் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியது, பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள். 

அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் உலகம் இயங்க ஆரம்பமானது. வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. 

தேவர்கள் தோன்றிய இவ்விடத்தின் ஒரு பகுதி 'தேவர் கண்ட மடு' என்று அழைக்கப்படுகிறது. இதுவே திருவேற்காடு வரலாறு. 

இந்த திருவேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 

நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். 

பூஜை விவரம் : ஆறு கால பூஜை, (குறிப்பு:- அர்த்தஜாம பூஜை ஞாயிறு இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது) 
                  -  வேலாயுதம் செ 
.  
திருவிழாக்கள் : சித்ராபௌர்ணமி, ஆடித் திருவிழா(12 வாரங்கள்), தைப்பூசம், மாசிமகம், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

கோவில் முகவரி : அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு – 600 077, சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

குல_தெய்வங்கள்தோன்றிய வரலாறு



குல_தெய்வங்கள்
தோன்றிய வரலாறு  
( சாந்திப்பிரியா)

நான்கு முகங்களுடன் பிரும்மா தோன்றியவுடன் அவர் முகத்தில் இருந்து லட்ஷக்கணக்கான உயிரினங்கள் வெளிப்பட்டன. அதைத் தொடர்ந்து பரப்பிரும்மனிடம் இருந்தும் பல தெய்வங்கள் வெளிவந்தன. பிரும்மா நான்கு முகங்களுடன் வெளிவந்தபோது முதல் முகத்தில் இருந்த கண்கள் திறந்து இருக்கையில், அடுத்த மூன்று திசைகளை நோக்கி இருந்த முகங்களின் கண்கள் மூடி இருந்தன4.

நான்கு முக பிரும்மா

முதலில் பிரபஞ்சத்தில் படைத்த உயிரினங்களில் ஏழு ஆன்மாக்களை மஹரிஷிகளாக உருமாற்றிய பிரும்மா, உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் துவக்கி வைத்தார். அதற்கு முன்பாக அவை அனைத்தும் இயங்குவதற்காக அதுவரை பரமாத்மாவின் சக்திக்கதிர்களில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருந்த ஒரு பூமியை வெளிக்கொண்டு வந்தார். பிரும்மா முதலில் உருமாற்றிய ஏழு மஹரிஷிகளைக் குறித்து சற்றே முரண்பட்ட செய்திகள் உள்ளன. ஜைமினியா உபநிஷத் எனும் எனும் சமிஸ்கிருத நூலின்படி (जैमिनीय उपनिषद्-ब्राह्मण) அந்த ஏழு மஹரிஷிகள் அகஸ்தியர், அத்ரி, பாரதிவாஜா, கவுதம், ஜமதக்கினி, வசிஷ்டர், விசுவாமித்திரர் என்பவர்கள் ஆவர். ஆனால் பிரஹதாரண்ய உபநிஷத்தில் ஏழாவது மகரிஷியாக அகஸ்தியருக்கு பதில் பிருஹு முனிவரின் பெயர் காணப்படுகின்றது. அதை போல வேறு பல நூல்களிலும் முரண்பட்ட பெயர்கள் காணப்படுகின்றன.

பரபிரும்மனின் சக்திக்கதிர்களில் இருந்து முதலில் வெளிவந்த தெய்வங்கள் ஆண் மற்றும் பெண் என இருந்ததினால் பிரும்மாவும் தான் படைத்த உயிரினங்களை ஆண் மற்றும் பெண் என்ற பிரிவுகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் படைத்தார். ஆனால் அதன் விவரம் தெரியவில்லை. அவர்கள் இரு வேறுபட்ட தோற்றங்கள் மற்றும் குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்திக் காட்டவே அந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இங்கு ஒரு கருத்தை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. பிரும்மாவுக்கு தெய்வங்களை வெளிப்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் அவருக்கு மட்டுமே ஆகாயத்தின் மேல் பிரும்ம லோகம், தேவலோகம், போன்ற பல தெய்வீக லோகங்களை உருவாக்கி, அங்குள்ள கடவுட்களுக்கு உதவிடும் வகையிலான தேவ கணங்கள் அனைவரையும் படைக்கும் சக்தி தரப்பட்டு இருந்தது. பூலோகத்தில் தெய்வீகத்தைப் பரப்பி, நன்னெறிமுறைகளை மனித குலத்தில் அமல்படுத்த இரண்டாம் கட்ட கடவுட்கள் தேவைப்பட்டன. ஆகவே பிரதான நான்கு தெய்வங்களும் பரப்பிரம்மனால் படைக்கப்பட்ட பின்னர், அடுத்த நிகழ்வாக விநாயகப் பெருமான், தேவேந்திரன், இந்திரன், யமதர்மராஜர் மற்றும் மனித வாழ்வின் நல்ல, தீய நிலைகளை நிர்ணயிக்கும் ராகு, கேது, புதன், சந்திர சூரியர்கள் போன்ற தெய்வங்களும், அக்னி, வாயு சனி , மற்றும் வருண பகவான்கள் போன்றவர்கள் பரபிரும்மனின் சக்திக்கதிர்களில் இருந்து தோற்றுவிக்கப்பட்டனர். துவக்கத்தில் மனிதர்களுக்கு தெய்வங்களின் மீது நம்பிக்கை எற்படக் காரணமாக இருந்த தெய்வங்கள் அக்னி, வாயு மற்றும் வருண பகவான்கள் ஆவார்கள்5.

ஏழு மகரிஷிகளும் பிரும்மாவின் முன் தாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்பது தெரியாமல் நின்றார்கள். அவர்களை தமது நேரடித் தூதர்கள் எனக் கூறிய பிரும்மா, உலகில் படைக்கப்பட்டவை எத்தனை ஜனன மரண நிலைகளைக் கொண்டிருக்கும், ஆண் பெண் தத்துவம், குழந்தைகள், வாழ்வு நெறிமுறைகள், நல்லவை, தீயவை, தெய்வங்கள் வெளிப்பட்ட வரலாறு, தெய்வீகம், இறை வழிபாடு, பிரும்ம நியதி போன்றவை அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தப் பின் அவர்கள் பூலோகம் சென்று அனைவரும் அவற்றை அறிந்திடும் வகையில் போதனைகளை செய்து பரப்புமாறு ஆணையிட்டார்.

ஏழு மகரிஷிகள்

அதேபோல அந்த மஹரிஷிகள் பூமியிலே தமக்கு சிஷ்யர்களை உருவாக்கிக் கொண்டு அவர்கள் மூலம் குரு சிஷ்ய பரம்பரைத் தத்துவம் மற்றும் பிற தத்துவங்களையும் பரப்ப வேண்டும் என்றும், மனிதகுலத்தை நல்வழிப்படுத்தி தூய்மைகளைக் கடைப்பிடிக்க வழிகாட்டி அவர்களைக் காத்தருள தெய்வங்கள் எந்த நேரத்தில் எங்கெங்கு அவதரிக்க உள்ளார்கள் என்பதையும் குலதெய்வம் எனும் கருத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.

அனைத்தும் முடிந்த பின் அந்த முனிவர்கள் அனைவரும் அவரவருக்கு தோற்றுவிக்கப்பட்ட பெண்களை மணந்து கொண்டு பிரும்ம தத்துவங்களை பரப்பிட பூலோகத்துக்கு சென்றார்கள். அங்கு சென்றவர்கள் ஒரே குழுவாக தங்கிடாமல் பல்வேறு இடங்களில் சென்று தங்கி, தமக்கு சில சிஷ்யர்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதே நேரத்தில் மனிதப் பிறப்பு எடுத்து இருந்த ஆத்மாக்களும் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சென்று தங்கும் நிலையில் பிறப்பு எடுக்கப்பட வைக்கப்பட்டார்கள். அந்த மனிதப் பிறவிகள் மனதில் முதலில் பயம் எனும் உணர்வை ஏற்படுத்தினார்கள். அப்போதுதான் பய உணர்வில் அவர்கள் அங்கு அவதரிக்க உள்ள தெய்வங்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடம் சென்று சரணடைய முடியும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு அது.

உலகம் படைக்கப்படப் பின்னர் மனித பிறப்புக்கள் இலக்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் இருந்த மலை அடிவாரங்கள், நதிக்கரை, சுற்றிலும் மரங்கள், செடிகள் நிறைந்த இடங்களில் சென்று வாசிக்கலானார்கள். அவர்கள் இடையே ரிஷி முனிவர்கள், சாது சந்யாசிகள் என்ற உருவங்களில் சில தெய்வங்களும் அங்கங்கே அவதரித்து தங்கினார்கள். மனித பிறவிகள் என்ன மொழியை பேசினார்கள், அவர்களின் உருவங்கள் என்ன, அவர்களின் வாழ்க்கை முறைகள் என்ன, அவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்னென்ன என்பவற்றைக் குறித்த செய்திகள் தெரியவில்லை. பிரபஞ்ச தோற்றத்தின் நிலைகள் குறித்த செய்திகள் அனைத்தையும் ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர்களையும் பண்டிதர்களையும் குழப்ப வைப்பது என்ன என்றால் “உலகம் தோன்றியவுடன் குரங்குகளாக இருந்தவர்களே காலப்போக்கில் மனிதர்களாக மாறினார்கள் என்றும், மெல்ல மெல்லத்தான் நாகரீகம் பரவி வந்தது என்றும் விஞ்ஞானிகள் கூறி வருகையில், முதல் யுகத்திலே அவதரித்ததாக கூறப்படும் சப்தரிஷிகளான அத்ரி, விசுவாமித்திரர், காஷ்யபர், வசிஷ்டர், அங்கீரஸ, அத்ரி மற்றும் பிருகு போன்றவர்களின் மாபெரும் சக்திகளையும், அபாரமான ஞானத்தையும், வாழ்க்கை நெறிமுறைகளையும், போதனைகளையும், சாதனைகளையும் நோக்குகையில் அந்த யுகத்தில் வாழ்ந்திருந்த மனிதப் பிறவிகளுக்கும் அதீத அறிவு இருந்திருக்க வேண்டும் என்றே கருத முடியும். இல்லை என்றால் அவர்களால் அந்த முனிவர்களின் தெய்வீக, ஆன்மீக தத்துவார்த்த போதனைகளை கிரகித்துக் கொண்டு இருக்க முடியாது. இராமாயண, மஹாபாரத நிகழ்வுகள் அந்த யுகத்தில்தான் நடந்தவையா? இராமாயண, மஹாபாரத கால கட்டத்தில் இருந்த மக்கள் எந்தெந்த தெய்வங்களை வணங்கி வந்திருந்தார்கள்?”  இந்த குழப்பத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான விளக்கங்கள் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை. காலம் காலமாக அனைத்துமே நம்பிக்கையின் அடிப்படையில் நம்பப்பட்டு வந்துள்ளது என்பதே உண்மை.

இயற்கை சீற்றங்களில் பயமுறுத்தும் வகையிலான உருவங்கள் தெரிந்தன.

மனிதப் பிறவிகள் வாழாத் துவங்கிய இடங்களில் பிரும்ம நியதிப்படி சில தெய்வங்கள் அவதாரம் எடுத்துத் தங்கினார்கள். 5அந்த தெய்வங்களின் தோற்றம் சிலரது கண்களுக்கு தெரிந்தவாறும், மற்றவர்களது கண்களுக்கு புலைப்படாமலும் காணப்பட்டன. மேலும் அப்படி அவதரித்த தெய்வங்கள், காதுகளைக் கிழிக்கும் வகையிலான இடி மின்னலுடன் கூடிய பேய் மழை, வெள்ளம், சூறாவளி, போன்ற இயற்கை சீற்றங்களை உருவாக்கி அவற்றின் இடையே அவதரித்தார்கள். அவற்றைக் கண்டு அச்சம் கொண்ட மனிதப் பிறவிகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள புதியதாக அங்கு வந்த, சில நேரங்களில் கண்களுக்கு புலப்பட்டு பல நேரங்களில் மறைந்து இருந்த தெய்வங்களிடம் சரண் புகுந்தார்கள், அவர்களைத் தேடி அலைந்தார்கள். அங்கங்கே குழுக்களாக தங்கி இருந்த மனிதப் பிறவிகள், புதிதாக அவதரித்த தெய்வங்களை தமது பாதுகாவலர்களாக கருதத் துவங்கினார்கள். ஒவ்வொரு பிரிவை சேர்ந்த மனிதக் குழுவினரும் அவரவர்கள் பகுதியில் தோன்றிய அவதாரங்களை ஏற்றுக் கொள்ளாத துவங்க இப்படியான சூழ்நிலையில் இறை வழிபாட்டு முறையும் , குலதெய்வ வழிபாடும் துவங்கின.

பூமியிலே தங்கி இருந்த மகரிஷிகளும் தமது சீடர்கள் மூலம் அவ்வப்போது ஏற்பட்ட இயற்கை சீற்றங்களை அமானுஷ்ய ஆவிகளாக காட்டி, அவை மனிதப் பிறவிகளைவிட சக்தி மிக்க ஆத்மாக்களால் இயக்கப்படுகின்றன என்று கூறி, புதியதாக அவதரித்த தெய்வங்களுடன் அவற்றை சம்மந்தப்படுத்தி சில கதைகளைக் கூறி அவர்களை வழிப்பட்டால் அந்த சீற்றங்களில் இருந்து தப்ப முடியும் என்ற பிரமையை ஏற்படுத்தி வந்தார்கள். ஆனால் இவை எதற்கும் ஆதாரபூர்வமான சான்றுகள் இல்லை என்றாலும், வாய்மொழிக் கதைகளாக பல்லாயிரம் ஆண்டுகளாக பரவி வந்துள்ளன.

யுகம் எனப்படும் முதல் நிலைப் படைப்பில் பல லட்ஷக்கணக்கான உயிரினங்கள் படைக்கப்பட்டு ஆட்டி வைக்கப்பட்ட பின் 1,728,000 மனித ஆண்டுகள் கழிந்து விடும். அந்த ஆத்மாக்களுக்கு இன்னும் நான்கு நிலை மரண ஜனன நியதி உள்ளதே என்பதினால் அவற்றை எங்கு அனுப்புவது என யோஜனை செய்த பிரும்மா உடனடியாக அந்த ஆத்மாக்கள் செல்ல நான்கு யுக தளங்களை உருவாக்க முடிவு செய்தார். அப்போதுதான் முதல் யுகத்தில் இருந்து  நான்கு யுகத்திற்கும் அந்த ஆத்மாக்கள் அவற்றின் விதிப்படி செல்ல முடியும் என்பதையும் உணர்ந்தார்.

பிரும்மாவின் நான்கு முகங்களில் இருந்தும், நான்கு திசைகளிலும் படைத்தவை வெளிவந்தன

4இப்படியாக நான்கு யுக தளத்தை உருவாக்கத் துவங்கியதும் தமது முதல் முகத்தின் கண்களை மூடிக்கொண்டு இரண்டாம் முகத்தின் கண்களைத் திறந்து பார்க்க அதில் இருந்து இரண்டாம் யுக தளம் வெளிப்பட்டது. முதல் யுகத்தின் முடிவில் அந்த யுகத்தின் ஆத்மாக்கள் இங்கு வந்தவுடன் என்னென்ன நிகழ்வுகள் அதில் நடைபெற வேண்டும் என்று அந்த தளத்தில் சக்தியூட்டிய பின் அதை கண்களுக்குப் புலப்படாமல் மறைத்து வைத்தார். இப்படியாக அவர் முதல் யுகத்தைத் தொடர்ந்து பிற மூன்று பக்கங்களிலும் மேலும் மூன்று யுக தளங்களை படைத்தவுடன் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றி முந்தைய யுகத்தின் ஆத்மாக்களை சுவீகரித்துக் கொள்ளும் என்ற நிலையையும் உருவாக்கி, அவற்றையும் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருக்க வைத்தார்.

முதல் யுகத்தின் முடிவில் தோன்ற இருந்த ஒவ்வொரு யுகத்துக்கும் தனித்தனியான காலகட்டம் வரையறுக்கப்பட்டது. அந்தந்த யுகங்களுக்கு ஏற்ப சில தன்மைகளும் சக்தியூட்டப்பட்டு அவற்றுக்கேற்ப அவற்றில் தோன்ற இருந்த மனிதர்கள் தூய எண்ண அலைகளில் இருந்து மெல்ல மெல்ல தீய எண்ணங்களைக் கொண்டவர்களாக மாறும் வகையில் அமைத்தார்.

சத்திய நெறிகளை பிரதானமாகக் கொண்ட முதல் யுகமான சத்ய யுக முடிவைத் தொடர்ந்து வெளிவர இருந்த அடுத்தடுத்த யுகங்களில் தூய்மையான எண்ணங்களைக் கொண்ட மனிதப் பிறவிகளின் தன்மைகள் மெல்ல மெல்ல மறைத்து தீய தன்மைகளைக் கொண்டவையாக மாறிக்கொண்டு வரும் என்பதினால் அந்த மனிதப் பிறவிகளை ஒழுங்குபடுத்தி வைக்க அதிக தெய்வங்களின் தோற்றம் தேவை என்பதை உணர்ந்தார்.

2ஒவ்வொரு புதிய யுக தோற்றத்திலும் குல தெய்வங்கள் உட்பட பல தெய்வ அவதாரங்கள் வெளிப்பட்டு வந்துள்ளன என்பது தெளிவாக தெரிகின்றது. கல்கி யுகத்தில்தான் மிக அதிகமான தெய்வங்கள் தோன்றி உள்ளதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். வேத காலம் முதல் இராமாயண, மஹாபாரத நிகழ்வு நடைபெற்ற காலங்களில் தோன்றிய காலங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் இந்த உண்மை விளங்கும்.

ஒவ்வொரு புதிய யுக தோற்றத்திலும் அதிக எண்ணிக்கையிலான குல தெய்வங்கள் உட்பட பல தெய்வ அவதாரங்கள்  வெளிப்பதின் அவசியம் என்ன என்பதற்கு காரணம் கீழுள்ளவையாக இருக்கலாம் :

முதல் யுகத்தில் சத்தியத்தைக் கடைப்பிடித்து தூய்மையுடன் இருந்த பிறவிகள் அடுத்தடுத்த யுகங்களில் அந்த தூய தன்மைகளை இழந்து தீய தன்மைகளைக் கொண்டவர்களாக மாறி வந்தார்கள். அவர்களை ஒழுங்கீனப்படுத்த அதிக தெய்வங்கள் தேவைப்பட்டன.
முதல் யுகத்தில் பிரும்மாவினால் படைக்கப்பட்ட அனைத்து ஆத்மாக்களுமே பிறவி எடுக்கவில்லை. அப்போது பிறப்பு இருந்த ஜனத்தொகை மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. பிறப்பு எடுக்காமல் இருந்த மற்றவை விண்வெளியில் மிதந்தபடியே இருந்தன. அடுத்தடுத்த யுகங்களில் அவை அனைத்தும் பிறவிகளை எடுக்கத் துவங்க, பிறவிகளின் எண்ணிக்கை இரு மடங்கு, மூன்று மடங்கு என பெருகிக் கொண்டே சென்ற நிலையில், தூய்மை அழித்தவாறு இருக்க, அவற்றை ஒழுங்கீனப்படுத்த அதிக தெய்வங்கள் தேவைப்பட்டன.
முதல் யுகத்தில் இருந்த பிறவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவை வாழ்ந்த இடங்களும் விரிவடைந்து கொண்டே செல்ல, அத்தனை இடங்களிலும் இருந்தவர்களை பாதுகாத்து, வழிநடத்த அதிக தெய்வப் பிறவிகள் தேவைப்பட்டன.
புராண இதிகாசங்களை படித்தோம் எனில் வேத கால துவக்கத்தில் குல தெய்வ வழிபாடு துவங்கி உள்ளது என்பதும், அப்போது ஜாதி பேதம் இன்றி அனைவருமே ஒரே தெய்வத்தை வணங்கி வந்துள்ளார்கள் என்பதும் தெரிகின்றது. இராமாயண மஹாபாரத காலங்களிலும் ஜாதி பேதம் இருந்திடவில்லை, ஆனால் படைப்பு ரகசியத்தின்படி பிரும்மாவின் மூலமே நான்கு தொழில்களை செய்யும் நான்கு பிரிவு மனிதப் பிறவிகள் தோன்றியதாகவும், அதுவே பிற்காலகட்டங்களில் பல பிரிவுகளைக் கொண்ட ஜாதிகளாக படர்ந்து விரிந்துள்ளன என்றும் அதனாலும் அந்தந்த பிரிவினர் வழிபடும் வகையில் அவரவர் பிரிவுக்கு ஏற்ப அதிக அவதாரங்கள் வெளிவந்துள்ளன. இதுவும் அதிக எண்ணிக்கையிலான தெய்வங்கள் வெளிப்பாடாக காரணமாக இருந்துள்ளன. 
வேத காலம் என்பது முதல் யுகமா இல்லை, எந்த யுகத்தில் அது தோன்றியது என்பது தெரியவில்லை. ரிக் வேத கால மனிதர்கள் இயற்கையை உருவமற்ற தெய்வங்களாக வழிபட்டு வந்துள்ளார்கள். இயற்கையின் சீற்றத்தைத் தணிக்க அங்கங்கே இருந்த மக்கள் ஒன்று கூடி தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டு வெற்று இடங்களில் நின்று பிரார்த்தனை செய்துள்ளார்களாம். அந்த இடங்களே பின்னர் ஆலயம் எனும் வழிபாட்டுத் தலங்கள் என ஆயின. ரிக் வேத காலத்தில் சிவன், பார்வதி, விஷ்ணு, கிருஷ்ணர் போன்றவர்கள் அந்தந்த உருவங்களில் வழிபடப்பட்டதாக தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Thursday, June 11, 2026

சேரன்மகாதேவி திருநெல்வேலி பக்தவத்சலப் பெருமாள்

சேரன்மகாதேவியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பக்தர்களை காக்கும் பக்தவச்சல பெருமாள் திருக்கோயில், சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களால் 10 முதல் 12-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமாகும்.

திருநெல்வேலியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

தாமிரபரணி ஆற்றங்கரையில், பிற்கால பாண்டியர்களால், 1012-1044 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் கட்டப்பட்டது.

#கோயில்_குறிப்புகள்:

*மூலவர்: மூலவரான பக்தவத்சலப் பெருமாள் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில்  காட்சி தருகிறார்.

*தாயார் :  பெருமாள் திருமார்பில் ஶ்ரீ தேவி மற்றும் தனியாக பூமி நாச்சியார் 

*தீர்த்தம்: தாமிரபரணி 

*ஊர்: சேரன்மகாதேவி 

*மாவட்டம்: திருநெல்வேலி 

*புராணங்கள்:

பக்தர்கள் தங்கள் பாவங்களைக் கழுவுவதற்காக சப்த நதிகளில் நீராடுவதாக நம்பப்படுகிறது. பதிலுக்கு, பக்தர்களால் தேங்கியிருக்கும் பாவங்களிலிருந்து விடுபட்டுத் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள, சப்த நதிகள் தாமிரபரணிக்கு வருகின்றன. 

பித்ரு தோஷத்தைப் போக்குவதற்காக, பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி, பக்தவத்சல பெருமாளை வழிபடுகின்றனர். 

இந்தக் கோவிலின் சில முக்கிய அம்சங்கள்…

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இதன் நுழைவாயில் மேற்குப் பக்கத்தில் உள்ளது. முக மண்டபத்தின் முன்புறம்/கீழே பலிபீடமும், நின்ற கோலத்திலுமுள்ள கருடனும் உள்ளனர். மூலவர் பக்தவத்சல பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இல்லாமல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மூலவர் சுமார் 7 அடி உயரமும் 4 கைகளும் கொண்டவர். மேல் கைகள் சங்கையும் சக்கரத்தையும் தாங்கியுள்ளன, கீழ் கைகள் அபய நிலையிலும் கடிஹஸ்த நிலையிலும் உள்ளன. மூலவருக்கு முன்பாக உற்சவர்கள் உள்ளனர்.

பிரஹாரத்தில் பூதேவி, நாகர்கள் (வெளிப்புறம்), யோக நரசிம்மர் மற்றும் கருடன் (நின்ற கோலத்தில்). 

*பாதுகாப்பு: 

கி.பி 1921 முதல் இக்கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) நேரடிப் பராமரிப்பில் ஒரு பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னமாக விளங்கி வருகிறது.

*கல்வெட்டுகள்: 

இக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழன் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின்    காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது.

பக்தர்களால் அதிகம் அறியப்படாத இக்கோவில் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை திறனுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. கோவில் சுற்றுச்சுவரில் அமைந்துள்ள தூண்களும், சிற்பங்களும், கலை நயம் மிக்க வடிவமைப்புகளும் நம்மை பிரமிக்க வைக்கும். சிம்ம முகம் கொண்ட தூண்கள், நரசிம்மரின்  திருவுருவம், அந்த காலத்து நாகரிகத்தின் படி ஆடை, அணிகலன்கள் அணிந்த பெண்மணி முதலில் சிற்பங்களின் அழகு பார்ப்பவர்களின் எண்ணத்தை விட்டு அகலாது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, கருவறை அபிஷேக நீர் வெளியேறும் கோமுகத்தின் வடிவமைப்பு நம் முன்னோர்களின் ஈடு இணை இல்லாத கற்பனைத் திறனை வெளி காட்டுகின்றது.

கோமுகமானது ஒரு சிறிய சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டதாக இருக்கின்றது. இந்த சிங்கமானது கருவறை சுவரை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சிங்கத்தின் வாயிலிருந்து வெளியே வருகின்றது. கோமுகத்தின், மூக்கின் வெளிப்புற முனையின்  கீழே ஒன்றன் பின் ஒன்றாக இரட்டை தாமரை மலர்கள் உள்ளன. இந்த தாமரை மலர்கள் சிறிய சிங்கத்தின் வாயிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. சிறிய சிங்கத்தின் அலங்காரங்கள், தலைக்கவசம், பிடரி மற்றும் கூர்மையான பற்கள் கொண்ட சிறிய சிங்கத்தின் நான்கு கால்கள் அனைத்தும் நுணுக்கமான வேலைப்பாட்டுடனும், மிக்க அழகுடனும் செய்யப்பட்டுள்ளன.

*ஆலய அமைப்பு:

கருவறையில் நம் பெருமாள், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். கருவறையில், தேவியர் இல்லாமல் நம் பெருமாள் தனித்து நின்றிருப்பது போல, ஆலய பிரகாரத்தில் ஸ்ரீ பூமாதேவி மட்டும் திருக்காட்சியளிக்கிறார். ஏனைய பரிவாற மூர்த்திகளும் இடம்பெற்றுள்ளனர்.

அழகிய பெரிய திருமதிலும், திருச்சுற்று மாளிகையும் கொண்டுள்ளது. ஆற்றினை ஒட்டி அழகிய தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இம்மண்டபம் இறைவனின் தீர்த்தவாரியின் போது தங்குமிடமாக இருக்கலாம். இக்கோயில் கருவறை விமானம் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், மேற்பகுதி சுதையினாலும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக மண்டபத்திலும் மகாமண்டபத்திலும் உள்ள தூண்களில் பலவித புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் வைணவ சமயத்தைச் சார்ந்தவையாக இருப்பினும் ஒன்றிரண்டு சிவபெருமானைக் குறித்தவையாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சுற்று மாளிகை தூண்களோடு அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை விமானத்தின் கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பாண்டியர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கருவறை விமானம் விளங்குகிறது. விமானம் எட்டுப்பட்டையுடன் கூடிய தமிழர் பாணியில் அமைந்துள்ளது. மண்டபங்கள் விசயநகரர் காலத்தில் எடுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இம்மண்டபங்களில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் பலவற்றை நோக்கும் போது அவை பல விசயநகரக் கோயில் மண்டபங்களில் காணப்படுவது போன்றே உள்ளன.

*கல்வெட்டுச் சான்றுகள்:

காட்சிப் பலகையின்படி, இக்கோயில் இடைக்கால சோழர் அல்லது பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். பின்னர் விஜயநகர நாயக்கர் காலத்தில் இக்கோயில் புனரமைக்கப்பட்டது. சோழர் கால கல்வெட்டுகளின்படி, இந்த இடம் செரவன் மாதேவி சதுர்வேதிமங்கலம் என்றும், முள்ளிநாட்டில் உள்ள பிரம்மதேய கிராமம் என்றும் , நிகரிலி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படும் முள்ளிநாட்டு பிரம்மதேயா என்றும் அழைக்கப்பட்டது  . மகா விஷ்ணு ஸ்ரீ பக்தப்ரியத்து நின்றருளிய பரமஸ்வாமி என்று அழைக்கப்பட்டார்.

பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபனின் இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (SII, தொகுதி –XIV எண் 199, AR எண் 539 , 1911) பக்தப்ரியத்தில் தங்கியிருந்ததில் மகிழ்ந்த எம்பெருமான் கோவிலில் விளக்கேற்றுவதற்காக, முல்லைநாட்டைச் சேர்ந்த ஸ்ரீவல்லபன் ராமன் ஆடுகளைப் பரிசாக வழங்கியதாகப் பதிவு செய்துள்ளது.

ஸ்ரீவல்லப தேவனின் 6 -வது ஆட்சியாண்டைச் சேர்ந்ததும், தொல்லெழுத்தியல் ரீதியாக கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் செழித்தோங்கிய அதே பெயருடைய மன்னருடையது எனவும் கூறலாம் . கல்வெட்டின் (SII தொகுதி XIV - எண். 212, A R. எண். 536, 1911) நடுப்பகுதி சேதமடைந்துள்ளது. அதில் ஆறு ஆனை அச்சுகள் தானமாக வழங்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் தானம் அளித்தவரின் பெயர் தெரியவில்லை.

Ja ț ā varman ஸ்ரீவல்லபாவின் 19+1 வது ஆட்சி ஆண்டு (இந்த அடையாளத்தின் குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும்) கல்வெட்டு (SII- தொகுதி XIV எண். 244, AR எண். 1911 இன் AR எண். 532), ஒரு குறிப்பிட்ட ஆட்கொண்டாவில்லி, அத்தியுண்டார் மற்றும் அத்தியுண்டார் ஆகியோருக்குப் பணம் வழங்கியதைப் பதிவு செய்கிறது. முள்ளி நாட்டிலுள்ள பிரம்மதேயரான சேரவன் மாதேவி சதுர்வேதிமங்கலத்தில் உள்ள ஸ்ரீபக்தப்பிரியத்து நின்றருளிய பரமஸ்வாமின் கோவிலில் தீபம் ஏற்றுவது.

இக்கோயில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது.

குறிப்பு: 
1. தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி பதினான்காம்.

*ஆலயச் சிறப்பு:

வியாசரால் குறிப்பிடப்பட்ட சிறப்புமிக்க 12-கோயில்களில், ஒன்றாகும். உள்ளூர் மக்களை தவிர வெளியூர் மக்களால் அதிகம் அறியப்படாத இவ்வாலயத்தில் வடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் அற்புதமானவை. கலைநயம் மிக்கவை.

*பிரார்த்தனை மற்றும் பரிகாரம்:

பிரகார மண்டபத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமாகும். அசுப யோகத்தில் பிறந்து பல்வேறு குறைபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள் ஆலயத்திற்கு வந்து நரசிம்மரை வேண்டி வழிபடுகின்றனர். குறைகள் தீர்ந்த பின்பு மீண்டும் வந்து பரிகார பூஜை செய்கிறார்கள்.

*ஆன்மாக்களுக்கு அமைதி அளிக்கும் பக்தவத்சலப் பெருமாள்:

ஜோதிடத்தில் `பஞ்சாங்கம்' என்பது மிகவும் உயிரோட்டமான சொல். நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான். தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு.

இந்த யோகங்களைத் தவிர இன்னும் சில யோகமும் உண்டு. 27 நட்சத்திரங்களை போல, 27 யோகங்களும் உள்ளன. அவற்றில் பிரீதி, ஆயுஸ்மன், சவுபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவன், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிராம்யம், ஐந்திரம் ஆகிய 17-ம் சுப யோகங்கள் ஆகும். மீதமுள்ள விஷ் கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், விகாதம், துருவம், வியதீபாதம், பரிகம், வைதிருதி ஆகிய 10-ம் அசுப யோகங்கள் ஆகும்.

சுப யோகங்களில் பிறந்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.

அண்ணன், தங்கை, அக்கா, அத்தை என ஒரு கூட்டமே திருமணமாகாமல், சரியான தொழில், உத்தியோகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். ஒரு சிலர் குழந்தை இல்லாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் தொடர் மரணங்கள், அகால மரணங்கள் போன்ற துன்பங்கள் நிகழலாம். இவற்றிற்கெல்லாம் இந்த அசுப யோகங்கள் காரணமாக அமையலாம்.

அதேபோல் சில குடும்பங்களில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சொர்க்கமா?, நரகமா?, மறுபிறவியா?, தண்டனையா? என்று, எதுவுமே இல்லாமல் ஒரு உறுதியற்ற தன்மையில் அல்லாடிக் கொண்டிருக்கும். அதற்கும் அசுப யோகத்துடன் அவரின் குடும்பத்தில் பிறந்தவர்களின் ஜாதகமே காரணம்.

இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலமாக அமைந்ததுதான், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்துள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சேரன்மகாதேவி. இங்கிருந்து வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது, பக்தவத்சலப் பெருமாள் ஆலயம்..

அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். தாமிரபரணியை ஒட்டினாற்போல் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது..

கிழக்கு நோக்கி அபயக்கரம் நீட்டி அருளும் பக்தவத்சலப் பெருமாள், `நான் இருக்கிறேன்.. இனி உன் துன்பம் நீங்கி விடும்" என்பதுபோல் முத்திரைக் காட்டி கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு வெளியே வலதுபுறத்தில் லட்சுமிதேவியுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

அசுப யோகங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள் தன் துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, கோவிலைத் தொட்டுச் செல்லும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட வேண்டும். இதுபற்றியும், இந்த நதி பற்றியும் வியாசரால் எழுதப்பட்டுள்ளது. அது தாமிரபரணி மகாத்மீயத்தில் காணப்படுகிறது.

10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.

மேலும் மேற்கண்ட தோஷம் உள்ளவர்கள், இந்த நதியில் நீராடி, வியாசர், மார்க்கண்டேயர், அகத்தியர், சப்த நதிகள், பக்தவத்சலப் பெருமாள் ஆகியோரை தரிசித்து, அன்னதானம் செய்தால் `நவகிரிச்சினி பலன்' (ஒரு லட்சம் காயத்ரி உச்சரித்த பலன்) கிடைப்பதுடன், தோஷங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

சில ஆலயங்களுக்கு நாம் என்னதான் முயற்சித்தாலும், அந்த இறைவனின் கருணைப் பார்வை நம்மீது படவில்லை என்றால், அங்கு செல்ல முடியாத நிலையே ஏற்படும். இருப்பினும் அந்த இறைவனை நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டால், அவரை வழிபடுவதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தித் தருவார்.

*உற்சவங்கள் மற்றும் திருவிழாக்கள்:

திருமாலுக்கு உகந்த முக்கியமான விழாக்கள் அனைத்தும் கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில் பெருந்திருவிழாவாக நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவம் விழா வெகு விசேஷமாகும். பஞ்சாங்கம்’ என்பதிலுள்ள நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான்.

தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு. அத்தகைய யோகங்களில் சுபயோகம் அசுப யோகம் என்று இரண்டு வகை உண்டு அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.

இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலம் சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் , தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது.

அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது.

10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.

*அமைவிடம்:

 நெல் வயல்களுக்கு நடுவே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

இக்கோயில் சேரன்மகாதேவி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து 82 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மிக அருகிலுள்ள ரயில் நிலையம் சேரன்மகாதேவி ஆகும்.

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Sunday, June 7, 2026

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் (சடைமுடிநாதர்) உலகப் புகழ்பெற்ற வெள்ளை விநாயகர்.

கும்பகோணம் அருகே சுவாமிமலைக்கு மிக அருகில் அமைந்துள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் (சடைமுடிநாதர்) திருக்கோவில் வளாகத்தில் தான் இந்த உலகப் புகழ்பெற்ற வெள்ளை விநாயகர் (ஸ்வேதா விநாயகர்) சன்னதி அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலமாக இருந்தாலும், இந்தத் தலம் "வெள்ளை பிள்ளையார் கோவில்" என்றே மக்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.
இந்தக் கோவிலின் ஆன்மீக வரலாறு, தனித்துவமான சிறப்புகள் மற்றும் தரிசன பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இதோ:
1. ஆலய வரலாறு (தல புராணம்)
பாற்கடல் கடைந்த வரலாறு: தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் முதற்கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டு, காரியம் தடைபட்டது.

நுரை விநாயகர்: தங்களின் தவறை உணர்ந்த தேவேந்திரன் (இந்திரன்), உடனடியாக வழிபட வேறு சிலைகள் இல்லாததால், பாற்கடலில் பொங்கி வந்த கடல் நுரையைச் சேர்த்து ஒரு விநாயகர் வடிவத்தை உருவாக்கி பூஜித்தார். விநாயகர் அருள் செய்ததால் தடை நீங்கி அமிர்தம் கிடைத்தது.

இங்கேயே தங்கிய இறைவன்: பூஜைக்குப் பிறகு இந்திரன் அந்தப் பிள்ளையார் சிலையைத் தன்னுடன் எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால், அது நகராமல் இத்தலத்திலேயே நிலைபெற்றுவிட்டது. எனவே, இவருக்கு ஸ்வேதா விநாயகர் (ஸ்வேதா என்றால் வெள்ளை) என்றும், நுரை பிள்ளையார் என்றும் பெயர்கள் வந்தன.

திருவலஞ்சுழி பெயர் காரணம்: காவேரி நதி பூமிக்கு அடியில் சென்று மறைந்தபோது, 'ஏரண்ட முனிவர்' என்பவர் காவேரியை மீண்டும் பூமிக்குக் கொண்டு வர தவம் செய்தார். அப்போது காவேரி நதி இத்தலத்து ஈசனை வலப்பக்கமாக சுழித்து (வளையமிட்டு) வழிபட ஓடியதால் இப்பகுதிக்கு "திருவலஞ்சுழி" என்று பெயர் வந்தது.

2. கோவிலின் ஆன்மீக மற்றும் கலைச் சிறப்புகள்
அபிஷேகம் இல்லாத மூர்த்தி: இத்தலத்து விநாயகர் கடல் நுரையால் ஆனவர் என்பதால், இவருக்கு எந்தவித திரவ அபிஷேகமும் (நீர், பால், சந்தனம் போன்றவை) செய்யப்படுவதில்லை. சுவாமிக்கு வஸ்திரம் (ஆடை) கூட சார்த்துவதில்லை.

பச்சைக்கற்பூரப் பொடி: இந்த விநாயகரின் திருமேனி கரையாமல் காக்க, தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள் கொண்டு மிகக் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது. சுவாமிக்கு ஒரே ஒரு பரிகாரமாக பச்சைக்கற்பூரப் பொடி மட்டுமே லேசாகத் தூவப்படுகிறது.

வலம்புரித் தும்பிக்கை: பொதுவாக விநாயகரின் தும்பிக்கை இடப்பக்கம் சுழித்திருக்கும். ஆனால், இங்குள்ள வெள்ளை விநாயகரின் தும்பிக்கை வலப்பக்கமாக சுழித்து (வலம்புரி விநாயகராக) அருள்பாலிக்கிறார்.

மன்னிப்பு மண்டபம்: ஒருமுறை மன்னர் ஒருவர் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வற்புறுத்தியபோது, அசரீரியாக ஒலித்த இறைவன், "நான் நுரையானவன், அபிஷேகம் செய்தால் கரைந்துவிடுவேன்" என்றார். தன் தவறை உணர்ந்த மன்னன், அதற்குப் பிராயச்சித்தமாக அவசர அவசரமாகக் கரடுமுரடான கற்களைக் கொண்டு கட்டிய மண்டபமே "மன்னிப்பு மண்டபம்". இன்றும் மக்கள் தங்கள் தவறுகளுக்கு இங்கு மன்னிப்பு வேண்டுகிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற கருங்கல் பலகணி (கல் ஜன்னல்)
வெள்ளை விநாயகர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள கருங்கல் பலகணி (Lattice Window) சோழர் காலச் சிற்பக் கலையின் உச்சமாகும். 9 அடி உயரமும் 7 அடி அகலமும் கொண்ட இந்த ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஜன்னலில் 111 துளைகளும், நுட்பமான வேலைப்பாடுகளும் உள்ளன.

💡 பழங்கால சிற்பிகளின் நிபந்தனை: அக்காலத்தில் புதிய கோவில்கள் கட்ட ஒப்பந்தம் போடும் சிற்பிகள், "திருவலஞ்சுழி பலகணி போலவும், ஆவுடையார்கோவில் கொடுங்கை போலவும் எங்களால் செதுக்க முடியாது, மற்றபடி எதை வேண்டுமானாலும் செதுக்கித் தருவோம்" என்று முன்கூட்டியே நிபந்தனை விதிப்பார்களாம். அந்த அளவுக்கு இது மனித கரங்களால் செய்ய முடியாத அற்புதம்!

3. தரிசன பலன்கள் (வழிபாட்டு மகிமை)
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகரை மனமுருகி வேண்டுவோருக்குக் கிடைக்கும்

 ஆன்மீகப் பலன்கள்:
தடைபட்ட காரியங்கள் தடையின்றி முடியும்: பாற்கடல் கடைந்தபோது தேவர்களின் தடையை நீக்கியவர் என்பதால், உங்களின் தொழில், திருமணம், வேலைவாய்ப்பு என எந்தவொரு காரியத்தில் இருக்கும் முடக்கமும், தடைகளும் இவரை வழிபட உடனே நீங்கும்.

புதிய முயற்சிகள் வெற்றி பெறும்: புதிய தொழில் தொடங்குபவர்கள் அல்லது புதிய படிப்பைத் தொடங்குபவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் அமோக வெற்றி கிட்டும்.
சதுர்த்தி வழிபாட்டின் மகிமை: ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி அன்று இவரைத் தரிசிப்பது, வருடம் முழுதும் விநாயகரை வழிபட்ட பலனைத் தரும் என்பது ஐதீகம்.
பாவங்கள் நீங்குதல்: இங்கிருக்கும் மன்னிப்பு மண்டபத்தில் அமர்ந்து நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்கு மனதார மன்னிப்பு வேண்டினால், நம் பாவ வினைகள் நீங்கி மனம் அமைதி பெறும்.

கோவில் அமைவிடம் & நேரம்:
இடம்: கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ தொலைவிலும், சுவாமிமலையில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.
நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

நெடுங்களநாதர் கோயில் திருநெடுங்குளம் திருச்சி


*நெடுங்களநாதர் கோயில்!*
*மூலவர்:* திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்.
*அம்மன்:* மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
ஸ்தல விருட்சம்: வில்வம்,. கஸ்தூரி,அரளி,
தீர்த்தம்: அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
புராண பெயர் : திருநெடுங்களம்
ஊர்             :     திருநெடுங்குளம்
மாவட்டம்       :     திருச்சி

*ஸ்தல வரலாறு:*

 இனிய சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். 

திருநெடுங்களம் என்றால் சமவெளியில் அமைந்த பெரிய ஊர்’ என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

அந்தக் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் பசுமை படர்ந்த கழனிகளாய் இருந்தன. அதனாலேயே இது திருநெடுங்களம் என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு அதுவே மருவிப்போய் திருநெடுங்குளமானது. திருநெடுங்களம் குறித்து ஒரு ஐதீகம் உண்டு. 

முந்தைய காலத்தில் திருநெடுங்களம், வாழவந்தார் கோட்டை ஜமீனின் கட்டுக்குள் இருந்தது. ஜமீனுக்கு சொந்தமான காராம் பசு மாடுகள் திருநெடுங்குளம் காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு வருவதுண்டு. அதில் ஒரு பசு தினமும் மாலையில் வீடு திரும்பும் போது பால் வற்றிப்போன மடியோடு திரும்பியது. இந்த மாயத்தை அறிவதற்காக ஜமீனின் ஆட்கள் ஒரு நாள் அந்த பசுவை மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அது ஒரு புதருக்கு அருகில் போய் நின்று தானாகவே பாலை அந்தப் புதரில் சுரந்தது. ஆச்சரியப்பட்ட ஜமீன் ஆட்கள், பசு பாலைச் சுரந்த இடத்தில் மண்வெட்டி கொண்டு வெட்டினார்கள். பூமிக்குள் சுயம்புவாய் முளைத்திருந்த சிவலிங்கம் மண்வெட்டியால் வெட்டுப்பட. பூமிக்குள்ளிருந்து பால் பீறிட, விவரம் தெரிந்து ஓடிவந்த ஜமீன்தார், அந்த இடத்திலேயே சிவனுக்குச் சிறியதாய் ஒரு ஆலயம் எழுப்பினார் என்று கூறப்படுகிறது.

சிவபெருமான் மீது காதல் கொண்ட பார்வதி தேவி, அவரைக் கரம்பிடிப்பதற்காக இந்த இடத்தில் கடுந்தவம் புரிந்தார். தவத்தை மெச்சிக் காட்சிகொடுத்த சிவன், பார்வதி தேவியைக் கைப்பிடித்த இடமும் இதுதான் என்கிறது புராணம். உமையொரு பாகனாகிய ஈசன் கருவறைக்குள் தேவிக்கு தனது இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்து வலது பக்கமாய் சற்றுத்தள்ளி அமர்ந்திருக்கிறார். ஐதீகப்படி இங்கே தேவியும், சிவனுக்குப் பக்கத்தில் ஒப்பில்லாநாயகி அரூபமாய் அமர்ந்திருக்கிறார். அதனால்தான் இருவருக்குமாய் சேர்த்து இரண்டு விமானங்கள் கட்டப்பட்டுள்ளன.

*கோயில் சிறப்புகள்:*

கோயில் கருவறைக்கு மேலே பெரும்பாலும் ஒரு விமானம் இருப்பதே வழக்கம். ஆனால், திருநெடுங்களநாதரின் கருவறைக்கு தட்சண விமானம், கைலாய விமானம் என இரண்டு விமானங்கள். காசிக்கு அடுத்தபடியாக இங்குதான் இந்தச் சிறப்பு என்கிறார்கள்.

உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் சற்றுத் தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கிக் கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காகத் தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும், சிவன்-சக்தி இருவருமே இருப்பதாக ஐதீகம்.

கோயில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாக ஐதீகம். இதனால், மூலஸ்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும்தான் இப்படி உள்ளது.

சிவனை நோக்கி அன்னை பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன், அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

ஒருமுறை அகத்தியரே இங்கு வந்து வழிபட்டதாகவும் நம்பிக்கை உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் உள்ள அகத்தியர் சந்நிதிக்கு எதிரே ஒரு கிணறு உள்ளது. இதை அகத்திய தீர்த்தம் என்கிறார்கள். சிவனுக்குப் பூஜை செய்வதற்காக அகத்தியர் தனது கட்டை விரலை பூமியில் அழுத்தியதால் வந்ததாம் இந்தக் கிணறு. இதில், கையால் எட்டித் தொட்டுவிடும் தூரத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந் திருக்கும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது.

இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது – யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.

கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும் உள்ளது.

வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் ‘நித்திய சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

நெடுங்களம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் “இடர் களையும் திருப்பதிகம்” என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் இடர்களையாய் என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தை படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “துன்று கயல் கண்ணார் நெடும் களத்தைக் கட்டு அழித்த மெய்த்தவர் சூழ் தண்ணார் நெடுங்கள மெய்த் தாரகமே” என்று போற்றி உள்ளார்.

இத்திருத்தலத்தில் சிற்ப உரல் ஒன்று உள்ளது. சிவபெருமான் தவத்தில் இருந்த போது இந்த உரலில் விரலி மஞ்சள் இடித்து அதைக் கொண்டு உடம்பில் பூசிக் குளித்து சிவபெருமானுக்கு பூஜை செய்தாராம் பார்வதி தேவி.

*திருவிழா:*

பிரதோஷ வழிபாடு இங்கு சிறப்பு. நடராஜருக்கு ஆறு கால பூஜை நடக்கிறது. நால்வருக்கும் அவரவர்க்குரிய திருநட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. ஆடி வெள்ளியில் சிறப்பு வழிபாடும், சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது.

*நடை திறக்கும் நேரம்:*

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

*முகவரி:*

அருள்மிகு திருநெடுங்களநாதர், நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருநெடுங்களம்-620015
திருச்சி மாவட்டம்.
போன்: +91- 431-252 0126.,2510241 9965045666

*அமைவிடம்:*

திருச்சி – தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி என்ற ஊர் வரை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. துவாக்குடியில் இருந்து ஆட்டோ மூலமும் இத்தலத்துக்குச் சென்று வரலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

மலையடிப்பட்டி சிவபெருமானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் குகைக் கோயில்கள்.



புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட மலையடிப்பட்டி இயற்கை எழில் நிறைந்ததொரு கிராமம். இங்குள்ள பெரிய பாறையில், சிவன், அனந்தபத்மநாப சுவாமி என இரண்டு கோயில்கள் ஒன்றாக இணைந்து இரு குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கின்றன.
நவக்கிரகங்களில் சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது.

திருச்சியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயில், நந்திவர்மன் எனும் பல்லவ மன்னரால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தல வரலாறு கூறுகிறது.

கி.பி. 730-இல் அவர் இங்குள்ள மலையை குடைந்து வாகீஸ்வரர் என்றழைக்கப்படும் கோயில் எழுப்பினார் என்றும் விஷ்ணு கோயிலானது காலத்தால் பிந்தியது என்றும் தெரிகிறது. இங்கு நரசிம்மமூர்த்தி, திருமால், அனந்த சயனமூர்த்தி, ஆதிசேஷன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கப்பட்டுள்ளன.
மலையடிப்பட்டியில் சிவபெருமானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் தனித்தனியே இரண்டு குகைக் கோயில்கள் உள்ளன. 

இயற்கைச் சூழலில் இரண்டு கோயில்களும் அருகருகே ஒரே குன்றின் மீது தனித்தனியாக அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. இங்கு அனந்தசயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு பெருமான் கோயில் திருப்பதிக்குச் சமமாகப் பார்க்கப்படுகிறது. 
இங்குள்ள சிவன் கோயிலோ, திருமால் கோயிலைவிட சற்று காலத்தால் முற்பட்டதாக இருக்கிறது.

தெளிவாகச் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் சுவற்றிலும் தூண்களிலும் நிறைந்திருக்கின்றன. 15 அடி உயரத்தில் மூலவர் சிலை செதுக்கப்பட்டிருக்கிறது, மூலவர் சிலையைச் சுற்றிலும் தேவக் கணங்களும் தெய்வ வடிவங்களும் என்ற வகையில் ஒரு கலைப்பொக்கிஷமாக இந்தச் சுவர் காட்சியளிக்கிறது.
கோயிலில் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. கிபி.960-ஆம் ஆண்டில் ராஜ கேசரி சுந்தரச் சோழன் கால கல்வெட்டுகளும் உள்ளன.

இந்தக் குடைவரை கோயிலின் அருகில் இருக்கும் பிரம்மாண்ட வடிவ பாறைகளின் மேல் சமணப் படுகைகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தப் பகுதியில் சமணம் செழித்து இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த சமணப் படுகைகள் உணர்த்துகின்றன. தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பை உணர்த்தும் கலைக்கோயில்கள் பட்டியலில் ஒன்றாக இந்தக் கோயில் இடம்பெறுகிறது.

திருமயம் குடை வரைக் கோவிலைப் போலவே சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் இயற்கைச் சூழலில் அருகருகே ஒரே குன்றின் மீது எழுப்பப்பட்டுள்ள குகைக் கோவில்தான் மலையடிப்பட்டி கோவில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர் 'திருவாலத்தூர் மலை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு வீற்றிருக்கும் ஆலயம், திருப்பதி ஆலயத்திற்கு நிகராக போற்றப்படுகிறது.

மலையடிப்பட்டி கோவிலில், நந்திவர்ம பல்லவன் காலத்து கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் 16-வது நூற்றாண்டில், குறிப்பாக கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோவில் எழுப்பட்டதாகவும், அந்த இறைவனுக்கு 'வாகீஸ்வரர்' எனப் பெயரிட்டதாகவும் செய்தி காணப்படுகிறது.

#கோயில்_குறிப்புகள்:

*மூலவர்: ரங்கநாதர் (அனந்தபத்மநாபசாவாமி) என்ற கண்ணிறைந்த பெருமாள் மற்றும் வாகீஸ்வரமுடையார் 

*அம்மன்: கமலவல்லி நாச்சியார் ,பெரியநாயகி அம்மன் 

*தல விருட்சம்: அழிஞ்சல் மற்றும் வில்வம்

*தீர்த்தம்: சுனை நீர் 

*ஊர்: மலையடிப்பட்டி 

*மாவட்டம்: புதுக்கோட்டை 

*#மலையடிப்பட்டி சிவபெருமான் கோயில்:

கி.பி 730-ல் நந்திவர்ம பல்லவன் காலத்தில் இங்குள்ள மலையைக் குடைந்து சிவனுக்குக் கோயிலெடுத்து வாகீஸ்வரர் என்ற பெயரிட்டான் என்ற செய்தியினைச் சிவன் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. மலையின் கிழக்குப் பகுதியில் மலையைக் குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகியிருக்கிறது. பாறையைக் குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது.

கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் தென்படுகிறது. அர்த்தமண்டப சுவற்றில் ஏழு தாய்மார்கள், கணேசர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு சிற்பங்கள் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன. எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன், அன்னை பராசக்தி சிங்கத்தின்மீது அமர்ந்து அரக்கனை அடித்து வீழ்த்துவது போன்ற காட்சிகள் மிகவும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மகாபலிபுரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுதியை போலவே இதுவும் கலையழகு மிக்கது என்கின்றனர் கலை ஆர்வலர்கள்.

திருமால் குகைக் கோயில், கருவறையையும், முன்னாள் ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூண்கள் சிவன் கோயிலின் தூண்களைவிட மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கும் மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காண்கிறோம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலை பாணியைக் கொண்டது என்கின்றனர்.

மண்டபத்தின் சுவற்றில் நரசிம்மர், வராகமூர்த்தி, தேவியருடன் திருமால் சிற்பங்கள் சுவற்றிலேயே செதுக்கப்பட்டிருக்கின்றன. கருவறையில் திருமால் அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். நாகராஜன் ஆதிசேஷனின் ஐந்து தலைகளும் குடைபோன்று விரிந்து திருமாலின் தலைக்கு நிழலளித்துக் கொண்டிருக்கினறன. கருவறையின் பின் சுவற்றில் அரக்கர்களும், தேவர்களும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள அம்மன் சன்னதியும் காலத்தால் பிற்பட்டதாகக் கருதப்படுகிறது.

கி.பி 16-ம் நூற்றாண்டில் இப்பகுதி தஞ்சாவூர் நாயக்கர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது, அச்சுதப்ப நாயக்கர் இக்கோயிலுக்கு கொடையளித்தச் செய்தியை இங்குள்ள கல்வெட்டு ஒன்று தெளிவாக எடுத்துச் சொல்கிறது. சிறப்பம்சாக இந்த குகைக் கோயிலில் உள்ள ஓவியங்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும். இவற்றில், ஆந்திரா மாநிலம் லிபாக்ஷியில் உள்ள ஓவியங்களின் சாயலைக் காணமுடியும் என்கின்றனர். இங்குள்ள கண் நிறைந்த பெருமாள் என்றழைக்கப்படும் பெருமாள் திருவனந்தபுரத்திலுள்ள பத்ம நாபசுவாமிக்கு நிகரானவர். கண்பார்வை தொடர்பான எல்லா நோய்களையும் நீக்கி அருள்கிறார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரி நேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்குகிறது என்கின்றனர்.

குடைவரைக் கோயில். பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் மிக முக்கிய திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்தக் குடைவரைக் கோயிலின் அருகே இருக்கும் இந்தப் பிரமாண்டப் பாறைகளின் மேல் சமணர் படுகைகள் வரிசை, வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. கிபி 7-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சமண சமயம் வேகமாகப் பரவி செழித்திருக்க வேண்டும் என்பதை இங்குள்ள சமணர் படுக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

*கோயில்கள்:

கி. பி. 730 இல் இங்குள்ள மலையைக் குடைந்து வாகீசர் என்று அழைக்கப்படும் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இது பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் குவாவன் சாத்தன் என்னும் முத்தரையரால் குடையப்பட்டதாகும். தமிழ்நாட்டின் மிகப் பழமையான எழுவர் அன்னையர் சிற்பங்கள் இங்கு உள்ளன. பெருமாள் கோயிலானது காலத்தால் சிவன் கோயிலுக்கு பிந்தையதாக கருதப்படுகிறது. இங்குள்ள பெருமாள் கோயில் மூலவர் அனந்தபத்மசுவாமி, தாயார் கமலவள்ளி நாச்ச்சியார் என்று அழைக்கப்படுகின்றனர். இங்கு நரசிம்மர், திருமாள், அனந்த சயனமூர்த்தி, ஆதிசேசன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கபட்டுள்ளன. மூலவர் 15 உயரமாக செதுக்கபட்டுள்ளார். இக்குடைவரைகளுக்கு அருகில் சமணப் படுக்கைகளும் உள்ளன.

*கோயில் பெருமைகள்:

வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில் சப்தமாதர்கள். கணேசர். வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள். மலையையே குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. காளிகாம்பாள் மகிஷாசுரமர்த்தினியாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதி மிக அற்புதமாக உள்ளது. குகையையொட்டியுள்ள முன்மண்டபம். விஜயநகர கால கலைப்பணி உடையது. பல்லவர் கால கலைப்பாணியை ஒட்டி. வாயிற்காப்போர் எனும் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. வேறு கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள். மலையடிப்பட்டி திருமாலின் (ஸ்ரீ ரங்கநாதர்) கோயில், கருவறையும் முன்னால் ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்குமேல் தூண் உயர்ந்திருப்பதையும் காணலாம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலைப்பாணி என்று சொல்லப்படுகிறது. மண்டபச் சுவரில் நரசிம்மர். வராகமூர்த்தி, தேவியருடன் திருமால் ஆகிய சிற்பங்கள் சுவரிலேயே செதுக்கப்பட்டுள்ளன. கருவறையில் திருமால் அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கின்றார். நாகராஜனாகிய ஆதிசேஷனின் ஐந்து தலைகளும் குடை போன்று விரிந்து திருமாலின் தலைக்கு நிழலளித்துக் கொண்டிருக்கின்றன. திருமாலின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றிக் காட்சியளிக்கிறார். கருவறையின் பின் சுவரில், அரக்கர்களும் தேவர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அனந்த சயன மூர்த்தியின் கலையமைப்பு மிகவும் சிறப்புடையது. தாயாரின் சந்நிதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும். கி.பி.16 - ஆம் நூற்றாண்டில், இப்பகுதி தஞ்சை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோத, அச்சுதப்ப நாயக்கர் இக்கோயிலுக்குக் கொடையளித்த செய்தியும் ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.

மலையடிப்பட்டி குகைக் கோயில்களுக்கு மிக அருகில் களியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறுசில பழங்கால குகைக்கோயில்களும் உள்ளன. இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இவை உள்ளன. இந்தக் குடவரைக் கோயிலில் சிவா-விஷ்ணு ஆகிய இருவரும் ஒரே மலையில் இருப்பதால், பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். திருவோண நட்சத்திர காலங்களில் விஷ்ணுவுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. ஆடிப்பூரம், நவராத்திரி திருவிழா, பிரதோஷம். கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத திருவாதிரை நாட்கள் விசேஷ தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. கண் நோய்களைப் போக்குவதால் இவருக்குக் கண் ஒளி வழங்கும் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு.

சப்தமாதர்கள், விநாயகர், முருகன், வீரபத்திரர், வாகீஸ்வரர், காளிகாம்பாள், நரசிம்மர், வராகமூர்த்தி, கமலவல்லி தாயார் சன்னதிகள் உள்ளன.

*சிறப்புகள்:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் குடைவரைக் கோயிலைப் போலவே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே குன்றின்மீது தனித்தனியே எழுப்பப்பட்டுள்ள இரு குகைக் கோயில்தான் மலையடிப்பட்டி கோயில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர். திருவாலத்தூர் மலை என்று காணப்படுகிறது. சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் தனித்தனியே இரண்டு குகைக் கோயில்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு கோயில், திருப்பதிக்கு நிகரானது என்கிறார்கள். இங்குள்ள சிவன் கோயில், திருமால் கோயிலைவிட காலத்தால் முற்பட்டது. இக்கோயிலில் நந்திவர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் இக்கோயில் 16-வது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோயில் எடுத்து, வாகீஸ்வரர் எனப் பெயரிட்டதாகச் செய்தி காணப்படுகிறது.

மலையை குடைந்து அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரு குடைவரைக்கோயிலாகும். வாயிற்காப்போர் எனும் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. வேறு கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள்.

*கல்வெட்டுகள்:

பூச்சிக்குடியைச் சேர்ந்தவர் ஆவுடையப்ப தேவன் என்பவராவார். இவருக்கு தற்போதைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருநெடுங்களத்து விலைமாதுவுடன் உறவு இருந்தது. தேவன் அம்மாதுவின் வீட்டில் இருந்தபோது, அவள்பிராமணர் ஒருவரை வரச்செய்து உறவில் இருந்துள்ளார். இதனால் சினமுற்ற ஆவுடையப்பதேவன் அந்த இருவரையும் வெட்டிக் கொன்றார். பின்னர் அங்கிருந்து மலையப்பட்டிக்குப் புறப்பட்டார். அப்போது அவருக்கு இரு கண்களிலும் பார்வை இழப்பு ஏற்பட்டது. தான் செய்த தவறால் தன் பார்வை பறிபோனதாக கருதி வருந்தினார். தனக்கு பார்வை மீண்டும் வந்தால் தன் வயலை வாகீசருக்கு எழுதிவைப்பதாக வேண்டிக் கொண்டார். அதன் பிறகு பார்வை திரும்பக் கிடைத்தது. அதனால் மகிழ்ந்த ஆவுடையப்ப தேவன் தம் காணியான குடிகாட்டை வாகீசருக்கு எழுதி அதைக் கல்வெட்டாக கோயிலில் பொறித்தார்.

மலையின் கிழக்குப் பகுதியில் மலையைக் குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகி இருக்கிறது. பாறையைக் குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. சிவலிங்கத்தின் முன் நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில் சப்தமாதர்கள், விநாயகர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.

எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன் அன்னை பராசக்தி சிங்கத்தின் மீது அமர்ந்து போரிட்டு வீழ்த்தும் காட்சியும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குகையை ஒட்டியுள்ள முன்மண்டபம், விஜயநகர கால கலைப்பணியை சார்ந்தது.

சிவன் குகையின் மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை காணப்படுகிறது. இந்தக் குகைக் கோவிலில், பள்ளிகொண்ட பெருமாள் அருள்கிறார். சயன கோலத்தில் இருக்கும் இறைவன் 'பள்ளிகொண்ட பெருமாள்' என்றும், 'கண்ணிறைந்த பெருமாள்' என்றும், தாயார் 'கமலவல்லி' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

விஷ்ணு குகைக் கோவிலானது கருவறையையும், அதற்கு முன்பாக ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூண்கள் சிவன் கோவிலின் தூண்களைவிட மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கும் மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காணலாம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலை பாணியைக் கொண்டது என்கின்றனர்.

மண்டபத்தின் சுவற்றில் வலதுபுறம் மகாலட்சுமியுடன் நரசிம்மரும், அமர்ந்த கோலத்தில் வைகுண்டப் பெருமாளும் உள்ளனர். இடதுபுறம் ஹயக்ரீவர் மற்றும் பெருமாள், விஷ்ணுவின் நிற்கும் தோரணையும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒரே இடத்தில், ஒரே அறையில் விஷ்ணுவின் நின்ற, இருந்த, கிடந்த (நின்று, உட்கார்ந்து, உறங்கும்) கோலங்களைக் கொண்ட மிகச் சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

சயன பெருமாளை சுற்றிலும் 5 தலை கொண்ட ஆதிசேஷன், நாரதர், தும்புரு, பிரம்மா, ஜாம்பவான், தேவர்கள் உள்ளனர். துவாரபாலகர்கள் கையில் தாமரையை வைத்திருக்கிறார்கள். தாயாரின் சன்னிதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும்.

மேலும் இந்தக் குகைக் கோவிலில், ஆந்திரா மாநிலம் லேபாட்சியில் உள்ள ஓவியங்களின் சாயலைக் காணமுடியும். முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கையின் ஐந்து விரல்களை வைத்து, இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு, ஹரி நேத்திர தூண்கள் இடையே மூன்று வாசல்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம், ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்கும் என்கின்றனர்.

கண்பார்வை தொடர்பான எல்லா நோய்களையும் நீக்கி அருள்கிறார் இத்தல பெருமாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் குடைவரைக் கோவிலின் அருகே இருக்கும் இந்தப் பிரமாண்டப் பாறைகளின் மேல் சமணர் படுகைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

கி.பி. 7-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சமண சமயம் வேகமாகப் பரவி செழித்திருக்க வேண்டும் என்பதை இங்குள்ள சமணர் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றை சுற்றி சில கல்வெட்டுகளும் உள்ளன.

கண்ணிறைந்த பெருமாள் கோவில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கூரை ஓவியங்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தில் வரையப்பட்டவை.

கோவிலுக்கு எதிரில் சக்தி வாய்ந்த தீர்த்தக்குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள் படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, பிறகு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

இங்குள்ள அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு, அருகில் உள்ள சக்தி தீர்த்தத்தில் இருந்து கால்படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, குங்குமத்தில் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத் தடை நீங்கும் என்றும் சொல்கிறார்கள்.

பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும், வேண்டுதல் நிறை வேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் இங்கு மரபாக உள்ளது. முன்னோர்களின் சாபம் நீங்க இப்பெருமாளுக்கு நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம் ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி, குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவ்வாலயத்தில் வழிபட தீபாவளி, கார்த்திகை, ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

*விசேஷ பிரார்த்தனை: 

பெருமாளிடம் வேண்டிக் 'கண்மலர்' சாற்றி பிரார்த்தனை செய்தால், கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

*குடைவரைக் கோயில்: 

திருமயம் குடைவரைக் கோயிலைப் போலவே, ஒரே மலையில் சிவன் (வஹீஸ்வரமுடையார்) மற்றும் பெருமாள் என இரு கோயில்களும் அருகருகே அமைந்துள்ளன.

*எப்படிச் செல்வது:

திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ தொலைவிலும் இருக்கிறது மலையடிப்பட்டி கிராமம். 
திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியை அடுத்த கிள்ளுக் கோட்டை பிரிவு சாலையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது மலையடிப்பட்டி குடைவரைக் கோயில்கள். 

இரண்டு கோயில்களும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து கிராமப் பேருந்து வசதிகளும் உண்டு. குடைவரைக் கோயில் செல்பவர்கள் இங்குள்ள ஓவியங்களின் அழகையும், சிவபெருமான், விஷ்ணு பெருமானின் அருளையும் பெற்றுச் செல்லலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, June 3, 2026

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்

உலகப் புகழ்பெற்ற 
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும்,
திருமால் வராக வடிவில் ஈசனை வழிபட்ட தலமாகவும்,
சிவபெருமானே நேரில் வந்து "அவள் இவள்" என்ற சாட்சி சொன்ன இடமான, பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்றான 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
#திருஅவளிவநல்லூர் என்ற #அவளிவணல்லூர் 
(புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,
#அவளிவள்நல்லூர்)
#சாட்சிநாதர் என்ற ஸ்ரீகம்பரிஷியுடையார்
#சௌந்தர_நாயகி என்ற 
சௌந்தர வல்லி
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில்அம்மாப்பேட்டை அருகே அமைந்துள்ளது.
காவிரி தென்கரைத்தலங்களில் 100ஆவது சிவத்தலமாகும்.
திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

வராகமூர்த்தியும் (திருமால்) காசியப்பமுனிவரும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். தன்மனைவியை விடுத்து அவள் தங்கையைத் தம் மனைவியென வாதிட்ட கணவனுக்கு, அவன் மனைவியாகிய அவள் தான் சுட்டும் இவள் என்று காட்டியதால், நல்லூர், அவள் இவள் நல்லூர் என்று பெயர் பெற்றதாம். இக்கதை கர்ப்பகிருகத்தின் பின் பக்கத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது என்பர்.
#கோயில்_குறிப்புகள்:

*மூலவர் : சாட்சிநாதர், தம்பரிசுடையார்.

*அம்மன்: சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி.

*தல மரம்: பாதிரி

*தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.

*புராண பெயர்கள்: புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,அவளிவள் நல்லூர்,அவளிவநல்லூர்

ஊர்: அவளிவநல்லூர்

மாவட்டம்: திருவாரூர் 

*பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர் மற்றும் சேக்கிழார் , வள்ளலார் 

#அவளிவள்நல்லூர் தேவாரப் பாடல்கள்:

1."கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடுகு லாவித்
தம்பரிசி நோடுசுடு நீறுதட வந்திடபம் ஏறிக்
கம்பரிய செம்பொனொடு மாடமதில் கல்வரைவி லாக
அம்புஎரிய வெய்தபெரு மான்உறைவது அவளிவள் நல் லூரே
          ...... திருஞானசம்பந்தர்

2."தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிருமென்று
வீற்றினை யுடையவனாகி வெடுவெடுத்து எழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவள் இவள் நல்லூரே.
     ...... திருநாவுக்கரசு சுவாமிகள்
                                                            

3.-“ சரதத்தால்
ஏதும் அவள் இவள் என்று எண்ணாதவர் இறைஞ்சி
ஓதும் அவளிவணல் லூருடை யோய்”
                ___வள்ளலார்

#பஞ்ச_ஆரண்ய தலங்கள்:

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்யத் தலங்கள் என்று ஐந்து திருத்தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்தஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து திருத்தலங்களை வரிசையாகச் சொல்வதானால்

1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) - விடியற்காலம்
2. அவளிவணல்லூர் (பாதிரி வனம்) -  காலை.
3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் -  உச்சிக்காலம்.
4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாமம்

#தல வரலாறு:

இத்தலம் "புல்லாரண்யம்", "சட்சிநாதபுரம்", "பத்திரிவனம்" என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு, பிரம்மா, காஷ்யப  மகரிஷி, முருகன், சூரியன், அகஸ்தியர், கண்வ மகரிஷி ஆகியோர் இக்கோயிலின் சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது .

மகா விஷ்ணு, வராக அவதாரத்தின் போது , அவருடைய கொம்பு உடைந்துவிட்டது . அதனால் அவர் இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு முன்பைப் போலவே கொம்புகளை அருளினார். காஷ்யப மகரிஷியும் இந்தக் கோவிலின் சிவபெருமானை வழிபட்டார். 

பஞ்சாரண்யத் தலங்களுள் இரண்டாவது.

சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள்  இத்தலத்திற்கு உண்டு.

பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும்  வழிபட்ட தலம் இது.

வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப்பேறு பெற்றார்.

*தல வரலாறு: 

பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார்.

தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, "இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி" என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர்.

உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

இக்கோவிலில், நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இரண்டு சோழர் காலத்தவை. மற்றவை மிகச் சிதைந்துள்ளன.

முல்லைவனமாகிய 
திருக்கருகாவூரில்   
உஷக் காலத்திலும், 
பாதிரி வனமாகிய 
அவளிவ நல்லூரில்   
கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்  )   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்  ) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், குரு, சுக்ரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.

*அனுஷம் நட்சத்திர நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தீராத சருமப் பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.

*பரணி நட்சத்திரம் அல்லது பூராடம் நட்சத்திர நாளில் சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டி தினையை நைவேத்தியம் கொடுத்தால் எப்பேர்பட்ட கண் பிரச்னைகளும் ஒரு கண் பார்வை பிரச்னையாக இருந்தாலும் விரைவாக குணமடையும்.

*புனர்பூசம் நட்சத்திர நாளில் இக்கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரத்திற்கு மாமரத்தில் செய்யப்பட்ட சிறிய தொட்டில் செய்து வெண்பட்டு அல்லது மஞ்சள் பட்டுநூலால் இம்மரத்தில் கட்டி பின்பு பார்லி அரிசியில் சுவாமிக்கு நைவேத்தியம் தொடர்ந்து மூன்று மாதம் செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.

*கர்ப்பிணி பெண்களும் சுவாமிக்கு பார்லி அரிசி நைவேத்தியம் பிரசாதத்தை சாப்பிட்டுவந்தால் சுகப்பிரசவம் உண்டாகி நல்ல படியாக குழந்தை பிறக்கும்.

*இத்திருத்தலத்தில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் கணவன் - மனைவி பிரச்னை தீரும். கணவன் - மனைவி ஒன்றுபட்டு வாழ்வர்.

பௌர்ணமி நாளில் மஹா வில்வச் செடியை இக்கோயிலில் நட்டு அதனைப் பாதுகாப்பாக வளர்த்தால் வில்வம் வளர வளர உங்களின் கர்மா குறைந்து வாழ்வில் சுபகாரியங்கள் உண்டாகும்

 
*கல்வெட்டுகள்:

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசுவின் சுவாமிகளும் இக்கோயிலின் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருப்பதால், மூலக்கோயில் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கலாம். இக்கோயில் சோழர் காலத்தில் கற்கருவியாகப் புனரமைக்கப்பட்டு, நாயக்கர் / மராட்டியர் காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

இக்கோயிலில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ள கல்வெட்டுகள் குலோத்துங்க சோழ-III ( கி.பி. 1246 – 1279) க்கு சொந்தமானது. நித்தவோணத்தவளநாட்டு ஆவூர் கூற்றத்து அவளிவநல்லூரில் உள்ள சிவபெருமான் இருந்த இத்தலம் “தம்பரிசுடையார்” என அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது  .

இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், மூன்றாம் ராஜராஜ சோழனின் மகனான மூன்றாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1246 – 1279) 7 -வது மற்றும் 22 -வது ஆட்சிக் காலங்களைச் சேர்ந்தவை. மேலும், மன்னரின் பெயரும் காலமும் குறிப்பிடப்படாத சில சிதைந்த, சேதமடைந்த கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.  கல்வெட்டின்படி, சிவபெருமான் “தாம்பரீசுதய நாயனார்” என்று அழைக்கப்பட்டார்.

மூன்றாம் ராஜேந்திர சோழனின் 7 ஆம் ஆண்டு கல்வெட்டு, யாசித்த பிறகு விளக்கேற்றியதையும் (..?), சேவையின் போது அதன்  பல பகுதிகள் சேதமடைந்ததையும் பதிவு செய்கிறது. மற்றொரு 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, நிலம் தானமாக வழங்கப்பட்டு விளக்கேற்றப்பட்ட கொடையைப் பதிவு செய்கிறது (அந்தக் கல்வெட்டு முழுமையடையாமலும் சேதமடைந்தும் உள்ளது).

மூன்றாம் இராஜராஜ சோழனின் 10 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் நித்தவோணத்தவளநாட்டு ஆவூர் கூற்றத்துஅவளிவநல்லூர் தம்பிசுதய நாயனார் கோயில்,  விநாயகர், அம்பேரிந்தப் பெருமான் (திருப்புராந்தகர் என சிவபெருமான் இருக்கலாம்), நாச்சியார், ஆட்கொண்டநாயக்கர் மற்றும் நாச்சியார், பள்ளியாருடைய நாச்சியார், ஆலியாருடைய நாச்சியார் ஆகியோரால் நிறுவப்பட்டது. அமரகோன் என்கிற தம்பிசுடையான் ஆதிச்ச தேவன்.

மார்கழி மற்றும் சித்திரைத் திருநாளைக் கொண்டாட ஏமலூருடையான் திருப்பங்குடையான் திருவந்தானின் தந்தையான கிளியுடையான் அனுக்கன் (கல்வெட்டு பல பகுதிகளிலும் சேதம் அடைந்துள்ளது) என்பவரால் வாங்கிய நிலத்தை தானமாக அளித்தார்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*செல்லும் வழி:

கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன்.

தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன்.  திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும்போதே நிசும்பசூதனி தேவி ...