Showing posts with label #tirucherai #Divya Desam #saranathan #Vishnu Kovil #Thanjavur district #Tamilnadu #hindu India. Show all posts
Showing posts with label #tirucherai #Divya Desam #saranathan #Vishnu Kovil #Thanjavur district #Tamilnadu #hindu India. Show all posts

Saturday, April 13, 2024

108 வைணவத் திவ்ய தேசம் சாரநாதன் தயார்சாரநாயகி திருக்கோயில்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட,
திருமாலின் 108 வைணவத் திவ்ய தேசங்களில் தஞ்சை நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 
புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள திருச்சேறை 

#சாரநாதன் #தயார்_சாரநாயகி_பஞ்சலெட்சுமி திருக்கோயில் வரலாறு 
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 15 வது திவ்ய தேசம். 

#பெயர்:
திருச்சேறை சாரநாதப்பெருமாள்
 #கோயில்_அமைவிடம்
நாடு:
இந்தியா
மாநிலம்:
தமிழ்நாடு
மாவட்டம்:
தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:
திருச்சேறை
கோயில் தகவல்கள்

#மூலவர்:
சாரநாதர்
#தாயார்:
சாரநாயகி
#தீர்த்தம்:
சார புஷ்கரணி
#உற்சவர்:
ஸ்ரீ சாரநாதப் பெருமாள்
கட்டடக்கலை வடிவமைப்பு:
தென்னிந்திய கட்டிடக்கலை
#வரலாறு
கட்டப்பட்ட நாள்:
15ம் நூற்றாண்டு
#அமைத்தவர்:
தஞ்சை நாயக்க மன்னர்கள்
#அமைவிடம் :
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியே செல்கின்றன. இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள தொடருந்து நிலையம் கும்பகோணமும், வானூர்தி நிலையம் திருச்சியும் ஆகும். இக்கோவில் அஞ்சல் முகவரி: அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை- 612605 தஞ்சாவூர் மாவட்டம்

கோவில்

கொடி மரமும் மூன்று நிலை கோபுரமும்
இக்கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி அகலமும் கொண்டமைந்துள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ராஜ கோபுரம் 90 அடி உயரமானது. கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவரி ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளன.. கோயில் உள் சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலின் மூலவர் சாரநாதன் நின்ற கோலத்தில் கிழக்குமுகமாக உள்ளார். இக்கோவிலில் மட்டுமே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் காணப்படுகிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. இதனாலேயே இக்கோவிலின் மூலவர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். திருச்சாரம் என வழங்கப்பட்ட இத்தலம் "திருச்சேறை" ஆனது. மூலத்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் அமர்ந்துள்ளனர்.

கோவில் விமானம்: சார விமானம்; புஷ்கரணி: சார புஷ்கரணி.

சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். திருச்சாரம் என வழங்கப்பட்ட இத்தலம் "திருச்சேறை" ஆனது. மூலத்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் அமர்ந்துள்ளனர்.

கோவில் விமானம்: சார விமானம்; புஷ்கரணி: சார புஷ்கரணி.

தல வரலாறு
தொகு
ஆதிசேஷன் குடையின் கீழ் தாயார் லட்சுமியுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பிரம்மதேவரை அழைத்து பிரளயகாலம் வருகிறது, நீ உடன் பூலோகம் சென்று ஒரு புனித தலத்தில் மண் எடுத்து குடம் செய்து அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய் என கட்டளை இட்டார். பல ஆலயங்களில் மண் எடுத்து குடம் செய்தும் குடம் உடைந்தவன்னம் இருந்தது. மகாவிஷ்ணுவை வேண்ட திருமால் பூலோக முக்கிய தலங்களுள் ஒன்றான திருச்சேறை சென்று தாரா தீர்த்ததில் நீராடி, மண் எடுத்து செய் எனக் கூறினார். பிரம்ம தேவரும் அவ்வாறே செய்து வேத ஆகமங்களை பாதுகாத்தார். பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்திலிருந்து மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வைத்து வேதங்களைக் காப்பாற்றினார் என்பதும், காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் என்பதும், மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது என்பதும் இத்தலம் குறித்த மரபுவழி வரலாறுகளாகும்.

விஜயநகரப் பேரரசின் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கர் மன்னார்குடியில் இராஜகோபால சுவாமிக்கு ஒரு கோவில் அமைக்கத் தீர்மானித்து அதற்கான பொறுப்பைத் தன் அமைச்சரான நரச பூபாலனிடம் அளித்தார். பூபாலன் சாரநாதப் பெருமாளின் பக்தர். திருச்சேறையிலும் கோவில் அமைக்க விரும்பிய அமைச்சர், மன்னார்குடிக்குக் கருங்கற்களைக் கொண்டு செல்லும் ஒவ்வொரு பாரவண்டியிலிருந்தும் ஒரு கல்லை திருச்சேறையில் இறக்கிவிட்டுச் செல்லும்படி தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். இச்செய்தியை அறிந்து சினமடைந்த அரசன் திருச்சேறைக்குச் சென்றான். அங்கு அரசனது கண்களுக்கு சாரநாதப் பெருமாள், இராஜகோபால சுவாமியாகக் காட்சியளித்ததால் சினம் தீர்ந்த அரசன் இக்கோவிலையும் அமைப்பதற்கு மனம் உவந்தான் என்பதும் இத்தலம் குறித்த மரபு வரலாறு ஆகும்.

ஒரு முறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கித் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரி எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.

திருவிழா : 
10 நாட்கள் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இங்கு நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானதாகும். 10 ஆம் நாளன்று தேரோட்டம். பெருமாள் ஐந்து தேவியருடன் காவிரித் தாய்க்குக் காட்சியளித்த நிகழ்வு நடந்தது தைப்பூச நாளில் என்பதால் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மங்களசாசனம் : 
திருமங்கையாழ்வார் இத்தலம் குறித்து 13 பாசுரங்களில் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று:

பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே.

திருவிழா:
 
     
   தைப்பூச விழா பத்து நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்விழா. காவிரித்தாய்க்கு காட்சியளித்த தைமாதம், பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாரபுஷ்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு ஈடானது என்பதால் இதை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.  
   
பொது தகவல்: 
     இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. காவிரித்தாய் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

கோயில் நீளம் 380 அடி. அகலம் 234 அடி. கிழக்கு நோக்கிய 90 அடி உயர பிரமாண்டமான ராஜ கோபுரம். கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக் கின்றனர். கோயில் உள்பிர காரத்தில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் சன்னதிகள் உள்ளன.

     

பிரார்த்தனை 
     
  செய்த பாவங்கள் விலக இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. இத்த பெருமாளை வழிபாடு செய்தால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கிறது.  
     

நேர்த்திக்கடன்:  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

திறக்கும் நேரம்: 
     காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  

செல்லும் வழி :

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது.

    ஓம் நமோ நாராயணாய நமஹா 🙏🏻

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...