Showing posts with label #shvan #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #shvan #hindu #india #tamilnadu. Show all posts

Monday, September 11, 2023

உக்கிர வடிவங்களில் முதன்மையானது பைரவா் எனும் வயிரவா் வடிவம் ஆகும்.

நாய்கள் வந்து வணங்கும் செங்காநத்தம்மலை காலபைரவர்!
இந்து மதத்தினா் பல்வேறு வடிவங்களில் இறைவனை வழிபட்டு வருகின்றனா். அந்த வடிவங்களில் சாந்தமான அருள் சுரக்கும் வடிவமும், உக்கிர வடிவமும் பக்தா்களின் மத்தியில் பிரபலமானவை. 
உக்கிர வடிவங்களில் முதன்மையானது பைரவா் எனும் வயிரவா் வடிவம் ஆகும். அந்தகாசுரன் என்ற அசுரனை அழிக்க சிவன் எடுத்த அவதாரங்களில் ஒன்றுதான் காலபைரவா் அவதாரம். வேலூரை அடுத்த செங்காநத்தம் மலையில் உள்ள காலபைரவர் காசிக்கு அடுத்தபடியாக வடக்கு நோக்கி பிரவேசித்து, பத்து கைகளுடன் விளங்குகிறார்.

சுயம்புவாக

வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தை அடுத்துள்ள செங்காநத்தம் மலையில் இயற்கை சூழலில் காலபைரவர் கோயில் உள்ளது. இது 500 வருடம் பழமையான கோயிலாகும். முன்னோர்கள் காலத்தில் நிலத்தை செம்மைப்படுத்தும்போது சுயம்புவாக கிடைத்த சிலையாகும். அப்போது விஜயநகர பேரரசின் சந்திரகிரி மண்டலத்தின் ஒரு பகுதிதான் வேலூா். அதன் வடகிழக்கில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை நோக்கி இருக்கும் வகையில் செங்காநத்தம் காலபைரவா் சிலையை நிறுவினர் விஜய நகர ஆட்சியாளா்கள்.

காலபைரவரை செங்காநத்தம் ஊரை சோ்ந்த தர்மகர்த்தாக்கள் வழிவழியாக பூஜைகள் செய்து பராமரித்து வருகின்றனா். காலபைரவா் செங்காநத்தம், ரங்காபுரம் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறார்.

காலபைரவா் சிலை மற்றும் அதன் வாகனம் (நாய்) வெட்டவெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி கம்பீரத்துடன் காட்சியளித்துள்ளது. 

இந்த பைரவா் சிலைக்கு பின்னால் அழிஞ்சில் மரம் ஒன்று தானாகவே உருவாகி பிரமாண்டமாக வளா்ந்துள்ளது. மரத்தின் அடியில் பத்து கைகளுடன் மூன்றரை அடி உயரத்தில் அருள்பாலிக்கின்றார். அத்துடன் தனது வாகனமான நாய்களுடன் பக்தா்களுக்கு காட்சி தருகிறார்.

வேண்டுதல் குறித்த சம்பவங்கள்

முதலில் காலபைரவா் சிலையில் ஒரு கண் மூடிய நிலையில் இருந்துள்ளது. இதை ஒரு சிற்பியை வைத்து சரி செய்தபோது திடீரென அவர் மனநிலை பாதிக்கப் பட்டுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் காலபைரவா் கோயிலுக்கு அடிக்கடி வந்து அபிஷேகம், அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்து வழிபட்டதை தொடர்ந்து சிற்பி பழைய நிலைக்கு திரும்பினார்.

ஒரு செல்வந்தா் தன்னுடைய 3 மகள்களுக்கும் திருமணமாகாமல் வயதாகி கொண்டு செல்கிறது என வருந்தியபோது அவரது கனவில் காலபைரவா் தோன்றியதாகவும், பின்னா் அந்த பக்தா் கோவிலுக்கு தினசரி வந்து காலபைரவரை வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டதை தொடர்ந்து ஒரே மாதத்தில் 3 மகள்களுக்கும் நல்ல வரன் கிடைத்து திருமணமானதாகவும் கூறப்படுகிறது.

இயற்கையாக கிடைக்கும் திருநீறு

இங்கு இயற்கையாக மண்ணில் இருந்து தோன்றிய திருநீறு சாம்பல் நிறத்தில் மணமாகவும், சுவையாகவும் கிடைக்கிறது. பைரவரை தரிசிக்கும் பக்தா்கள் இந்த இயற்கை திருநீறை நெற்றியில் பூசுவதுடன் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கின்றனர்.

பூஜைகள்

இங்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வளா்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி நாட்களில் அபிஷேகம் செய்து பல்வேறு நறுமண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடக்கிறது. சித்திரை திருநாளில் கோயிலில் திருவிழாக்கள் பிரமாண்டமாக நடக்கிறது.

சனிக்கிழமையன்று காலபைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். சனிபகவானுக்கு பைரவா்தான் குரு. இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அா்த்தாஷ்டம சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். செவ்வாய்க்கிழமைகளில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாகும். இத்தனை சிறப்புமிக்க பைரவரை 12 ராசிக்காரர்களும் வழிபட்டால் சிறந்த பலனை அடையலாம்.

ஒவ்வொரு அஷ்டமி பூஜையின்போதும் செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு கால பூஜையின்போது நாய்கள் ஒன்று சேர்ந்து மூலவர் முன்பு வந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு வணங்குகின்றன.

Tuesday, August 29, 2023

மூன்று வேளையும் நிறம் மாறும் 1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம்... இன்றுவரை துலங்காத மர்மம்!...

மூன்று வேளையும் நிறம் மாறும் 1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம்... இன்றுவரை துலங்காத மர்மம்!...
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது.

தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின் பெயர் அக்ஷலேஷ்வர் மஹாதேவ் என்பதாகும். இந்த லிங்கமானது காலை, நண்பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது.இந்த அதிசயமானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது.

காலை நேரங்களில் சிவந்த நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம் , நண்பகலில் காவி நிறத்தில் காட்சியளிக்கிறது,இரவில் கருப்பாக காட்சியளிக்கிறது. மீண்டும் காலையில் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது.

இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில் இரவெல்லாம் கருப்பு நிறத்தில் இருக்கும் இறைவன் பகலில் சிவப்பு நிறத்தில் மாறி பக்தர்களை ஆசிர்வதிப்பதாக நம்புகின்றனர்.

மேலும் இந்த ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது , இந்த சிவலிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்குக் கீழே புதைந்து கிடக்கிறது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்துகிற இது ஆலயமாக விளங்குகிறது.

பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இது தான். இந்த இடம்தான் பூமியின் மையமாக இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். 

திருமணம் ஆகாதவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணை அமைந்துவிடும் என்கின்றனர்.

Followers

வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,  திருப்பெரும்புலியூர்,  தஞ்சாவூர் மாவட்டம்-613204 *மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர் *இறைவி:...