வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருப்பெரும்புலியூர்,
தஞ்சாவூர் மாவட்டம்-613204
*மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர்
*இறைவி: சௌந்தரநாயகி
*தல விருட்சம்: சரக்கொன்றை
*தீர்த்தம்: காவிரி தீர்த்தம், கோயில் தீர்த்தம்.
*பாடல் பெற்ற தலம்:
திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பாடிய தலம்.
*புலிக்கால் முனிவர் வழிபட்டதால், இத்தலம் திருப்பெரும்புலியூர் எனப் பெயர் பெற்றது.
*வியாக்ரபாதர் புலிக்கால் முனிவராக வழிபட்ட ஐந்து புலியூர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். அவை பெரும் பெற்ற புலியூர் (சிதம்பரம்), எருகத்தம் புலியூர் (ராஜேந்திரபட்டினம்), ஓமாம் புலியூர், திருப்பாதிரிப்புலியூர், பெரும்புலியூர்.
*வியாக்ரபாத முனிவர் சிவபெருமான் மேல் தீராத பக்தி கொண்டவர். இந்த முனிவர் இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்கால்களாக மாற்றிக் கொண்டாராம். அதனாலேயே அந்த முனிவரின் உண்மை பெயர் மறைந்து ‘புலிக்கால் முனிவர்’ என அழைக்கப்பட்டார்.
*பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் உமா சகித மூர்த்தியின் திருமேனிகள் உள்ளன.
*கணவனின், பழக்க வழக்கங்கள் பிடிக்காமல், அவனை விட்டுப் பிரிந்து வாழும் பெண்கள், உமா சகித மூர்த்தியின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள். ‘தாயே என் கணவனுக்கு நல்ல புத்தியைக் கொடு. அவர் திருந்தி என்னுடன் மீண்டும் வாழ அருள்புரிவாய்’ என கண்கள் கலங்க மன்றாடுகிறார்கள்.
*தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவன் தன்னுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மனமுருக அன்னையிடம் வேண்டுகிறார்கள்.
*கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை, அவள் கணவன் அங்கே போய் எத்தனை முறை அழைத்தாலும் வர மறுப்பதால் என்ன செய்வது என்று புரியாத கணவன்மார் இங்கே வருகிறார்கள். உமா சகித மூர்த்தியின் முன் நின்று மனமாற பிரார்த்தனை செய்கிறார்கள்.
*இவர்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. தம்பதிகள் இணைகின்றனர். இணைந்தவுடன் தம்பதியர்களாக இங்கு வருகின்றனர்.
இணைந்து காட்சி தரும் உமா சகித மூர்த்திக்கு அபிஷேக, ஆராதனை செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.
*இது மட்டுமல்ல நீதிமன்றம் வரை சென்ற விவாகரத்து வழக்குகள் கூட, உமா சகித மூர்த்தியை பிரார்த்தனை செய்தால், இடையிலேயே திரும்பப் பெறப்பட்ட சம்பவங்கள் ஏராளம் என இங்குள்ள பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.
*இக்கோயிலின் கருவறை தாமரை மலர் போன்ற வட்ட அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
*இங்குள்ள நவகிரக சந்நிதியில் அனைத்து கிரகங்களும் சூரியனை நோக்கியவாறு உள்ளது சிறப்பு.
*இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், திருப்பூந்துருத்தி அருகே உள்ள திருப்பெரும்புலியூரில் அமைந்துள்ளது.
தஞ்சாவூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருவையாற்றுக்கு வடமேற்கே
3-கி. மீ. தூரத்திலும் உள்ளது. திருவையாற்றிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment