Showing posts with label #Kurubhvan #Guru Purnima #Hindu festival #Tamil festival #Tiruvannamalai #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Kurubhvan #Guru Purnima #Hindu festival #Tamil festival #Tiruvannamalai #Tamil Nadu #India. Show all posts

Wednesday, July 9, 2025

குருவை துதிப்பதற்காக ஏற்பட்டதே குரு பூர்ணிமா.


குருவிற்கு நன்றி செலுத்தும் வகையில் சிஷ்யன் அவர் பாதம் வணங்கி, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து அவரை வணங்கி துதிப்பதற்காக ஏற்பட்டதே குரு பூர்ணிமா. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. 

நமது மனதில் இருந்த இருளை நீக்கி ஒளி கொடுத்த கடவுளான குருவை வணங்குவ தற்காகவே குரு பூர்ணிமா கடைப்பிடிக்கப் படுகிறது.  இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி குருபூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக் கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தை பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப் படுத்தினார்கள். 

அப்பேற்பட்டகுருவை வணங்கும் விதமாக  "குரு பூர்ணிமா" கொண்டாடப்படுகிறது. இப்படி குருவுக்கெல்லாம் குருவாக இருக் கும் வியாசர், தட்சிணாமூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கம்.



சம்ஸ்கிருதத்தில் 'கு' என்றால் இருட்டு என ப் பொருள்.'ரு' என்றால் விரட்டுதல் எனப் பொருள். அறியாமையாகிய இருட்டை விலக்கி ஞான ஒளியினை ஏற்படுத்துபவ ரே குருவாவார். 

ஒரு சிஷ்யனின் வாழ்க்கை பாதையை சீர் செய்து அவனுக்கு ஞான ஒளி ஏற்படுத்தி அவனை மோட்சம் பெரும் அளவிற்கு கொண்டு செல்பவர் குரு. 

வியாச பூர்ணிமா கொண்டாடப்படும் இந் நாளில் சன்னியாசஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.

🌹வியாசபூர்ணிமா: 

வேத வியாசர் எனப் போற்றப்பட்ட, வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபா யனர். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் 'வேத வியாசர்' என்றழைக்க‌ப்பட்டார். 

வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவ ற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத் தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினா ல் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.

🌹ஆனி பவுர்ணமி: 

குரு பூர்ணிமா எனப்படும் வியாச பூர்ணி மாவானது சூரியன் ஆனி மாதத்தில் புத னின் மிதுனராசியிலும் சந்திரன் குருவின் தனுர் ராசியிலும் இருந்து சமசப்தமமாக பார்க்கும் காலமாகும். 

குருவிற்க்கும் வித்யாகாரகன் புதனுக்கும் சூரிய சந்திரர்கள் ஏற்படுத்தும் தொடர்பே குருபூர்ணிமாவாகும். இந்தநாளில் குருவி ற்கு நன்றி செலுத்தும் வகையில் சிஷ்யன் அவர் பாதம் வணங்கி, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து அவரை வணங்கி துதிப்பதற்காக ஏற்பட்டதே குரு பூர்ணிமா.

🌹நல்ல அறிவு கிடைக்கும்: 

வேத வியாசரை அறியாதவர் இல்லை. நான்கு வேதங்களை தொகுத்தவர். மகா பாரதத்தை எழுதியவர். அதில் ஒரு கதா பாத்திரமாக விளங்குபவர். ஸ்ரீமத் பாகவதம் உட்பட்ட 18 புராணங்களை எழுதியவர். பிரம்ம சூத்திரம் புனைந்தவர். இந்தகைய பெரியோனின் பிறந்த தினமே குரு பூர்ணிமா. 

இந்த நாளில் வேத வியாசருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகி ன்றன. குரு பூர்ணிமா அன்றே வியாசர் பிரம்ம சூத்திரத்தை எழுதிமுடித்தார். இந்த நாளில் பிரம்ம சூத்திரத்தை பாராயணம் செய்து வியாசரை வேண்டினால் இம்மை யில் நல்லறிவு உண்டாகும்.

வேத வியாசர் ஆலயம்: சிறப்பு மிக்க வேத வியாசருக்கு சென்னை வியாசர்பாடியில் சூரிய ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ரவீஸ்வரர் ஆலயத்தில் தனிசன்னதி அமை ந்துள்ளது. வியாச பூர்ணிமா அமை ந்துள்ள நிலையில் அருள்மிகு ரவீஸ்வர ரையும் வேதவியாசரையும் வணங்க நலம் பல கிடைக்கும்.

குரு பூர்ணிமா தினத்தில் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்த குருவை நாம் மனதார நினைத்தலும், கோயிலுக்கு சென்று வணங்குவதும் நல்லது. தற்போது நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் தினம் போலவே குரு பகவானையும் வணங்குவது நல்லது.. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...