Showing posts with label #Monday pradosham #somavaram #Sivan #Hindu India #Tamil Nadu #Thanjavur #nellikuppam. Show all posts
Showing posts with label #Monday pradosham #somavaram #Sivan #Hindu India #Tamil Nadu #Thanjavur #nellikuppam. Show all posts

Sunday, May 19, 2024

திங்கட்கிழமை சோமவார பிரதோஷம் :



#பிறவாமை_அருளும்
#பிரதோஷ_நாயகா
#போற்றி_போற்றி……
சோமவார பிரதோஷம் :
+++++++++++++++++

தென்னாடு போற்றும் சிவனே போற்றி…. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அத்தகைய பிரதோஷத்தின் வகைகளை தெரிந்து கொள்வோம்.

நித்திய பிரதோஷம்: தினமும்  சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர், நட்சத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள நேரம் நித்திய பிரதோஷமாகும்.

திவ்ய பிரதோஷம்:  பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.

தீப பிரதோஷம்: (மகா பிரதோஷம்)  தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் மாத பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனப்படும். இது மிகவும் சிறப்பானது.

சப்தரிஷி பிரதோஷம்:  பிரதோஷ காலத்தில் பூஜைகளை முடித்து வானத்தில் சப்த ரிஷி மண்டலம் என்னும் நட்சத்திர கூட்டத்தை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.

ஏகாட்ச்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும்.

அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.

திரிகரண பிரதோஷம்:  வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள்.

பிரம்ம பிரதோஷம்: இந்த பிரதோஷத்தை கடைபிடித்தால் முன்னோர் சாபம், முன் வினை பாவம் விலகிவிடும்.

ஆட்சரப பிரதோஷம்: வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ஆட்சரப பிரதோஷம்.

கந்த பிரதோஷம்:  சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.

சட்ஜ பிரபா பிரதோஷம்: வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைப்பிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.

அஷ்டதிக் பிரதோஷம்: வருடத்தில் எட்டு மகா பிரதோஷத்தை கடைப்பிடித்தால் அஷ்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.

நவகிரக பிரதோஷம்: வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷ மாகும்.

துத்த பிரதோஷம் : வருடத்தில் வரும் பத்து மகா பிரதோஷத்தையும் கடைபிடிப்பது துத்த பிரதோஷம் எனப்படும்.

பிரதோஷ நாட்களில் என்ன கிழமை வழிபாடு செய்தால்,  என்னனென்ன பலன்கள் கிடைக்கும்….

ஞாயிறு பிரதோஷம் – சுப மங்களத்தை தரும்

திங்கள், சோம பிரதோஷம் – நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்

செவ்வாய்ப்பிரதோஷம் – பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்

புதன் பிரதோஷம் – நல்ல புத்திரபாக்யம் தரும்

வியாழன் பிரதோஷம் – திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்

வெள்ளி பிரதோஷம் – எதிரிகள், எதிர்ப்பு விலகும்

சனிப்பிரதோஷம் – அனைத்து துன்பமும் விலகும்

உங்களின் பிரதான தோஷங்கள் நீக்கி பிரகாசமான வாழ்வை பெறுங்கள்….!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் பலன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள எட்டு திசை லிங்கங்களே (அஷ்ட லிங்கங்கள்) நவகிரக தோஷங்...