Showing posts with label #agni nakshatram #kathiri viyel #sun #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #agni nakshatram #kathiri viyel #sun #hindu #india #tamilnadu. Show all posts

Friday, May 3, 2024

அக்னி நட்சத்திரம் உருவான கதை

ஜோதிட சாஸ்திரப்படி, ஆண்டுதோறும், சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும்போது உச்சமடைகிறார் என்று சொல்லப்படுகிறது. பூமியில் அதிக வெயில் தாக்கம் இருப்பது இந்த அக்னி நட்சத்திரத்தில் தான்.
அக்னி நட்சத்திரம் 2024:

ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21-இல் தொடங்கி வைகாசி 15-ல் முடிவடையும். அதேபோல் இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது.

*அக்னி நட்சத்திரம் உருவான கதை :*

புராண கதையின் படி ஸ்வேதகி என்ற மன்னன் 12 ஆண்டுகளாக யாகம் செய்து வருகிறார் . அந்த யாகத்தில் நெய்யை அதிக அளவு ஊற்றுகிறார், இதன் காரணமாக அக்னி பகவானுக்கு தீராத பசி ஏற்படுகிறது. 

இந்த பசியை போக்க பிரம்ம தேவனிடம் சென்று வழி கேட்கின்றனர். அதற்கு அவர், நந்தவனத்தை விழுங்க வேண்டும் என கூறுகிறார். 

அவ்வாறு அக்னி தேவன் நந்தவனத்தை விழுங்கச் செல்லும் போது இந்திர பகவான் அதை தடுத்து மழை பொழிய செய்கிறார்.

அக்னி தேவனோ விஷ்ணு பகவானிடம் சென்று தனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறார். அப்போது அர்ஜுனன் காட்டின் மேற்புறத்தில் கூரை அமைத்து மழை வராமல் பாதுகாக்கிறார். 

கிருஷ்ண பகவான் அக்னி தேவனுக்கு ஒரு நிபந்தனையும் இடுகிறார், அதாவது இதற்காக 21 நாட்கள் வரையறுக்கிறார்.

அதன்படி அக்னிதேவன் முதல் ஏழு நாட்கள் பூமியின் கீழ்ப்பகுதியை உண்கிறார். அதனால் வெப்பம் பூமியில் மெதுவாக பரவ துவங்குகிறது. 

அடுத்த ஏழு நாட்கள் பெரிய மரங்களை விழுங்குகிறார். இந்த காலகட்டத்தில் அதிக வெப்பம் இருக்கிறது. 

இறுதி ஏழு நாட்களில் பாறையை விழுங்க தொடங்குகிறார். இதனால் வெப்பம் படிப்படியாக மிதமாக்கப்படுகிறது. இதுவே அக்னி நட்சத்திரம் உருவான கதை என சொல்லப்படுகிறது.

*செய்யக்கூடாதவை:*

புது வீடு புகுதல், பால் காய்ச்சுதல், செடி கொடிகளை வெட்டுதல், தலைமுடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கிணறு வெட்டுதல், மரம் வெட்டுதல் விதை விதைத்தல், வீடு பராமரிப்பு பணிகளில் தொடங்குதல், நெடுந்தூர பயணம், பூமி பூஜை போன்றவற்றை செய்யக்கூடாது.

*செய்யக்கூடியவை:*

திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை செய்யலாம். மேலும் இந்த கால கட்டத்தில் அக்னி பகவானை வழிபாடு செய்து நீர்தானம், அன்னதானம், கால் அணிகளை தானம் கொடுப்பது போன்றவை செய்வதன் மூலம் அக்னி தேவனின் ஆசிர்வாதத்தை பெற முடியும். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...