Showing posts with label #Amman #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #Amman #hindu #india #tamilnadu. Show all posts

Friday, August 11, 2023

ஆலயதரிசனம்...கோனியம்மன் திருக்கோயில்..கோவை...

#ஆலயதரிசனம்...

கோனியம்மன் திருக்கோயில்..
கோவை...

1. கோவை நகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில்களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தியின் ஓர் உருவாக கோனியம்மன் அருள்புரிகிறாள்.

2. தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி ஏந்தி உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள்.

3. கோனியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து, சிவனைப் போல இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு.

4. சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை அம்மன் உணர்த்துகிறாள். அம்மனின் சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது.

5. இத்தலத்தில் வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.

6. வேறு எந்த அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடியில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

7. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கு கோனியம்மனை வணங்கி உத்தரவு கேட்ட பின்பே தொடங்குகின்றனர்.

8. கொங்கு நாடு ஆதியில் அடர்ந்த காடாக இருந்தது; இருளர்களின் தலைவன் #கோவன் சீர்படுத்தி கோவை நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

9. ஒரு சமயம் இங்கு பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். நாட்டில் பஞ்சம், பிணிகள் ஏற்படாமல் இருக்க கல் ஒன்றினை அம்மனாக பாவித்து வழிபட்டு வந்தான்.

10. அதன் பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். இருளர்கள் அம்மனை தங்களது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வணங்கினர்.

11. கோவையின் காவல் தெய்வமாக அம்மன் காத்தாள், அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப் பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். 

12. சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரிடம் இருந்து நாட்டை காக்க கோவன்புத்தூரின் மையத்தில் கோட்டை கட்டி, காக்கும் தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். 

13. அந்த அம்மனே கோனியம்மனாக இன்று வழிபடப்படுகிறாள். கோவை நகரில் இங்கு மட்டுமே தேர் திருவிழா நடத்தப்படுகிறது.

14. மாசித்திருவிழாவின் போது சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வார். அப்போது, கோயில் எதிரே யாககுண்டம் வளர்த்து, அக்னியை சிவனாகப் பாவித்து பூஜை செய்வர். 

15. பூஜையில் பயன்பட்ட தீர்த்த கலசத்தின் மேலே வைத்த மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர்.

16. அக்னி வடிவ சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கும்.

17. நோய் நீங்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்கும் மாவிளக்கு, பொங்கல் நேர்ச்சை செய்கின்றனர். இங்குள்ள ஆதிகோனியம்மன் சிலை மார்பளவு உள்ளது. 

18. மாசாணியம்மன், சப்தகன்னியர் மற்றும் காவல் தெய்வங்கள் உள்ளனர். அரச மரத்தின் கீழ் பஞ்சமுக கணபதி பத்து கைகளுடன் காட்சி தருகிறார். 

19. சாந்த விநாயகர், மாகாளியம்மன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதிகளும் உள்ளன.

20. நவக்கிரக சன்னதியிலுள்ள கிரகங்கள் மனைவியருடன் காட்சி தருவது விசேஷம். சூரியன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் வீற்றிருக்கிறார். 

21. தம்பதியர் ஒற்றுமைக்காகவும், சனி, ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தோஷ நிவர்த்திக்காகவும் இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

22. வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. காமிக ஆகமம் முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது.

23. இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

24. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப் பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

25. மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து, அதன் மேலே மஞ்சள், தேங்காய், பூ, பாக்கு, வெற்றிலை வைக்கின்றனர்.

26. கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர். மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டி கொள்கின்றனர்.

27. அம்மனுக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகம், அன்னதானம் செய்கின்றனர். துர்க்கைக்கு பொட்டுத்தாலி செலுத்தி எலுமிச்சை தீபம் ஏற்றுகின்றனர்.

28. அம்மனை குலதெய்வமாக வழிபடுவோர் மாவிளக்கு, பொங்கலிட்டு வேண்டிக் கொள்கின்றனர்.

29. தை வெள்ளி, நவராத்திரி, திருக் கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி. ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

30. ஆலய முகவர் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், பெரியகடை வீதி, கோயம்புத்தூர்...🙏🌹

Thursday, August 10, 2023

சிருங்கேரியில் பிரசித்திபெற்ற சாரதாம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கர பீடத்தின் மீது ஜெபமாலையுடன் சாரதா தேவி

ராசிகளுக்கான கல் தூண்...!

கர்நாடகத்தில் உள்ள புண்ணிய தலங்களில் மிகவும் ஆடம்பரமான விழா நடைபெறும் இடம் சிருங்கேரி. இங்கு 40 கோவில்கள் உள்ளன.
சிக்கமகளூரு மாவட்டம் துங்கபத்ரா நதியின் இடது கரையில் உள்ள சாயாதிரி மலையில் சிருங்கேரி அமைந்துள்ளது. 

இது ரிஷிய சிருங்கர் என்ற மகரிஷி பிறந்த இடமாகும். இங்குள்ள வித்ய சங்கரா கோவிலில் சிவப்பு கல்லில் (ரூபி) வடிவமைக்கப்பட்ட வேணு கோபால் மற்றும் முத்தினால் செய்யப்பட்ட சீனிவாசர், நந்தி சிலைகள் சிற்பக் கலை உள்ள பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோவிலுக்கு செல்ல 6 வாசல்கள் உள்ளன. 12 தூண்கள் கொண்ட மண்டபமும் இங்கு இருக்கிறது. இந்த 12 தூண்களும் 12 ராசிகளுக்கு உரிய தூண்கள் என்று கூறப்படுகிறது. 

இந்தத் தூண்களின் மீது அந்தந்த ராசி களுக்கு உரிய நாட்களில் சூரிய ஒளி விழுவது சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். ஒவ்வொரு தூணிலும் கர்ஜிக்கும் சிங்கத்தின் தலை உள்ளது. அந்த சிங்கங்களின் வாயில் சுழலும் கல் பந்து உள்ளது.

சிருங்கேரியில் பிரசித்திபெற்ற சாரதாம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கர பீடத்தின் மீது ஜெபமாலையுடன் சாரதா தேவி தோளில் கிளி ஒன்ராசிகளுக்கான கல் தூண்...!

கர்நாடகத்தில் உள்ள புண்ணிய தலங்களில் மிகவும் ஆடம்பரமான விழா நடைபெறும் இடம் சிருங்கேரி. இங்கு 40 கோவில்கள் உள்ளன.

சிக்கமகளூரு மாவட்டம் துங்கபத்ரா நதியின் இடது கரையில் உள்ள சாயாதிரி மலையில் சிருங்கேரி அமைந்துள்ளது. 

இது ரிஷிய சிருங்கர் என்ற மகரிஷி பிறந்த இடமாகும். இங்குள்ள வித்ய சங்கரா கோவிலில் சிவப்பு கல்லில் (ரூபி) வடிவமைக்கப்பட்ட வேணு கோபால் மற்றும் முத்தினால் செய்யப்பட்ட சீனிவாசர், நந்தி சிலைகள் சிற்பக் கலை உள்ள பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோவிலுக்கு செல்ல 6 வாசல்கள் உள்ளன. 12 தூண்கள் கொண்ட மண்டபமும் இங்கு இருக்கிறது. இந்த 12 தூண்களும் 12 ராசிகளுக்கு உரிய தூண்கள் என்று கூறப்படுகிறது. 

இந்தத் தூண்களின் மீது அந்தந்த ராசி களுக்கு உரிய நாட்களில் சூரிய ஒளி விழுவது சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். ஒவ்வொரு தூணிலும் கர்ஜிக்கும் சிங்கத்தின் தலை உள்ளது. அந்த சிங்கங்களின் வாயில் சுழலும் கல் பந்து உள்ளது.

சிருங்கேரியில் பிரசித்திபெற்ற சாரதாம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கர பீடத்தின் மீது ஜெபமாலையுடன் சாரதா தேவி தோளில் கிளி ஒன்று நிற்கிறது. முதலில் சந்தன மரத்தால் ஆன சிலையை ஆதிசங்கரர் நிறுவினார். 

போர் நடந்த சமயத்தில் இந்த சிலை சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
14-ம் நூற்றாண்டில் அந்த சிலைமாற்றப்பட்டு,
தங்கத்தினால் ஆன சாரதாதேவி சிலை நிறுவப்பட்டதுறு நிற்கிறது. முதலில் சந்தன மரத்தால் ஆன சிலையை ஆதிசங்கரர் நிறுவினார். 

போர் நடந்த சமயத்தில் இந்த சிலை சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
14-ம் நூற்றாண்டில் அந்த சிலைமாற்றப்பட்டு,
தங்கத்தினால் ஆன சாரதாதேவி சிலை நிறுவப்பட்டது

Monday, June 5, 2023

பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

🚩நவாவரண பூஜை  பற்றி அறிந்து கொள்ளுங்கள்🚩!
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். 

பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.

எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். 

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். 

இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். 

இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. 
இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. 

ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 
9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.

இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. 

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். 

எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.

ஓம் சக்தி பராசக்தி 🙏

Wednesday, May 10, 2023

*அம்மனின் அழகும் அருளும்*வேண்டிய வரமளிக்கும் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன்*

*வேண்டிய வரமளிக்கும் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன்*
சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்பு வாயில் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலையாயது சமயபுரம் மாரியம்மன் கோயில். 

இது, தமிழ் நாட்டின் முக்கிய நகரமும், முற்கால சோழ வளநாட்டின் தலைநகரமும் ஆன, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமயபுரத்து மாரியம்மன், இங்கு, மக்களின் குறைகளை போக்கி வேண்டியவருக்கு வேண்டிய வரமளிக்கும், மகாசக்தியாக, ஆயி மகமாயி, அன்னை பராசக்தியாக கோயில் கொண்டிருக்கிறாள்.

*சமயபுரம் வரலாறு*

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்புத் தோற்றம்தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது.

மேலே குறிப்பிட்ட கால கட்டத்தில் வைணவி என்ற மாரியம்மன் விக்கிரகம் ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஐயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். 

அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். (அது தற்போதுள்ள இனாம் சமயபுரம்).

பிறகு அம்பாளின் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்).

அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அம்பாளின் விக்கிரகத்தை பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அம்பாளை வழிபட்டு அம்பாளுக்கு ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்று பெயரிட்டு வழிபட்டனர்.

*விஜயநகர மன்னர்கள்*

இக்காலத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்கு கோவிலையும் கட்டினார்கள்.

விஜயரெங்க சொக்கநாதர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனிக்கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று, ‘சமயபுரம் மாரியம்மன்’ கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

*அம்மனின் அழகும் அருளும்*

மக்களை இரட்சித்து, வேண்டிய வரங்களைக் கொடுத்து, காத்துவரும் அம்மனின் அழகு தெய்வீகமானது. அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். 

அந்த அழகைக் கண்டால் மனம் உருகும், மனம் ஒருமைப்படும், மனத்திலுள்ள மாசும் அகலும். தாயைத்தேடி அலைந்தவர்க்கு, கருணையே வடிவாக அமர்ந்திருக்கும் தாய், ஆயி மகாமாயி காட்சி தருவாள்.

*ஆடி வெள்ளி*

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளித் திருவிழா நடைபெருகிறது. இதில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 

ஆடி மாதத்தில் எல்ல வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். திருச்சியில் உள்ள அத்தனை பெண்களும் அன்னையை தரிசிக்க கட்டாயமாகச் செல்வர். அதுவும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடுவர்.

*பூச்சொரிதல் விழா*

அன்னையை காண தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.

விழாக்காலங்களில் சொல்ல முடியாத அளவு கூட்டம் வரும். சித்திரைத் தேர்த்திருவிழாவன்று கூட்டம் அலைமோதும். இலட்ச கணக்கில் மக்கள் வருவர். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமே.

ஆயிரம் கண்ணுடையாளை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து அவளை மனம் குளிர தரிசித்து அவளின் ஆசீர்வாதத்துடன் செல்கின்றனர்.

மாரியம்மனுக்கு நாடெங்கும் பக்தர்கள் உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

*சமயபுரத்தின் மற்ற பெயர்கள்*

சமயபரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு கீழ் காணும் பெயர்களும் உண்டு.

கண்ணனூர்

கண்ணபுரம்

விக்ரமபுரம்

மாகாளிபுரம்

*சமயபுரத்தில் உள்ள மற்ற கோவில்கள்*

வடக்கே — செல்லாயி அம்மன் கோவில், போஜீஸ்வரன் கோவில்

கிழக்கே — உஜ்ஜயினி மாகாளி கோவில், முத்தீஸ்வரன் கோவில்

தீர்த்தம் — பெருவளை வாய்க்கால்

தீர்த்தம் — மேற்கே உள்ள மாரி தீர்த்தம் ( தெப்பக்குளம் )

ஸ்தல விருட்சம் — வேப்ப மரம்

Friday, May 5, 2023

🌹சித்ரா பவுர்ணமி🌹🌕🔱ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன்கள்🔱

🌕🌹சித்ரா பவுர்ணமி🌹🌕

🔱ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன்கள்🔱
🪄இச்சா சக்தி🪄
விருப்பங்களை நிறைவேற்றுபவள்,சவுந்தர்யத்தின் இருப்பிடம்,லாவண்யமானவள்,மனதை சுண்டி இழுத்து அதில் எண்ணற்ற கனவுகளை விதைப்பவள்.அமைதிக்கான ஆதாரம்,நமக்கு சவுபாக்கியங்களை தருபவள்.
🪄ஞான சக்தி🪄
அறிவு தருபவள்,சகல வித்தைகளிலும் நமக்கு வெற்றி தருபவள்,நமது புத்தியில் உறைபவள்,கவிதையாக,காவியமாக,சங்கீதமாக அருள்பாலிப்பவள்.
🪄கிரியா சக்தி🪄
வாழ்க்கை வளம்பெற தூண்டி விடுபவள்,துவக்கி வைப்பவள்,ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பவள்.செல்வம்,செல்வாக்கு தந்து சுகமான வாழ்வருளும் சர்வேஸ்வரி.

✨திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும்,
✨வடிவுடையம்மன் ஞான சக்தியாகவும்,
✨கொடியிடையம்மன் கிரியா சக்தியாகவும் திகழ்கிறார்கள்.
🌷இந்த மூன்று அம்மன்களையும் பவுர்ணமி நாளில் வழிபட்டால் நாம் விரும்பும் அனைத்து நடக்கும்.
🌷பவுர்ணமி என்றதும் அனைவருக்கும் கிரிவலம் தான் நினைவுக்கு வரும்.ஆனால்,சித்ரா பவுர்ணமி தினம் கிரிவலத்துக்கு மட்டுமல்ல இதர வழிபாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
🌷குறிப்பாக அம்மன் ஆலயங்களில் வழிபாடு செய்யவும்,புனித நதிகளில் நீராடவும் சித்ரா பவுர்ணமி மிக மிக உகந்த நாளாகும்.
🌷அம்மன் ஆலயங்கள் எத்தனை இருந்தாலும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
🌷திருவுடையம்மன், வடிவுடையம்மன்,கொடியிடையம்மன் ஆகியோரே அந்த மூன்று அம்மன்கள் ஆவார்கள்.
#திருவுடையம்மன் ஆலயம் மீஞ்சூர் அருகே மேலூர் எனும் ஊரில் இருக்கிறது.
#வடிவுடையம்மன் திருவெற்றியூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
#கொடியிடையம்மன் திருமுல்லைவாயலில் ஆலயம் கொண்டு இருக்கிறாள்.
🌷சென்னையை சுற்றி இந்த மூன்று அம்மன்களும் முக்கோண புள்ளிப் போல அமைத்து இருக்கிறார்கள்.
🌷இந்த மூன்று அம்மன்களும் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.இவர்களை ஒரே நாளில் வழிபட வேண்டும்.
🌷அதுவும் காலையில் திருவுடையம்மனையும்,மதியம் வடிவுடையம்மனையும்,மாலையில் கொடியிடையம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
🌷இந்த மூன்று அம்மன் விக்கிரகங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்ட சிறப்புக்குரியவர்கள்.அதன் பின்னணியில்தான் இந்த மூன்று அம்மன்களையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டும் என்ற ஐதீகம் அடங்கி உள்ளது.
🌷இந்த ஐதீகத்துக்கு தொடர்புடைய அந்த வரலாறு வருமாறு:-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது.அந்தப் பகுதியில் ஒரு சிறிய கிராமம் உருவானது.அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வந்தரின் பசு அப்பகுதியில் சுகந்தவனம் என்ற அடர்ந்த காட்டின் உள்ளே சென்று ஒரு மேட்டுப் பகுதியில் பசு தானே பால் சொரிவதையும்,பாம்பு ஒன்று பாலை அருந்துவதையும் அபூர்வ காட்சியாகக் கண்டு மெய்சிலிர்த்தனர்.அந்த முட்புதரை விலக்கிப் பார்த்த போது புற்றானது சிவலிங்க வடிவமாக இருந்தது.சிவபெருமான் புற்று வடிவில் அங்கு வாசம் செய்ததால் ஊர்மக்கள் அவ்விடத்தில் கோவில் கட்டினார்கள்.அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள்.
                 சோழ நாட்டினை ஆண்டு வந்த விக்கிரம சோழ மன்னன் ஒரு தடவை வடநாடு மீது போர் தொடுத்து,வெற்றி பெற்று சுகந்தவனம் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தான்.காலை பூஜைக்காக விசாரித்த மன்னன் சுகந்தீஸ்வரர் (திருமணங்கீஸ்வரரர்)வரலாற்றை அறிந்து,இத்திருக்கோவில் சிவனை வழிபட்ட போது,சக்தி(அம்மன்)இல்லாமல் சிவன் மட்டுமே உள்ளதை கண்டான்.உடனே மன்னன் சிற்பியை அழைத்து,சிவனுக்கு நிகராக சக்தியை,அம்மன் சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டான்.அம்மனை வடிக்க தேர்ந்த கல் ஒன்றைக் கொண்டு வர,சிற்பி அலைந்து திரிந்து மலை உச்சியில் கல் ஒன்றைக் கண்டான்.அதனை கீழே கொண்டு வரும்போது கைபிடி நழுவி உருண்டு விழுந்ததில் கல் உடைந்து மூன்று பாகங்களாக ஆனது.அந்த சிற்பி தான் தவறு செய்து விட்டதாக நினைத்து கையைச் சிதைத்துக் கொள்ள முற்பட்டான்.அப்போது அம்மன் தோன்றி,தவறு உன்னிடம் இல்லை.நான் இங்கு மட்டும் இச்சா சக்தியாக தனித்து இல்லாமல்,ஞான சக்தியாக வடிவுடையம்மனாக(புற்றீஸ்வரர் தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவெற்றியூர்),கிரியாசக்தியாக கொடியிடை அம்மனாக(மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயல்)ஆக முப்பெரும் சக்திகளான வடிவமாக நாம் உருக்கொள்ளவே மூன்று பாகங்கள் ஆனோம்.மூவகை உருவையும் வடித்து மேற்படி திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்து விடுவாயாக என உத்தரவிட்டு மறைந்தாள்.அதன்படி திருப்பணிகள் செய்து,மூன்று அம்மன்களுக்கும் தனி சன்னதிகளாக அமைக்கப்பட்டது.

✨முதல் சக்தியான திருவுடையம்மன் நான்கு கர நாயகி.மேலிருகரங்கில் பாச அங்குசம்,கீழ்வலக்கரம் அபய முத்திரையாகவும்,இடக்கரம் வரஹஸ்தமாகவும் திருக்கோலம் கொண்டு காட்சி தரும் திருமேனியாள்.கருணை வடிவே உருவாகி நிற்கிறாள்.அம்மனின் அழகிய வதனத்தில் என்றும் வாடாத புன்னகை.அன்னையின் ஒரு கரம் ‘என்னைச் சரணடை’ என்பது போல காட்டுகிறது.ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ திருவுடையம்மனை வணங்கி வருபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.புத்திர பாக்கியம் இல்லாதோர் ஸ்ரீதிருவுடையம்மனை ஆறுவாரம் அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.மாணவர்கள் படிப்பிலும்,அறிவிலும்,சிறந்து வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.கடன்,சத்ரு,நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது.முன் ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் சக்தி திருவுடையம்மன் ஆகும்.

✨அடுத்து நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருவெற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆலயம்.பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால்,இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலது புறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது.ஞானசக்தியாக,வடிவுடை நாயகியைத் தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும்.பௌர்ணமிகளில்,அதுவும் வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுவதால் நாள் முழுவதும் நடை திறந்திருக்கிறது.

✨மூன்றாவதாக மாலையில் நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருமுல்லைவாயலில் உள்ள கொடியிடையம்மன் சமேத மாசிலாமணீஸ்வரர் ஆலயம் ஆகும்.திருவொற்றியூரில் இருந்து புறநகர் பகுதியின் வழியாக மிக எளிதாக திருமுல்லைவாயலுக்கு சொல்லலாம்.இத்தலத்தில் நந்தி தேவர் திரும்பிய நிலையில் இருக்கிறார்.மன்னன் வெற்றியின் சின்னமாக அங்கிருந்த வெள்ளெருக்குத் தூண்களைக் கொண்டு வந்து கோவில் கட்டினான்.மன்னன் வாளால் வெட்டிய அடையாளம் தற்போதும் சிவலிங்கத்தில் உள்ளது.எனவே,சந்தனக் காப்புடன் இறைவன் காட்சியளிக்கின்றார்.இத்தலத்து இறைவி கொடியிடை நாயகி கிரியா சக்தியாக அழைக்கப்படுகிறாள்.அசுவினி முதலான் 27 நட்சத்திரங்களும் செய்த பாவம் நீங்க கொடியிடை நாயகியை வணங்கி சாபம் நீங்கிய இடம்.இந்திராணி இத்தலத்து அம்மனை வழிபட்டு இந்திரனை மீளப்பெற்ற தலம்.

🌷வெள்ளிக்கிழமை பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும்,வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால் காசி,இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.

🙏🌕ௐ சக்தி பராசக்தி🌕🙏
🙏🌹#சர்வம் #சக்திமயம்🌹🙏

Followers

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் பலன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள எட்டு திசை லிங்கங்களே (அஷ்ட லிங்கங்கள்) நவகிரக தோஷங்...