Showing posts with label Arulmigu Meenakshi Sundareswarar #Arulmigu Meenakshi Amman #sivanThirukkovil #Hindu temple #Vaigai River #tamilnadu #india #temple city Madurai. Show all posts
Showing posts with label Arulmigu Meenakshi Sundareswarar #Arulmigu Meenakshi Amman #sivanThirukkovil #Hindu temple #Vaigai River #tamilnadu #india #temple city Madurai. Show all posts

Saturday, April 20, 2024

மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏன்❓

மதுரை சித்திரை திருவிழா முக்கிய திருவிழாவாக மதுரை மீனாட்சி அம்மன்  திருக்கல்யாணம்: வீட்டில் திருமாங்கல்யம் மாற்றிக் கொள்ளும் நேரம்- நடைமுறை
மதுரை என்றதுமே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். மதுரை ஊரெங்கும் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனிதான். ஈசன் தன் திருவிளையாடல்கள் பல நிகழ்த்தியதும் இந்தக் கோயிலைச் சுற்றித்தான்.

தேசம் முழுவதும் தன் ஆளுகைக்கு உட்படுத்த திக்விஜயம் செய்த மீனாட்சி, கயிலையில் ஈசனைக் கண்டதும் அவரை மணந்துகொள்ள விரும்பினார்.

மீனாட்சியின் விருப்பத்தை நிறைவேற்றத் திருவுள்ளம் கொண்ட ஈசனும் சௌந்திரபாண்டியனாக மதுரைக்கு வந்து மீனாட்சியை மணம் புரிந்துகொள்வார். அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு, மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  கோலாகலமாக நடக்கிறது.


மங்களகரமான இந்த நாளில் புதுத் தாலிக் கயிறு மாற்றிக்கொண்டால், மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

வீட்டில் திருமாங்கல்யம் மாற்றிக் கொள்ளும் நேரம், நடைமுறை குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி யின் சொற்பொழிவு


உங்களுடைய தாலியை கழுத்தில் கட்டிக் கொண்டவுடன், கழுத்தில் இருக்கும் மஞ்சள் சரடை கழட்டி பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.  அம்பாளுக்கு உங்களால் முடிந்த பிரசாதத்தை நிவேதியம் செய்து, மனமுருக வழிபடுங்கள்.

அந்த அம்பாளின் ஆசிர்வாதத்தால் நம்முடைய குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு இன்னும் வளம்பெறும் என்பது ஐதீகம்.

ஓம்நமசிவாய
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...