Showing posts with label #birthday thithei #Hindu festival #Thanjavur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #birthday thithei #Hindu festival #Thanjavur #Tamil Nadu #India. Show all posts

Wednesday, December 11, 2024

நீங்கள் பிறந்த திதியின் ரகசியம் என்ன❓

 திதி தேவதை வழிபாடு பற்றிய பதிவுகள் :*
நாம் அனைவரும் பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் இராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம்.
ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம்.



கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதியை வைத்து அதற்குண்டான திதி தேவதைகளின் படத்தை பார்த்து அதற்கான ஸ்லோகம் கூறி வந்தால் நாம் நம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க முடியும்.

இதைதான் விதி படி சிறப்பாக வாழ திதி தேவதை வழிபாடு அவசியம் என் நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்.
உங்களுக்குண்டான பிறந்த திதியை வைத்து நீங்கள் செய்யும் முயற்சிகள் எல்லாவற்றிலும் நிச்சயம் பிரமாண்ட வெற்றிகள் கிடைக்கும்.

மஹாநித்யாவாகிய அம்பிகையின் கலைகளில் தோன்றும் பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும் ஒரு நாளாக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர். இந்த திதி தேவிகளின் அடிப்படையில்தான் தெய்வங்களுக்கும் தென்புலத்தார்க்கும் (இறந்த பெரியவர்கள்/முன்னோர்கள்) வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

திதிகள் மொத்தம் 15 உண்டு. அவை,

1.பௌர்ணமி
2.சதுர்த்தசி
3.த்ரயோதசி
4.த்வாதசி
5.ஏகாதசி
6.தசமி
7.நவமி
8.அஷ்டமி
9.ஸப்தமி
10.ஷஷ்டி
11.பஞ்சமி
12.சதுர்த்தி
13.த்ருதீயை
14.பிரதமை / த்விதீயை
15.அம்மாவாசை

இந்த திதிகள் வளர்பிறையில் 15 திதி மற்றும் தேய்பிறையில் 15 திதி என்றவாறு மாறி மாறி வரும்.

வளர்பிறை என்றாலும் சுக்லபட்சம் என்றாலும் பூர்வ பட்சம் என்றாலும் ஒன்றுதான். தேய்பிறை என்றாலும் கிருஷ்ணபட்சம் என்றாலும் அமர பட்சம் என்றாலும் ஒன்றுதான்.

வளர்பிறையில் வரும் திதிக்கும் தேய்பிறையில் வரும் திதிக்கும் தேவதைகள் மற்றும் ஸ்லோகங்கள் வேறுபடும். உங்கள் ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரம், இராசி, லக்னத்திற்கு கீழ் நீங்கள் பிறந்த திதி குறிப்பிடப்பட்டு இருக்கும் 

சுக்குல பட்சத்தில் ஒன்னாம் நித்திய தேவியிலிருந்தும் கிருஷ்ணபட்சத்தில் 15 ஆம் நித்திய தேவியில் இருந்தும் பூஜை செய்ய வேண்டும்.

அம்மாவாசை மற்றும் பௌர்ணமி அன்று வாரகிமாதாங்கி உடன் கூடிய மகா நித்தியான லலிதா பரமேஸ்வரி வழிபட வேண்டும்.

ஒவ்வொரு துதிக்கும் ஒரு தேவதை உண்டு. அவை,

1. அமாவாசைக்கு பித்ருக்கள்,
2. பிரதமைக்கு அக்னி,
3. த்விதியைக்கு பிரம்மா,
4. த்ரிதியைக்கு பார்வதி,
5. சதுர்த்திக்கு கணபதி,
6. பஞ்சமிக்கு நாகராஜா,
7. சஷ்டிக்கு முருகப்பெருமான்,
8. சப்தமிக்கு சூரியன்,
9. அஷ்டமிக்கு ஈசன்,
10. நவமிக்கு அஷ்டவசுக்கள்,
11. தசமிக்கு திக்கஜங்கள்,
12. ஏகாதசிக்கு யமதர்மராஜன்,
13. த்வாதசிக்கு திருமால்,
14. த்ரயோதசிக்கு மன்மதன்,
15. சதுர்த்தசிக்கு கலிபுருஷன்,
16. பெளர்ணமிக்கு சந்திரன்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Followers

பாரிஜாத வனேஸ்வரர் திருக்களர் திருவாரூர்.

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,  திருக்களர்,  திருவாரூர்.  திருவாரூர் மாவட்டம். +91- 4367 – 279 374 (மாற்றங்களுக்குட்பட...