Showing posts with label #sayadevi Kovil #Hindu temple #someshwarar #Sivan temple #Hyderabad #Telangana #India. Show all posts
Showing posts with label #sayadevi Kovil #Hindu temple #someshwarar #Sivan temple #Hyderabad #Telangana #India. Show all posts

Monday, April 28, 2025

கடவுள் நிழல்களின் தெய்வம் என்று அழைக்கப்படும் கோவில்

_சாயா தேவி வணங்கும் நிழல் மர்மங்கள் நிறைந்த சாயா சோமேஸ்வரர் கோயில்
ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் பனகல் என்ற ஊரின் தென்பகுதியில் சாயா சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.



கோவிலின் கிழக்கே, வற்றாத திருக்குளம் உள்ளது. இதற்கான நீர், ஸ்ரீசைலத்தில் இருந்து பனகல் உதய சமுத்திரம் ஏரிக்கு வந்து, அதிலிருந்து இத்திருக்குளத்திற்கு வந்து சேருகின்றது. 

கோவிலின் வாசல் மூன்று புறம் இருந்தாலும், தெற்கு வாசலை நோக்கியே ஆலய நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாயா சோமேஸ்வரர் கோவிலில் பல மர்மங்கள் அடங்கியுள்ளது.

10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்டபட்ட இந்த கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளது. அந்த மூன்று கருவறைகளில் மூன்று விதமான மர்ம நிழல்கள் உள்ளன.


1 ) லிங்க கருவறை

இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால், காலைமுதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது.

அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்துகொண்டே போகும் அது தான் உலக நியதி. அனால் இங்கு சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது.

இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. அனால் கருவறையில் விழும் நிழல் எந்த தூணிற்கானது என்று கண்டறியவே முடியவில்லை.

எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் நிழல் மட்டுமே கருவறையில் விழுகிறதே தவிர நமது நிழல் விழுவதில்லை.


2 ) பிரம்மா கருவறை

இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவர் தன்னுடைய நான்கு நிழல்களை பார்க்க முடியும். எப்படி ஒரு உருவத்திற்கு நான்கு நிழல்கள் விழுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.


3 ) லிங்க கருவறை

இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவரது நிழல் எப்பொழுதும் அவருக்கு எதிர் திசையிலே விழும். நிழல் எப்படி எப்போதும் எதிர் திசையிலே விழுகிறது என்பது கணிக்கமுடியாத ஒன்றாகவே உள்ளது.

சாயா என்றால் நிழல் என்று பொருள் அதனால் தான் இந்த கோயிலிற்கு சாயா சோமேஸ்வரர் என்று பெயர்வந்துள்ளது.

நிழலை வைத்து பல மர்மங்களோடு இந்த கோவிலை கட்டியுள்ளதால், இந்த கோயிலின் கடவுள் நிழல்களின் தெய்வம் என்றே அழைக்கப்படுகிறார்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...