Showing posts with label #Sri Subramanya desighar #Jeeva Samadhi #thiruvathigai #Panruti #Sivan temple #Tamilnadu #hindu India. Show all posts
Showing posts with label #Sri Subramanya desighar #Jeeva Samadhi #thiruvathigai #Panruti #Sivan temple #Tamilnadu #hindu India. Show all posts

Tuesday, July 16, 2024

திருவதிகை வீரட்டானேசுவரர். ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் சுவாமிகள் ஜீவசமாதி...



திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும்.இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்
மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.

இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு :

சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் . திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.

வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன்,வெள்ளி,

இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.

இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர்.

தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி

பிரம்மாவை சாரதியாக்கி சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.

அச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின.

தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து சிவபெருமான் வில், அம்பு என எதையும் பயன்படுத்தாமல் அசுரர்களை பார்த்து சிரித்தார்.
அசுரர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்களின் உதவி இல்லாமல் ,அசுரர்களை அழித்ததை கண்ட தேவர்கள் தலைகுனிந்தனர். இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

கோவில் அமைப்பு :

கோவில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும் 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது.

கோவிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள்.

இறைவன் தேரில் வந்ததால் இந்த திருக்கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.

இத்திருக்கோவிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில்
தஞ்சை பெரிய கோவிலை கட்டினார்.

திவதிகை கோவிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இக்கோவில் கட்டப்பட்டது.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம் இது தான்.

இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம் அழியும்,நல்ல வேலை மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் பெருகவும் மக்கள் இந்த சிவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

அம்பாள் சன்னிதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பாகும்.

திருநாவுக்கரசர் :

சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.இவர் முதன்முதலில் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த
தலம்.

அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்த தலம்.

ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.

திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் “சூலை தந்து ஆட்கொள்வோம்” என்று பதிலுறைத்த பதி.

இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.

இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான்.திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது.

இப்பகுதியில் புத்தமதம் சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோயிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது.

*ஆனி விசாகம் குருபூஜை*
         *ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் சுவாமிகள் மாதாந்திர குருபூஜையை முன்னிட்டு அபிஷேகம் , தீபாரதனை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சற்குரு தேசிகர் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 
திருவதிகை மாட வீதியில் அமைந்துள்ள   ஸ்ரீசுப்பிரமணியதேசிகர் சித்தர் கோவில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது பல ஆன்மீக அன்பர்களின் உதவியால் 50% பணிகள் நிறைவடைந்து விட்டது மீதமுள்ள பணிகளை விரைந்து செய்துமுடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற அன்பர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து குருவருள் பெற வேண்டுகிறோம்....

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்...

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...