Showing posts with label #Mattu Pongal #Hindu India #Tamil Nadu #Pongal culture. Show all posts
Showing posts with label #Mattu Pongal #Hindu India #Tamil Nadu #Pongal culture. Show all posts

Tuesday, January 16, 2024

மாட்டு பொங்கல் முதலில் உனக்கு.....

வயலில் உழுது
கொண்டிருந்தார் அந்த விவசாயி.
காளைக்கு கஷ்டந் தெரியக்கூடா தென்பதற்காக
அதனுடன் பேசிக்
கொண்டே உழுதார்.
மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத் தொழில்ல
நீதான் முன்னாடி நான் பின்னாடிதான்.
முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொன்னார்.

அடடா.. இந்த மனித
ஜாதிதான் எவ்வளவு மேலானது என்று நினைத்து சிலிர்த்துப் போனது காளை.

விவசாயி தொடர்ந்தார்.
நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி.

அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி எனக்கு பாதி.

காளைக்கு தலைச் சுற்றியது.
எவ்வளவு நேர்மை..!
பாதிக்குப்பாதி பங்குதர யாருக்கு மனசுவரும்..!

பாதிப்பாதின்னா எப்படி பங்கு வைக்கலாம்?நீ முன்னால போறதால முன்னால கிடைக்குறது உனக்கு. பின்னால கிடைக்குறது எனக்கு. சரியா? என்றார் விவசாயி.

முன்னால வர்றது எல்லாமே எனக்கா..!
பெருமிதமாய் பார்த்தது காளை.

விதைவிதைத்து
நாற்றுநட்டு சில காலத்தில் பச்சைப்பசேலென்று மாறியிருந்தது வயல்.
மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில்.விவசாயியை பார்த்தது.

முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு.இதுல அப்புறமா ஒன்னு வரும்.
அதுமட்டும் எனக்கு.
சரியென்று தலையாட்டியது காளை.

கொஞ்ச நாட்களில் நெற்கதிர்கள் குதிரைவால் போல விளைந்து தரை பார்த்துக் கிடந்தன.

அறுவடைநாள் வந்தது.
முதலில் வந்த வைக்கோல் காளைக்கு.பின்னர் வந்த நெல் விவசாயிக்கு.

மாடு கோர்ட்டுக்கா போக
முடியும்..?
பாகப்பிரிவினையில் அநீதியுள்ளதென்று பரிதாபமாய் பார்த்தது காளை.கவலைப்
படாதே நெல்லிலும் பங்குதர்றேன்.
அதிலும் நமக்கு பாதிப்பாதி.
சோகத்துடன் தலையாட்டியது காளை.

நெல்லை உலர வைத்து
அரைத்துப் புடைத்ததும்
உமியும் தவிடும் முன்னால் வந்தது.
அது காளைக்கு.
பின்னால் வந்த முத்துமுத்தான அரிசி முழுமையும் மனிதனுக்கு.
இந்த பங்கீட்டிலும் நியாயமில்லையென்று கண்ணீர் விட்டது காளை.

அழுவாதே.இந்த அரிசியிலும் உனக்கு பாதி எனக்கு பாதி.

சரியா? என்றார்
விவசாயி.

அதற்கும் சரியென்று தலையாட்டிய அந்த வாயில்லா ஜீவன்,
அரிசியை நோக்கிச்
சென்றது.

பொறு.,,,,அரிசியை சோறாக்கி, அதில் முதலில் வருவது உனக்குதான்.
அடுத்து வருவதுதான் எனக்கு.
சோகத்துடன் தலையாட்டியது காளை.

அரிசியை சோறாக்கி வடித்த போது
முதலில் வந்த சோற்றுக்
கஞ்சி காளைக்கு.
அடுத்து வந்த சோறு மனிதனுக்கு.
காளை முரண்டு பிடித்தது.

இந்த முறை,
முன்னால மனிதனுக்கு
பின்னால மாட்டுக்கு என்று ஒப்பந்தத்தை மாற்றும் படி கெஞ்சியழுதது.

சரியென்று ஏற்றுக்
கொண்ட விவசாயி அப்படியே செய்தார்.
பொங்கல் திருவிழா வந்தது.

*முதலில் வந்த *பொங்கல்* மனிதனுக்கு
அடுத்து வந்த பொங்கல் *மாட்டுப் பொங்கல்*   

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...