Monday, September 15, 2025

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் 
வடக்கில் இருக்கும் போது ......
தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?
..
வடக்கில் இருப்பது பூலோக கயிலாயம். சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் .. எல்லா உலகங்களுக்கும் மேலான இடம்... 
மோட்சம் எனப்படும் வீடுபேறு அங்கே தான் உள்ளது.
..
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.ஆனால் இங்கே மாணிக்கவாசகரோ எந்நாட்டவர்க்கும் இறைவா என்று கூறினாலும், இறைவனை தென்னாடுடையவன் என்று சிறப்பாகக் கூறுகின்றார்.அவரின் இந்தக் கூற்று சரியான ஒன்றா..?
..
முக்தி தரவல்ல தலங்கள் நான்கில் காசி ஒன்றைத் தவிர மற்ற மூன்றும் தெற்கே தான் உள்ளன. திருவாரூர் - பிறக்க முக்தி தருவது, சிதம்பரம் - தரிசிக்க முக்தி தருவது, திருவண்ணாமலை - நினைக்க முக்தி தருவது, காசி - இறக்க முக்தி தருவது.
..
மாணிக்கவாசகர் தமிழகத்தை சேர்ந்தவர்… அதனால் அவர் ’தென்னாடுடைய சிவனே’ என்று கூறி இருக்கின்றார்… இதுவே ஒரு வடநாட்டினைச் சேர்ந்த ஒருவர் எழுதி இருந்தால் அவர் ‘வடநாட்டினை உடைய சிவனே” என்று தான் கூறி இருப்பார். அப்படி என்றால் இறைவன் வடநாட்டினை மட்டும் சேர்ந்தவர் ஆகி விடுவாரா?… இறைவன் முழு உலகத்திற்கும் உடையவர்” அல்லவா?
..
ஒரு கருத்து உண்மையான கருத்து ஆக வேண்டும் என்றால் அது எல்லா நிலையிலிலும் நிலைத்து நிற்கவேண்டும்.எல்லா நிலைக்கு மட்டுமல்ல எல்லா காலத்திற்கும் அது பொருந்த வேண்டும்.
..
இப்பொழுது ‘தென்னாடுடைய’ என்னும் சொல் ‘தெற்குத் திசையில் உள்ள ஒரு நாட்டினைக்’ குறிப்பதாக இருந்தால் அந்த நாடு இடத்திற்கு இடம் மாறுபடுவதாக அமைந்து விடும் அல்லவா ...?
..
சீனத்திற்கு தென்னாடு வடஇந்தியா....
வடஇந்தியாவிற்கு தென்னாடு தமிழகம்.....
தமிழகத்திற்கு தென்னாடு ஆப்பிரிக்கா....
இப்படியே அந்தக் கருத்து அர்த்தமில்லாத ஒரு கருத்து ஆகி விடும்.
..
எனவே மாணிக்கவாசகர் அந்த அர்த்தத்தினில் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை பயன் படுத்தவில்லை.மாணிக்கவாசகர் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை ‘தென்னவனின் நாட்டினைச் சிறப்பாக உடைய’ என்னும் அர்த்தத்தினில் பயன் படுத்தி இருக்கின்றார்.
..
"தென்னவன் சேரலன் சோழன் சீர்பதங்கள் வரக்கூவாய்” (திருவாசகம், குயிற்பத்து) என்பதில் தெளிவாக தெற்கு என்பது பாண்டி நாட்டைக் குறிக்கிறது.
..
பாண்டியன் என்பதின் அர்த்தம் ‘பழைய நாட்டினை ஆண்ட மன்னன்’ என்பதே ஆகும். ‘பாண்டி’ என்றால் ‘பழைய’ என்றும் தமிழில் அர்த்தம் இருக்கின்றது.
..
எனவே ‘தென்னாடு’ என்றால் ‘பாண்டியனால் ஆளப்பட்ட பழைய நாடே ஆகும்’. சிவன் அந்த நாட்டினில் சிறப்பாக இருக்கின்றார் என்றே மாணிக்கவாசகர் கூறுகின்றார்.
..
“பழைய நாடா ?” - பாண்டியன் மதுரையை அல்லவா ஆண்டான் என்று கூறுபவர்களுக்கு, இப்பொழுது இருக்கும் மதுரை மூன்றாவது மதுரை. இதற்கு முன்னர் இருந்த இரு மதுரைகள் கடற்கோள்களினால் அழிந்துப் போயின. அது வரலாறு!!! குமரிக்கண்ட வரலாறு!!!
.. 
மாணிக்கவாசகர் ‘தென்னாடு’ என்றுக் குறிப்பிடுவதும் இந்த குமரிக் கண்டத்தையேதான்.
..
ஏன் சிவனை ‘குமரிக்கண்டத்தை சிறப்பாக உடையவன்’ என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறாரெனில், இறைவன் மனிதனை முதன் முதலில் படைத்தது இக்கண்டத்திலேயே தான். இதனை குமரிக்கண்ட வரலாற்றில் காணலாம்.
..
வடக்கு, தெற்கு பிரச்சனை வழிபாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் மாணிக்கவாசகர் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடினார்..!
 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...