Showing posts with label #mukthi thalangal #thruvaror #chdambaram #kasi #thruprundurai #thruvanamali #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #mukthi thalangal #thruvaror #chdambaram #kasi #thruprundurai #thruvanamali #hindu #india #tamilnadu. Show all posts

Tuesday, March 5, 2024

முக்தித் தலங்கள்* *ஐந்து*

*முக்தித் தலங்கள்* *ஐந்து* 
பிறவி நோய் உள்ளவர்களை வழிபடாமல்  பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தீஸ்வரரை வைதீஸ்வரரை வழிபடும் மெய்யடியார்களுக்கு       பிறப்பு இறப்பு நீக்கிப் பிறவா நிலையாகிய  பேரின்பம் அளித்து சிவ லோகத்தில் சேர்க்கும் ஈசனுக்கு முத்தன் முக்தீஸ்வரன் என்று திருநாமங்கள்.

*முத்தி தந்து இந்த மூவுலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் அத்தன்* 

*செடி சேர் உடலைச் செல நீக்கிச் சிவ லோகத்தே நமை வைப்பான்*
(திருவாசகம்) 

*முத்தன் முத்தி வழங்கும் பிரான்* ( திருக்கோவையார்) 

என  அடியார்களுக்கு முக்தி அருளும் பல தலங்களில் 
 திருவாரூர், திருவண்ணாமலை ,
திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்,
சிதம்பரம் ,
காசி
ஆகிய  *ஐந்து தலங்கள் முக்தித்  தலங்கள் என்று புகழ் பெற்றன*.

திருவாரூரில் பிறக்க 
திருவண்ணா மலையை நினைக்க
திருப்பெருந்துறையை 
வாழ்த்த
சிதம்பரத்தை தரிசிக்க
காசியில் இறக்க முக்தி உண்டாகின்றது.

1 *திருவாரூர்*

பிறந்த நாள் காண்பவர் எல்லாம் பிறந்தவர் அல்லர். 
ஈசனை நாள்தோறும் நினைந்து  சிவ மகிமை போற்றி வாழ்பவரே  பிறந்தவர். 
*பரமேஸ்வரனைப் போற்றாத நாள் யாவும் பிறவா நாளே*.   

*பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே*(அப்பர்) 

என  திருவாரூரில் பிறந்தும்  *ஈசன் நாமம் பேசத் தெரியாதவர்கள் பிறக்காதவர்களே*. 
      ஆதலால் அவர்களுக்கு முக்தி இல்லை.  

2 *திருவண்ணாமலை*

*நீதியே நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே*(அப்பர்) 

*மறவாதே நினைக்கின்றேன் மனத்து  உன்னை*(சுந்தரர்)  

என  பிற நினைவு இல்லாமல் சிவ நினைவு நீங்காமல் *அண்ணா மலையாரை மட்டுமே  நினைத்து வாழ்பவருக்கு  முக்தி அருளும் தலம்* திருவண்ணாமலை 

திருவண்ணா மலையில் பிறந்து வளர்ந்தும் *அண்ணா மலையார் கோயிலுக்குச் சென்றும்* *அண்ணாமலையார் பற்றிய நினைவே இல்லாமல்* கோபுர வாசலில் உள்ள உருவங்களையும்   சந்நிதிகளையும் பாடி வாழ்ந்த *துர்பாக்கிய மனிதர் அருணகிரி நாதர்*.  

எங்கோ மதுரை அருகே திருச் சுழியலில் பிறந்த *ரமணர்  அண்ணா மலையை நினைத்துக் கொண்டு வந்து இறுதி மூச்சு வரை  *அருணாச்சலா அருணாச்சலா* என்று வாழ்ந்தார். 

⚜️ *பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப் பெற்றேன்*  (சுந்தரர்) 

என *இது அவர் செய்த பாக்கியம் . புண்ணியப் பலன்*

3 *திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில்* .

*பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக் கருவும் கெடும் பிறவிக் காடு*(திருவாசகம்) 

என  *மாணிக்க வாசகரை ஆட்கொண்ட* *தட்சிணா மூர்த்தி*  திருப் பெருந்துறை *ஆளுடை நாயகனைப் போற்றி*  வணங்குபவருக்குப் பிறவி இல்லாத முக்தி உண்டாகிறது.   

*அடியோம் அடிக்குடில் ஒருத்தரும்  வழாமை ஒடுக்கினன்*

என  மாணிக்க வாசகர் குடும்பம் முழுவதும் திருப்பெருந்துறையில் தோன்றிய பரஞ்சோதியில் புகுந்து முக்தி பெற்றனர்.

 *4. சிதம்பரம்* 

*அப்பனாய் அம்மையாய் இருபால் அம்மை யப்பனாய் அருள் பொழியும்* 
நடராஜரை தரிசித்து  அவரைப் பார்த்த கண்ணால் *வேறு யாரையும் தரிசிக்காமல்  சிவ தரிசனம் மட்டுமே செய்து வழிபடுபவருக்கு முக்தி அருளும்* தலம் சிதம்பரம்.

 *கண் கொண்டு  காண்பது  என்னே* ? 

என்று இதை ஒரு பதிகம் முழுவதும் திருநாவுக்கரசர் கூறுகிறார்.  

*அம்மை குலாத் தில்லை ஆண்டானை*( திருவாசகம்) 

*பெண்ணுமாய் ஆணும் ஆகிப்   போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி*(சேக்கிழார்) 

*முத்தன் முத்தி வழங்கும் பிரான் எரி யாடி*
(திருக்கோவையார்) .


 5.*காசி* 

*சிவ நாமம் ஓதி இறப்பவருக்கு* முக்தி அருள்வது காசி. 

        *பறக்கின்ற ஒன்று* பயன் உற வேண்டில் 
         **இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்* 
         *சிறப்பொடு சேரும் சிவ கதி* 
பின்னைப் 
            *பிறப்பு ஒன்று இலாமையும்  பேருலகு ஆமே* ( திருமந்திரம் ) 

என  *சிவ நினைவோடு பிரியும் உயிர்களுக்கு இனிய முக்தி வழங்குவதால்* அவி முக்தம் என்று காசிக்குப் பெயர்.  
ராமன்  அதாவது ரம்மியமானவன் (இனியன்)  என்று விஸ்வ நாதருக்குத் திரு நாமம் .

மதுரையில் பரிமேல் அழகன் மறைந்த பின் உண்டான  அருள் ஜோதியில் மாணிக்க வாசகர்  அன்பர்களைப் புகுவித்து யாத்திரைப் பதிகம் பாடி முக்தி அடையச் செய்தார்.

நல்லூர்ப் பெருமணம் எனப்பட்ட ஆச்சாள் புரத்தில் திரு ஞான சம்பந்தர் தன் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் பரஞ்சோதியில் புகுவித்து முக்தி அடையச் செய்து நமசிவாயப் பதிகம் பாடினார்.
 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,  திருப்பெரும்புலியூர்,  தஞ்சாவூர் மாவட்டம்-613204 *மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர் *இறைவி:...