Showing posts with label #Varahi #Brahmi #Kumari #Shakti temple #Hindu temple #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #Varahi #Brahmi #Kumari #Shakti temple #Hindu temple #Tamilnadu #India. Show all posts

Tuesday, March 18, 2025

எட்டு திசை சக்திகள்

எட்டு திசை சக்திகள்

1. கிழக்கு - பிராம்மி
2. தென்கிழக்கு - கௌமாரி
3. தெற்கு - வராஹி
4. தென்மேற்கு - சியாமளா
5. மேற்கு - வைஷ்ணவி
6. வடமேற்கு - இந்திராணி
7. வடக்கு - சாமுண்டி
8. வடகிழக்கு - மகேஸ்வரி

பிராம்மி: பிரம்ம தேவரின் அம்சமும் சக்தி வடிவமே பிராம்மி என்று
அழைக்கப்படுகிறாள். கிழக்கு திசையின் சக்தி வடிவம். பிராமி சக்தியை வணங்குவதால் குழந்தைப் பேறும், கலை ஞானமும் உண்டாகும்.

கௌமாரி: சரவணனின் அம்சமாக அவதரித்தவள் கௌமாரி என்று அழைக்கப் படுகிறாள். தென் கிழக்கு திசையின் சக்தி வடிவம். கௌமாரி தேவியை வழிபடுவதால் பதவி உயர்வும் மனதில்
இருக்கும் பயமும் அகலும்.

வராஹி: விஷ்ணுவின் அவதாரமான வராக மூர்த்தியின் அம்சமாக இருப்பவர் வராஹி. தெற்கு திசையின் சக்தி வடிவம். வராஹி தேவியை வணங்கி வருவதால் எதிரிகளை அழித்து வெற்றி கொள்ளலாம். மனதில் தைரியம் பிறக்கும்.

சியாமளா: மீனாட்சி அம்மனின் அவதாரமாக திகழ்பவள் சியாமளா தேவி.
தென் மேற்கு திசையின் சக்தி வடிவம். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் தேர்ச்சி மற்றும் அறிவுக்கூர்மை உண்டாகும்.

வைஷ்ணவி: விஷ்ணுவின் அம்சமாக தோன்றியவர். நாராயணி என்றும் அழைக்கப் படுபவள். மேற்கு திசையின் சக்தி வடிவம். வைஷ்ணவியை வழிபடுவதால் உடல் ஆரோக்கியமும் எண்ணங்களில் மேன்மையும் உண்டாகும்.

இந்திராணி: தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் அம்சமாக தோன்றியவர் இந்திராணி. வடமேற்கு திசையின் சக்தி வடிவம். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கை துணை அமைத்து தருவார். பணத் தட்டுப்பாடு குறையும்.

சாமுண்டி: ருத்தரனின் அம்சமாக தோன்றியவர். எந்த விதமான சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதவர். வடக்கு திசையும் சக்தி வடிவம். சாமுண்டியை வணங்கி வருவதால் எடுத்த செயலில் எவ்விதமான இன்னலும் இன்றி வெற்றியும், பாதுகாப்பும் உண்டாகும்.

மகேஸ்வரி: சிவபெருமானின் அம்சமாக திகழக்கூடியவர் மகேஸ்வரி. வடகிழக்கு திசையின் சக்தி வடிவம். மகேஸ்வரியை வழிபடுவதால்  ஐயங்கள் மற்றும் கோபம் நீங்கும். சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடியவர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...