Showing posts with label #Maha Shivaratri #Sivan temple #Hindu festival #Tiruvannamalai #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Maha Shivaratri #Sivan temple #Hindu festival #Tiruvannamalai #Tamil Nadu #India. Show all posts

Saturday, February 22, 2025

மஹா சிவராத்திரி முழுவதும் விரதம் இருந்து வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.

மஹா சிவராத்திரி வழிபாடு பற்றிய பதிவுகள் 
சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாள் மஹா சிவராத்திரி தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் மஹா சிவராத்திரி விழா கொண்டாப்படுகிறது. 

சிவ பெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளையே மஹா சிவராத்திரி தினமாக கொண்டாடுவதாக புராணங்கள் சொல்கின்றன. 

இந்த நாளில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் மாலை துவங்கி, இரவு முழுவதும் சிவ பெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும்.

மஹா சிவராத்திரி அன்று நாள் முழுவதும் சிவனை வேண்டி விரதம் இருந்து, வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். துன்பங்கள் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

சிவ பெருமானின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக மஹாசிவராத்திரி விழா கருதப்படுகிறது. அதுவும் மஹா சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிவ பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் அப்படியே நடக்கும்.

சிவ பெருமானை, காலத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுவது உண்டு. அதனால் சிவ வழிபாடு செய்வதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டியது கிடையாது. ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட எந்த கெட்ட நேரங்களின் பாதிப்பும் சிவ வழிபாட்டை பாதிக்க முடியாது. 

மஹா சிவராத்திரி பூஜைகள் என்பது மாலை 6 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை 06.30 வரை நடைபெறும். மொத்தம் நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கால பூஜையும் சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும்.

மஹா சிவராத்திரியின் நான்கு கால பூஜைகளில் மிகவும் முக்கியமானது மூன்றாம் கால பூஜை தான். இது நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, அதிகாலை 3 மணி வரை நடைபெறும். இந்த மூன்றாம் காலத்தின் முதல் 50 நிமிடங்கள் மிக மிக முக்கியமானதாகும். 



இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைக்கு நிஷித கால பூஜை என்று பெயர். இது தான் சிவ பெருமானை வழிபடுவதற்கு மிக மிக ஏற்ற நேரமாகும். இந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மஹா சிவராத்திரி அமைந்துள்ளது. அன்றைய தினம் இரவு 12.09 முதல் 12.59 வரையிலான நேரத்தில் சிவனிடம் நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நடைபெறும்.

மஹா சிவராத்திரி பூஜையில் மூன்றாம் கால பூஜை என்பது பார்வதி தேவி, சிவ பெருமானை வழிபட்ட காலமாகும். அந்த சமயத்தில் நாமும் வழிபட்டால் சிவபெருமானின் அருளும், பார்வதி தேவியின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

மஹா சிவராத்திரி விரதம் பிப்ரவரி 27ம் தேதி காலையில் தான் நிறைவடையும். அதனால் அன்று காலை 7 மணிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வதால் செல்வ வளமும், சிவ பெருமானின் அருளும் கிடைக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...