Showing posts with label #Vellieswarar Temple #Sivan temple #Hindu temple #Mylapore #Chennai #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Vellieswarar Temple #Sivan temple #Hindu temple #Mylapore #Chennai #Tamil Nadu #India. Show all posts

Monday, August 25, 2025

கண் நோய்கள் (குருடர்கள்) – சென்னை சிவன் கோயில், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயம்,


 1)கங்கை போன்ற புனித நிதிகளின் நீரில் உணவைச் சமைத்தால் அது மேலும் புனிதமாகிறது. 
கங்கை நீரைக் கொதிக்க வைக்கும் போது கங்கை உற்பத்தி ஸ்தலமான கோமுக் புனிதஸ்தலத்தில் அபூர்வமாகக் காணப்படும் வெந்நீர் ஊற்றிலிருந்து வரும் நீரின் தெய்வீகத் தன்மையை அது பெறுகிறது. 

இது கங்கை நீரை விடப் பன்மடங்கு புனிதமானதாகும். 

எனவே புனிதமான கங்கை நீரில் சமைத்த பிரசாதத்தை ஏழைகளுக்கு அளிப்பது மிகவும் விசேஷமானதல்லவா! அல்லது பிரசாதத்தில் சிறிது கங்கை நீரையேனும் சேர்க்கலாம்!

2)சில கோயில்களின் மூலவர்கள் குறிப்பிட்ட வியாதிகள் குணமாவதற்கென விசேஷ அனுக்ரஹம் புரிகின்றனர். 

அந்தந்தக் கோயிலில் அர்ச்சனை செய்த விபூதி, துளசி, வில்வ தளங்கள், குங்குமம், திருக்குள நீர், அர்ச்சனை செய்த தேங்காய் போன்றவற்றை அன்னதான உணவுடன் சேர்த்து அளித்தால் எழைகட்கும் திருவருள் பெற்றுத் தந்த ஆத்ம திருப்தியைப் பெறலாம்.

 நரம்பு வியாதிகள் - திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் பிரசாதம்.

தோல் நோய்கள், பால் நோய்கள், தொழுநோய் - சென்னையிலுள்ள கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் அர்ச்சனை செய்யப்பட்ட வில்வம் விசேஷமானது. இந்த வில்வத்தை அன்னதான உணவுடன் சேர்க்கலாம். பதினாறு தளங்களுக்கு மேல் காணப்படும் இந்த வில்வமர இலை அற்புதமானது. ஆனால் சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பெற்ற வில்வதளப் பிரசாதங்களையே பயன்படுத்த வேண்டும்,

கழுத்து நோய்கள் - குன்றத்தூர் திரு நாகேஸ்வரர் பிரசாதம்.

இருதய நோய்கள் - திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் பிரசாதம்.

அனைத்து நோய்கள் குறிப்பாக அறுவை சிகிச்சைகள் - படேஸாஹிப் சமாதி (சின்னபாபு சமுத்திரம், பாண்டிச்சேரி) பிரசாதம்.

கண் நோய்கள் (குருடர்கள்) – சென்னை அருகே ஞாயிறு சிவன் கோயில், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயம், சென்னை அருகே சித்துக்காடு பெருமாள் ஆலயம் பிரசாதம், இங்குள்ள விருட்சக் கொடி சித்தர் தரிசனம்.

பல் நோய்கள் – மகோன்னத்த சித்தர் திருமழிசை ஜெகன்னாதப் பெருமாள் ஆலயம்.

எலும்பு நோய்கள் – சுதாதலீஸ்வர சித்தர் – மப்பேடு சிங்கீஸ்வரர் சிவாலயம் (சென்னை அருகில்)

3)ஓம்காரம் தன்வந்தரி காயத்ரீ, அஸ்வினி தேவர்கள் காயத்ரீ, திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம் போன்றவை ஜபித்துப் பாராயணம் செய்து, தொழு நோயாளிகட்கும், ஊனமுற்றோர்கட்கும் ஏனைய நோயாளிகட்கும் அன்னதானப் பிரசாதமளித்தல் அற்புதமான பலன்களைத் தரும். இவை தவிர திருப்பதி, சபரிமலை போன்ற திருத்தலக் கோயில்களின் பிரசாதத்தையும் அன்னதான உணவில் சேர்த்தல் நினைத்துப் பார்க்க இயலாத தெய்வத் திருவருளைப் பெற்றுத்தரும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...