Showing posts with label #vishnupadhi Puniya Kaalam #Vishnu Temple #Vishnu festival #Vishnu mantra #Hindu temple #Srirangam #Tirupati #shivalikuthuru #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #vishnupadhi Puniya Kaalam #Vishnu Temple #Vishnu festival #Vishnu mantra #Hindu temple #Srirangam #Tirupati #shivalikuthuru #Tamil Nadu #India. Show all posts

Thursday, August 14, 2025

வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ய காலம்.

_விஷ்ணுபதி புண்ய காலம்_


17.08.2025 வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ய காலம் ஆரம்பம்...

விஷ்ணுவை வணங்க தீராத பிரச்சினை தீரும் ஆவணி மாதம் 1ம்  தேதி வந்து  விட்டது  .இது விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். 

ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. 

ஆவணி மாதம் 1ம் தேதி விஷ்ணு பதி புண்ணியகாலம் வந்து விட்டது. இது ஏகாதசிக்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணு வையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும்.

தமிழ் மாதங்கள் 12ல் 

சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. பிரம்மாவுக்குரி ய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும்

*வைகாசி,* *ஆவணி* , *கார்த்திகை* , *மாசி* ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. விஷ்ணு வுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணு பதி புண்ய காலம்.

ஆனி, புரட்டாசி, மார்கழி,பங்குனி ஆகிய வை சிவனுக்குரியவை. சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். 

ஆவணி மாத விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் போது உங்களின் பிரச்சினை களை வேண்டுதல்களை மனமுருகி மகா விஷ்ணுவிடம் சொல்லுங்கள். தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவ டைவதற்குள் நிறைவேறும். இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது.

பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த தாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும் , அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாகவும் கூறுவர். 

ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாக வும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.

அன்றைய தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது.

இந்த விஷ்ணுபதி புண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மி யையும் மனதார வழிபட்டு, காலை பெருமாள் கோவி லுக்கு சென்று கொடி மர நமஷ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்து கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள். 

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத் திற்கு முன் வையுங்கள். 27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமர நமஷ்காரம் செய்யுங்கள். நமது எல்லா தேவைகளையும் வேண்டுதல் களையும் கூறி தங்களின் பிரார்த்தனையை மனமுருகிச் சொல்லுங்கள்

ஓம் நமோ விஷ்ணவே தஸ்மை நமஸ்தஸ்மை புன: புன:
யத்ர ஸர்வம் யத: ஸர்வம் ய: ஸர்வம் ஸர்வ ஸம்ஷ்ரம 

விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமதுசக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவற செய்யலாம். முறைப்படி பூஜை செய்யத் தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம். அருகில் உள்ள விஷ் ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்டநேரத்தில் சென்று வழிபடலா ம். துளசிபூஜை , கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்குப் ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்குத் தகுந்தவாறு செய்யலாம். 

அதே போன்று அன்றைய தினத்திலே விரத நாட்களில் செய்யக் கூடாத செயல்களைத் தவிர்ப்பது நன்று. ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்ப தற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் வரக்கூடிய நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்க ளும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும்.

எனவே இந்தமுறை நாம் ஒரு விஷ்ணு பதி புண்யகாலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு புண்யகாலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும். எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டி ப்பதன் மூலம் உங்கள் தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்புமிக்க வளமான வாழ்வினை யும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம் .
ஆன்மிக முன்னேற்றம் , மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தரவல்லது இந்த புண்ய காலம் ஆகும். எல்லோரும் இந்த புண்ய காலத்தைமுழுமையாகக் கடைப் பிடித்து ஸ்ரீ மகாலட்சுமி சமேத அரங்கநாதரின் பரிபூரண அருளைப் பெறுவோமாக! தங்களின் நியாயமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்.

ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...