Showing posts with label #Vayilar Nayanar #63nayanmargal #Hindu temple #Mayiladuthurai #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Vayilar Nayanar #63nayanmargal #Hindu temple #Mayiladuthurai #Tamil Nadu #India. Show all posts

Tuesday, January 7, 2025

வாயிலார் நாயனார் மனதுக்குள் தியான முறையில் கோயில் கட்டிப் பூஜை செய்தார்...

யால் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது சிவாலயமே செல்லாமல், ஏதும் பேசாமல் வழிபட்டு இன்பமயமான சிவபதத்தை அடைந்தார்.
திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார்
“தொன் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றுகின்றார்.


திருமயிலை ஸ்தலத்தில் அவதரித்த வாயிலார் நாயனார்:
பண்டைய தொண்டை நாட்டில் ( சென்னை முதல் வடவேங்கடம் வரை ) திருமயிலாபுரியில்(சென்னையில் உள்ள மயிலாப்பூரில்) வேளாளர் மரபில் அவதரித்தார். திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் தொன் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் என்று கூறியிருப்பதால் இவரது காலம் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகத் தெரியவருகிறது. இவரைப்பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கப்பெறவில்லை. இவர் சிறுவயது முதல் கபாலீஸ்வரரை முழு முதற்கடவுளாகப் போற்றி அவர் மீது அன்பும், பக்தியும் கொண்டு அவரை வழிபட்டு வந்தார். சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமல் சிவ பூஜையை மேற்கொண்டார். இவர் மௌன விரதம் பூண்டு சிவனாரை வழிபட்டதால் 'வாயிலார்' என அழைக்கப்பட்டார்.
மனக்கோயில் கட்டி சிவபதத்தை அடைந்த வாயிலார் நாயனார்:


வாயிலார் நாயனார்!!


இறைவழிபாட்டினை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று புறவழிபாடு, மற்றொன்று அகவழிபாடு. கோயில் சென்று வழிபடுவது, கோயிலைத் தூய்மை செய்வது, தீபம் ஏற்றுவது போன்றவை புறவழிபாடு ஆகும். இறைவனை தன் மனதினுள் அமர்த்தி, ஆத்மா என்ற தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபடுவது அகவழிபாடு ஆகும். அகவழிபாட்டில் மிகச் சிறந்தவர் வாயிலார் நாயனார்.
"வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை"
என்கிறது அப்பர் தேவாரம்…
இறைவனை உடம்பால் வணங்கிடவேண்டும், வாயினால் வாழ்த்திட வேண்டும், மனதால் தியானம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றது இந்த பாடல்.
இறைவனை உடம்பால் வணங்குவது எளிமையானது, அதைவிட மேலானது இறைவன் புகழ்பாடுவது, இந்த இரண்டை காட்டிலும் சிறந்தது இறைவனை மனதில் அமர்த்தி தியானம் செய்வதாகும். அதனால்தான் மானசீக பூஜை அளவற்ற மகிமை கொண்டதாகப் போற்றப்படுகிறது.
மகிமை மிக்க மானசீக பூஜையால் இறைவனை வழிபட்டு, சிவாலயமே செல்லாமல், தன் மனதுக்குள்ளேயே கோயில் கட்டி, இறைவனை மறக்காமல் மனதிலேயே வைத்ததால், இறைவன் உறையும் இடமே கோயிலானது. 'மறவாமையால் அமைத்த மனக் கோயில்' என்று இதனைச் சேக்கிழார் வர்ணிக்கிறார்.
வாயிலார் நாயனார் மனதுக்குள் தியான முறையில் கோயில் கட்டிப் பூஜை செய்தார். தன்னுடைய மனக்கோயிலில் குடியிருக்கும் சிவபெருமானுக்கு ஞானமாகிய திருவிளக்கை ஏற்றி, ஆனந்தத்தால் சிவனாருக்குத் திருமஞ்சனம் செய்வித்தார். அன்பு என்னும் திருவமுதைச் சமைத்து நைவேத்தியமும், அக மலர் (இதய கமலம்) கொண்டு அர்ச்சனையும் செய்து, மானசீக முறையிலான சிவ வழிபாட்டை நெடுநாட்கள் செய்து அதன் பயனாகச் சிவபெருமானுடைய சிவபதத்தை அடைந்து, பேரின்ப வாழ்வு பெற்றார்.

குருபூஜை:

வாயிலார் நாயனார்!!


மானசீகமாக மனதால் சிவ வழிபாட்டை நெடுங்காலஞ்செய்து சிவபதத்தை அடைந்த வாயிலார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலில் கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வாயிலார் நாயனாருக்கு வடக்குப் பார்த்தபடி தனி சந்நிதி அமைந்துள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

“திருச்சிற்றம்பலம்”

சிறப்புமிகு அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார், சிறு வயது முதல் சிவபெருமானை முழு முதற்கடவுளாகப் போற்றி எப்பொழுதும் சிவ சிந்தையிலேயே இருப்பார். சிவபெருமானை என்றும் எப்போதும் மறக்காமல் தியானித்தார். 
மானசீக பூஜையால்(மனதிற்குள்ளே) #சிவபெருமானையே எப்பொழுதும் #மனத்திலே வைத்துத் தொழுது #சிவாலயமே #செல்லாமல் ஏதும் பேசாமல் வழிபட்டு இன்பமயமான சிவபதத்தை அடைந்தார்.
திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார்
“தொன் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றுகின்றார்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...