Showing posts with label #Aadi amavasai #Hindu festival #Rameshwaram #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Aadi amavasai #Hindu festival #Rameshwaram #Tamil Nadu #India. Show all posts

Wednesday, July 23, 2025

ஆடி அமாவாசை சிறப்புகள்

ஆடி அமாவாசை சிறப்புகள் பற்றிய பதிவுகள் 

ஆடி அமாவாசை என்பது தமிழ் மக்களின் அடிப்படை ஆன்மிக மற்றும் பாரம்பரிய விழாக்களில் ஒன்று. இது ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது. 

அமாவாசை என்பது சந்திரன் மறைந்திருக்கும் நாள். ஆன்மிக ரீதியாகவும், பாரம்பரிய ரீதியாகவும், ஆடி அமாவாசைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இதுகுறித்து மேலும் விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

*ஆடி அமாவாசையின் சிறப்புகள் :*

*1. பித்ரு தர்ப்பணம் மற்றும் முன்னோர்கள் வழிபாடு*

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம், தானம், திரு நீராடல் ஆகியவை செய்யப்படுகிறது.

இந்த நாளில் தர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் ஆனந்தமடைவார்கள் என்றும், அவர்களின் ஆசீர்வாதம் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

முன்னோர்களின் ஆத்மா அமைதி பெற இந்த நாள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

*2. கங்கை ஸ்நானம் / தீர்த்த ஸ்நானம்*

ஆடி அமாவாசை அன்று கங்கை, காவிரி, தாமிரபரணி போன்ற புனித நதிகளில் நீராடுவது புண்ணியம் அளிக்கும்.

தமிழகத்தில் ராமேஸ்வரம், திருச்செந்தூர், காரைக்கால், மயிலாடுதுறை, திருவெண்காடு மற்றும் கன்னியாகுமரி போன்ற திருத்தலங்களில் திருப்புண்ணிய நீராடல் நிகழ்கிறது.

*3. அம்மன் வழிபாடு*

ஆடி மாதம் முழுவதும் தேவி வழிபாடு பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாளில் தேவியை வழிபட, குடும்பத்தில் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.

பெண்கள் சுமங்கலித்துவம் நல்வாழ்க்கை வேண்டி விரதம் மேற்கொள்கிறார்கள்.

*4. தான தர்மங்கள்*

ஆடி அமாவாசை அன்று வறியோர், சாதுவர்கள், பண்டிதர்கள் ஆகியோருக்கு உணவு, துணி, பணம் போன்ற தானங்கள் வழங்குவது நற்காரியம்.

இதனால் பாவங்களை நீக்கி புண்ணியம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Saturday, August 3, 2024

அமாவாசை நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டியது முக்கியம்..

பித்ரு வழிபாடு செய்வது பற்றிய தகவல்கள் :
1. ஒரு வருடம் நாம் பித்ருபூஜை செய்யாவிட்டாலும் பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

2. தர்ப்பணங்களை எப்போதும் குறிப்பிட்ட மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது. 

3. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து அதிகாலைக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. 

4. எள்ளுடன் தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களுக்கு அமிர்தமாக கருதப்படுகிறது. 

5. பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது. தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம்.

6. நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி, தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம். 

7. புண்ணிய நதிகளின் கரைகளில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு எப்போதுமே சக்தி அதிகமாகும். 

8. நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம், திதியை மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும். 

9. தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய்தால், அவர்களது ஆசிகளும் கிடைக்கும்.

10. அமாவாசை, சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு. 

11. அமாவாசை நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டியது மிக, மிக முக்கியமாகும். 

12. மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள். இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும். 

13. தர்ப்பணத்தை சரியான நேரத்தில் உரிய முறைப்படி செய்தால் நம் வாழ்வில் கஷ்டங்கள் என்பதே வராது. 

14. பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது பல யாகங்களுக்கு சமமானது.

15. கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம் பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும். 

16. தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாக பிறப்பான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

17. ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

18. புண்ணிய ஆத்மாக்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம் அவர்கள் மேலும் இறையருள் பெற உதவும். 

19. தர்ப்பணம், சிரார்த்தும் செய்யாவிட்டாலும், நாம் பித்ருக்கள், நமக்கு உதவுவார்கள். ஆனால் தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் முழுமையான ஆசி கிடைக்கும்.

20. பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்களை தவிர்ப்பது நல்லது.

Followers

வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,  திருப்பெரும்புலியூர்,  தஞ்சாவூர் மாவட்டம்-613204 *மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர் *இறைவி:...