Tuesday, October 3, 2023

ஸ்ரீரங்கனை வரித்த தேவியர்கள்

🙏ஸ்ரீரங்கனை வரித்த தேவியர்கள் 🙏

அரசன், ஆண் அழகன், கஸ்தூரி ரங்கனைப் பல தேவியர்கள் பக்தியால் உருகி, அவனை வரித்து அழகிய மணவாளனால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். 

ஸ்ரீதேவி: சாட்சாத் மஹாலஷ்மி, பட்ட மகிஷியாம் ஸ்ரீரங்கநாயகி நாச்சியார்.

பூதேவி: இஷ்ட மகிஷியாம் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரங்கனால் ஆட்கொள்ளப்பட்டு, அவர், தன்னை கோதை ஆட்கொண்டதால் 'ஆண்டாள்' என்றார்! 

 எல்லா ஊரிலும், 108 திருப்பதிகளிலும் ஆண்டாளுக்குத் தனி ஸந்நிதி உண்டு.

'உறையூர்' சோழமன்னன் மகள் கமலவல்லி நாச்சியார் மிகுந்த அழகி.  பழைய ஊர்ப்பெயர் 'திருக்கோழியூர்'.  பல நூற்றாண்டுகளாக பழமைச் சோழர்களது தலைநகர்.

இதை ஆண்ட நந்தசோழனின் அருமை மகள் கமலவல்லியை ஸ்ரீரங்கனுக்கே சீர் வரிசைகளுடன் திருமணம் செய்து கொடுத்து நாச்சியாருக்கு கோயிலைக் கட்டினார்.

பங்குனி உத்திரத்தன்று, உறையூரில் ஒரு சேர்த்தியில் சேவை சாதிக்கிறார்கள்.

ஸ்ரீ சுவேதகிரி என்னும் திருவெள்ளரையில், ஸ்ரீ செந்தாமரைக்கண் பெருமாள், தாயார் பங்கயச்செல்வி, செண்பகவல்லித் தாயார் எனவும் கூறுகின்றனர்.

குலசேகர நாச்சியார் என்ற சேரகுலவல்லி சந்நிதி அர்ச்சுன மண்டபம் அருகே உள்ளது.

சேரகுலவல்லி, குலசேகர மன்னனின் திருமகள். பக்தியினால் தன் மனதைத் தந்து, ஸ்ரீரங்கநாதனுடன் ஐக்யமானாள்!

சுல்தானி எனும் துலுக்க நாச்சியாரது சந்நிதியும், அர்ச்சுன மண்டபம் அருகே சித்திரமாக வரையப்பட்டுள்ளது.

இரண்டாம் முகமதிய படை எழுச்சி கி.பி.1327-28ல், முகமது-பின்-துக்ளக் காலத்தில், ஸ்ரீரங்கம் கொள்ளை அடிக்கப்பட்டு, பெருமாளின் 

திருமேனி, டில்லி பாதுஷாவின் அந்தப்புரத்தில் இருக்கையில் அவரது மகள் சுல்தானியின் மனதை ஸ்ரீரங்கன் கொள்ளை கொண்டார்!

அரையர்களின் பெரும் முயற்சியால், அவரது திருமேனி மீட்கப்பட்டு வந்தபோது, கூடவே பாதுஷாவின் மகளான சுல்தானியும் அழகிய மணவாளனோடு தொடர்ந்து வந்து அவருடன் ஐக்யமானார்.  பீபி நாச்சியார் என அழைக்கப்படுகிறார்.  

பக்திக்கும், காதலுக்கும் மத பேதங்களே இல்லை!  
சிறிய, பெரிய மடைப்பள்ளிகளின் நாச்சியார்கள் 'அரவிந்த நாயகியர்களே' இவருக்கு தினப்படி நிவேதனங்களை செய்து அருளுகின்றனர்.

செங்கமல நச்சியாரான, தான்ய லெஷ்மிக்கும் அரங்கனின் அருகிலேயே, 'திருக்கொட்டாரம்' எனப்படும் தனிச் சன்னதி உண்டு. 
பங்குனி உத்திர உற்சவ ஏழாம் நாள், அங்குதான் 'நெல்லளவு' கண்டருளுகிறார்.

ஆகவே ஸ்ரீரங்கன் ஏழு தேவியர்களையும் ஆட்கொண்டு மணந்து அழகிய மணவாளன் என்ற பெயரும் பெற்றார்.  

பக்தி மூலம் முக்தி கண்ட இவர்கள் சரிதம் மிகச் சிறப்பானது!

ஸ்ரீ அழகிய மணவாளன் திருவடி சரணம்! 
படித்து பகிர்ந்தது
இறை பணியில்
இரா. இளங்கோவன். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...