Friday, September 8, 2023

#திருப்பம்_தரும்_திருப்பதி - #திருமலை_வெங்கடாசலபதிதரிசனம்

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

          #திருப்பம்_தரும்_திருப்பதி - 
#திருமலை_வெங்கடாசலபதிதரிசனம்
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
 ♻ வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்பட வரம் அருளும் தலம் திருப்பதி-திருமலை . இங்கு ஏழுமலையான் குடியிருக்கும் கோவில் மிகப் பழைமையானது என்கின்றன ஞானநூல்கள். தொல்காப்பியம் போன்ற நூல்கள், இந்தத் தலத்தை '#வேங்கடம்’ என்றும் பெருமாளை #வேங்கடத்தான் என்றும் குறிப்பிடுகின்றன. பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைத்து பிறப்பு – இறப்பு வட்டத்திலிருந்து விடுவித்து, முக்தி அளிக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே கடவுள் அவர்.

🍁வ்ருஷிபாத்ரி ,  

🍁நீலாத்ரி ,  

🍁அஞ்சனாத்ரி ,  

🍁சேஷாத்ரி ,  

🍁கருடாத்ரி ,  

🍁நாரயணாத்ரி , 

🍁 வேங்கடாத்ரி என்ற ஏழு மலைக்கு மத்தியில் பெருமாள் வாசம் செய்வதால் பெருமாள், “#ஏழுமலையான்” என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். திருப்பதி பெருமாள் தோன்றி சராசரியாக 250 கோடி ஆண்டுகள் மேல் இருக்கும் .

 ⭕ உள்நாடு மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் இந்துக்கள் மனதில் என்றும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருமாளை வாழ்கையில் ஒரு முறையாவது திருப்பதி - திருமலை சென்று சேவிக்க அனைவருக்கும் பேரவா உண்டு . ஆனால் #பெருமாள்அழைப்பின்றி_யாரும்எளிதில் அவரை தரிசித்து விட முடியாது . விடுமுறை கிடைத்துவிட்டது என்று நீங்கள் பல நாள் / மாதம் . ஆண்டு முன்பே முன்பதிவு மேற்கொண்டாலும் அவர் நினைத்தால் மட்டுமே கோவிலுக்குள் நுழைய முடியும் .

⭕நீண்ட கியூ , தலைமுடி காணிக்கை செய்த மனிதர்கள் , ஐந்து விநாடி தரிசனத்துக்கு பல மணிநேர / நாள்கணக்கில் காத்திருப்பு , பெருமாளை கண்டு கண் மூடி திறப்பதற்குள் "ரண்டி , ரண்டி " என்று வெளியேற்றம் , பல கிலோமீட்டர்க்கு முன்பே நாசியை துளைக்கும் நெய் / லட்டு வாசனை என தனிசிறப்புடன் கொண்ட பெருமாள் தரிசனத்தை சரியான திட்டமிடல் இல்லாமல் பலரும் மனகசப்புடன் திரும்புவதை தடுக்கவே இந்த கட்டுரை .

⭕தெருமுனையில் இருக்கும் கோவிலுக்கு சென்று திரும்புவதை போன்று இருப்பதல்ல இந்த திருப்பதி - திருமலை தரிசனம் . சிலருக்கு சில மணி நேரத்தில் கிடைக்கும் தரிசனம் , பலருக்கு பல மணிநேரம் ஆகும் , சில சமயம் நாள்-கணக்கில் ஆகும் . உடுத்திய ஆடை கசையாமல் , யாரும் நெருக்கியடிக்காமல் , கால் கடுக்க நிற்காமல் நிதானமாய் சென்று தரிசனம் செய்யவேண்டும் , என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இது வசதிப்படாது .

⭕ஒரு நாளைக்கு சராசரியாய் 50,000-60,000 பக்தர்களையும் , விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் பக்தர்களை பெருமாள் அழைத்து தரிசனம் தருகிறார் . பிரம்மோற்சவ நாட்களில் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை , வைகுண்ட ஏகதேசி , புரட்டசி சனி போன்ற நாட்களில் இரண்டு லட்சம் , மூன்று லட்சம் , ஐந்து லட்சம் பக்தர்கள் என்ற கணக்கில் தரிசனம் தருகிறார் .
ஒரு நாளைக்கு 86,400 வினாடிகள் , அதில் தரிசன நேரமான 64,800 வினாடிகளில் இத்தனை பக்தர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தருவது சாதாரண விஷயமா என்ன ? .

🌺 திருப்பதி - திருமலை பெருமாளை தரிசனம் செய்ய கீழ்க்கண்ட முறைகள் உள்ளன - இலவச தரிசனம் , 50 ரூபாய் சுதர்சன தரிசனம் , 300 ரூபாய் விரைவு தரிசனம் , நடைபாதை தரிசனம் , VIP தரிசனம் , மாற்று திறனாளி / முதியோர்கள் தரிசனம் , வெளிநாட்டு வாழ் இந்தியர் தரிசனம் , ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையுடன் தரிசனம் .
இதில் எந்த தரிசனத்தில் வந்தாலும் கோவிலுக்குள் நுழைவதற்குள் அனைவரும் ஒரே வரிசையில் சேர்ந்தபின்னரே தரிசனத்துக்கு செல்வார்கள் . அனைவருக்கும் அதிகபட்சம் ஐந்து வினாடிகள் மட்டுமே தரிசனம் .

🍁எல்லோரும் பின்பற்றுவது என்னவேனில் , வரிசையில் நின்றோம் , தரிசித்தோம் , உண்டியலில் காணிக்கை செலுத்தினோம் , பிரசாதம் உட்கொண்டு திரும்பி வந்தோம் அத்துடன் பெருமாள் தரிசனம் முடிந்தது என்று நினைத்து வருகிறார்கள் . ஆனால் அது தவறு . பெருமாளை வழிபட #சில_சாஸ்திரசம்பிரதாய_முறைகள் இருக்கின்றன . அதன் படியே பின்பற்ற வேண்டும் .

🙏🙏🙏 திருமலையில் பெருமாளை சேவிப்பதற்கு முன்னர் கீழ் திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளை வணங்கிய பின்னர் திருச்சானூர் பத்மாவதி தாயாரையும் வணங்கி விட்டு தான் திருமலை புறப்பட வேண்டும் .

🍂 திருமலையில் வெங்கடாசலபதி கோவில் உண்டாவதற்கு முன்னரே திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உண்டாகி இருக்கிறது . இங்கு ருக்மணி சத்யபாமா சமேதராக பார்த்தசாரதிபெருமாள் உட்கார்ந்த நிலையில் காட்சி தருகிறார் . சில காலம் முன்பு வரை திருமலை உண்டியலில் சேரும் காணிக்கைகள் இங்கு வந்து சேர்ப்பிக்கப்படும் . கால மாற்றத்தால் உண்டியல் கணக்கு மட்டுமே இங்கே படிக்கப்படுகிறது .

🌺"சுவாமி புஷ்கரணி ஸ்நானம், 

🌺வராஹ வேங்கட தரிசனம், 

🌺மஹாபிராசாத சுவீகாரம் த்ரையம் த்ரைலோக துர்லபம்..."

இந்த சாஸ்திர கூற்றுப்படி திருமலையில் இருக்கும் புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடிவிட்டு தீர்த்தக்கரையில் இருக்கும் ஸ்ரீ ஆதிவராஹ சுவாமியை தரிசித்த பின்னரே திருவேங்கடமுடையானை தரிசிக்க வேண்டும் . பின்னர் பகவானின் திருப்பிரசாதத்தை உட்கொண்ட பின்னரே இல்லத்துக்கு திரும்பி செல்ல வேண்டும் .

🍂 திருமலையில் சீனிவாசனுக்கு இடம் தந்தவரே இந்த வராக சுவாமி . அதற்க்கு உபகாரமாக தான் திருமலையில் முதல் ஆராதனம்,முதல் நிவேதனம் முதல் தரிசனமும் ஆதிவராக சுவாமிக்கு செய்யப்படுகிறது.இந்த திருமலைக்கு ஆதிவராஹ ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு .இந்த ஷேத்திரத்தின் அதிபதியாக வராக சுவாமி இருப்பதால் அவரை தரிசனம் செய்துவிட்டே திருவேங்கடமுடையானை தரிசிக்க செல்ல வேண்டும் .

🌺திருமலையில் பெருமாளை பார்க்கும் அந்த ஒரு சில வினாடிகளில் நமது அறிவு செயலற்று போய் நமது பிரார்த்தனைகள் மறந்து விடும் . மேலும் பெருமாளின் அலங்காரமும் திருமேனியும் மறந்து போய்விடும் . கோவிலை விட்டு வெளியே வந்த பின்னரே நமது பிரார்த்தனைகள் நினைவுக்கு வரும் . " அடடா . இதை அவரிடம் கேட்க மறந்துவிட்டோமே " என்ற கவலையும் வரும் . இதற்கு அங்கு தினமும் நடமாடும் தேவதைகள் , சித்தர்களின் பிரார்த்தனை , போன்றவைகளால் உண்டான வளையமே காரணம் .

🌺 மூலவர் வெங்கடாசலபதியை வணங்கும்போது வீடு வேண்டும் , கார் வேண்டும் , பணம் / சொத்து வேண்டும் என்று கூறாமல் , என்றுமே உன் பாதங்களை தொழும் பாக்கியம் போதும் என்றே வணங்க வேண்டும் . கருவறைக்கு மேலே இருக்கும் தங்க கோபுரத்தில் வீற்றிருக்கும் விமான வெங்கடேசபெருமாளிடம்(வடக்கு முகமாய் வெள்ளி கவசத்தால் சிகப்பு அம்பு குறியீடு செய்யப்பட்டு இருக்கும்) மட்டுமே உங்கள் சுய விருப்பங்கள் , பிரார்த்தனைகள் கூறினால் அவர் மூலவரிடம் கூறி விடுவார் . #விமானவெங்கடேசபெருமாளுக்கு அருகே இருக்கும் #பரமபதநாதரையும் வணங்கிவிட்டு வர வேண்டும் . அவ்வாறு பரமபதநாதரை வணங்கும்போது வைகுண்ட ஏகாதேசி அன்று பெருமாளை பரமபத வாசல் வழியாய் சென்று சேவித்த பலன் கிட்டும்.

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...