நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நாம் நல்லது செய்தால் ஏழரை சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி ஒன்றும் செய்யாது. முன் ஜென்மத்தில் பாவங்களை ஏழரை சனியில் அனுபவிக்கும் போது அந்த அளவுக்கு தாக்கம் இருக்காது. இந்த பிறவியில் நாம் செய்யும் தவறுகள் தான் அதிகமாக தாக்குகிறது. ஒவ்வொருவரும் இதனை கண்டு நடுங்கிவிடுகிறார்கள்.
தவறுகளை குறைத்தால் தப்பிக்கலாம் இல்லை என்றால் அனுபவிக்க வேண்டியது தான்.
இந்த பதிவில் நாம் பார்க்கபோவது எனக்கு தெரிந்த ஒரு நபரின் வாழ்க்கையை பற்றி. இவர் பிறந்தது ஒரு அழகிய கிராமம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று பயிர்கள் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம்.
முப்போகம் விளையகூடிய நிலங்கள். காவிரி பாயும் ஊர் தான். இப்பொழுது முப்போகத்திற்க்கு காவிரியில் தண்ணீர் வருவது கிடையாது நிலத்தில் போர்செட் அமைத்து முப்போகம் பயிர் செய்கிறார்கள். அதனால் தான் இப்பொழுது முப்போகம் விளைகிறது
. போர் செட் அமைத்ததால் நிலத்தடி நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி 100 அடியில் கிடைத்த தண்ணீர் 400 அடி போர் போட்டால் தான் கிடைக்கிறது அதுவும் கோடையில் தொடர்ச்சியாக தண்ணீர் வருவதில்லை. மோட்டார் பம்புயை இரண்டு மணி நேரத்திற்க்கு ஒரு முறை ஆப் செய்து தண்ணீர் ஊறியவுடன் மீண்டும் இயக்கி தண்ணீர் பாய்ச்சிகிறார்கள். அதுவும் இப்பொழுது அந்த தொல்லை இல்லை ஏன் என்றால் மின்சாரம் வருவதேயில்லை. மின்சாரம் தடைபட்டதால் மிகப்பெரிய புண்ணியம் நிலத்தடி நீர் உறிஞ்சபடுவதில்லை.
அந்த மாதிரி ஊரில் சிவா என்பவர் இருந்தார். சிவாவுடன் பிறந்தது இரண்டு சகோதரிகள் ஒரு மூத்த சகோதரன். சிவாவுடன் பிறந்த அனைவருக்கும் திருமணம் முடிந்தது. சிவா அதே ஊரில் காதல் திருமணம் செய்தார். அதுவும் இருவர் வீட்டிற்க்கும் தெரியாமல் ஓடி போய் திருமணம் செய்தார். ஒரு மாத காலம் வெளியூரில் வசித்துவிட்டு ஊர் திரும்பி சிவா வீட்டிலேயே இருவரும் தனிக்குடிதனம் நடத்தினார்கள். இருவருக்கும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். மூன்றும் பெண் குழந்தைகள் இந்த காலத்தில் சிவா அடிக்கடி வெளிநாடு சென்று வந்தார்.
அந்த நேரத்தில் ஒரளவு வசதி வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் ஒரு புதிய தொழில் தொடங்கினார். அது என்ன தொழில் என்றால் பணத்தை வட்டிக்கு விடுவது. இதை கொஞ்சம் கொஞ்சமாக செய்து மிகப்பெரிய அளவில் பணத்தை சேர்த்தார். அந்த ஊரில் அவரை வட்டி சிவா என்று தான் கூப்பிடுவார்கள். அந்தளவுக்கு வட்டி தொழிலில் கொடிகட்டி பறந்தார்.
அவர் எப்படி சேர்த்தார் என்றால் அந்த ஊரில் வயல் வெளிகளில் வேலை செய்ய அந்த ஊரில் ஏழை மக்கள் வேலை செய்யும் பக்கத்து ஊரில் இருந்தும் வேலை ஆட்கள் வேலைக்கு வருவார்கள். அவர்களுக்கு குறைந்த அளவில் நிலம் அவர்கள் வசிக்கும் ஊரில் இருக்கும். அவர்கள் அன்றாடம் பிழைப்பை நடத்த இந்த மாதிரி வேலைக்கு சென்றால் தான் உண்டு.
இன்றும் இதே மாதிரி நிலையில் பல ஊர்களில் இருக்கிறார்கள் அவர்களை காப்பாற்ற எந்த அரசாங்கமும் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. அதே ஏன் நாம பேசனும் விஷயத்திற்க்கு வருவோம்
. சிவாவிடம் இந்த ஏழை மக்கள் அவசர தேவைக்கு பணத்தை வாங்குவார்கள். சிவா என்ன வட்டி போடுகிறார் என்று தெரியாது. ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் சென்றால் பணத்தை வாங்கியவர்கள் வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளை பணத்திற்க்கு வட்டியாக ஓட்டி வந்துவிடுவார்.
ஒரு வருட காலத்தில் அவர்களிடம் இருக்கும் அந்த குறைந்த பட்ச நிலத்தையும் எழுதி வாங்கிவிடுவார். இப்படியே பல ஊர்களை வாங்கிவிட்டார். இந்த நிலையில் பல ஏக்கர் நிலங்கள் பணவசதிகள் இவரிடம் சேர்ந்தது.
மூத்த பெண்னுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார். பணம் கொட்டி கிடந்ததால் அந்த பெண்ணை மணம் முடிக்க அந்த ஊர் பக்கத்து ஊரில் எல்லாம் கடுமையான போட்டி நிலவியது கடைசியாக இவரே ஒரே பையனாக பார்த்து திருமணத்தை வெகு விமர்சியாக அந்த ஊரே பார்த்து அசந்து போகிறமாறி நடத்தினார்.
சிவாவிற்க்கு பண சேர்ந்தாலும் வட்டி ஆசை விடவில்லை. தொடர்ச்சியாக வட்டி தொழிலை நடத்திக்கொண்டுதான் இருந்தார். உங்களுக்கு நினைக்க தோன்றுகிறதா கடவுள் இல்லையாட என்று தானே.
கடவுள் விடுவாரா என்ன ?
கடவுளின் திருவிளையாடல் ஆரம்பம் ஆனது. கடைசி பெண்னுக்கு முதலில் வைத்தார் செக். சிவாவிற்க்கு கடைசி பெண்ணின் மீது தீராத பாசம். அந்தபெண்னுக்கு இதயத்தில் ஓட்டையை ஏற்படுத்தினார். சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார். அந்த அறுவை சிகிச்சையிலியே மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டு பின்பு ஒரளவு முன்னேற்றம் கண்டு உயிர் பிழைத்து திரும்பியது. ஒரு வழியாக நல்லபடியாக முடிந்து வீடு வந்தார்கள். நாட்கள் ஓடியது அப்பொழுதும் அவர் சும்மாக இருக்கவில்லை வட்டி தொழிலை தொடர்ந்து செய்து வந்தார்.
முடிவு அத்தியாம் எழுத சனி பகவான் அவர் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிற்க்கு விரைய சனியாக வந்தார். சிவாவின் ராசி கன்னி. அவரின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் சனி பகவான் அமர்திருந்தார். ஐந்தில் சனி இருந்தாலே ஒன்று குழந்தைகள் இருக்காது அப்படியே குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைக்கு அவர் தகப்பனால் கொள்ளி வைக்க வேண்டும். இந்த நிலையை ஐந்தில் உள்ள சனி ஏற்படுத்தும்.
இவருக்க ஏழரை சனி ஆரம்பித்துவிட்டதா முதலில் ஏழரை சனி செய்த வேலை கடைசி பெண்னுக்கு அறுவை சிகிச்சை முடிந்து நன்றாக இருந்ததா. அந்த பெண் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தது.
இவருக்கு வட்டி தொழிலில் உறுதுணையாக ஒரு நண்பர் இருந்தார். அவரின் தான் இவருக்கு முழு நம்பிக்கையான ஆள். அந்த ஆளுடன் வண்டியில் பள்ளிக்கு செல்லும் வழியில் பைக்கில் இருந்து பின்னாடி விழுந்து அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. இவருக்கு உலகமோ நின்று போய்விட்டதாக உணர்ந்தார். தாங்க முடியாத துயரம். இதை படிக்கும் உங்களுக்கே தெரியும் வயதுக்கு வந்த பெண் இறந்தால் எப்படி இருக்கும் . கல்நெஞ்சுகாரர்களுக்கும் கண்களில் நீர் வரும்.
அந்த பெண்ணுக்கு கொள்ளி வைத்தார். ஏழரை சனி ஐந்தாம் வீட்டின் காரத்துவத்தை கன கச்சிதமாக முடித்தது. அவர் ஆடிப்போய் விட்டார். ஒவ்வொரு நாளும் மனதில் தாங்கமுடியாத துயரத்துடன் நாள்களை கடக்க வேண்டியாதாகிவிட்டது. அதுவோடு விட்டாரா சனி பகவான் அதுதான் இல்லை மறுபடியும் வேலையை ஆரம்பித்தார் மூத்த பெண்யை திருமணம் முடித்து கொடுத்திருந்தார் இல்லையா அந்த பெண்னுக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை. எவ்வளவு தான் பண வசதி இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் முடிந்தது எல்லாம்.
வீட்டில் நிம்மதி போய்விடும் அதைவிட அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பேச்சின் தலைப்பு செய்தி இந்த விஷயமாக தான் இருக்கும். அந்த பெண்னை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மிகுந்த டார்ச்சர் செய்தார்கள். அந்த பெண் மிகுந்த விரக்திக்கு போய் ஒரு முறை தற்கொலைக்கே போய்விட்டது. யார் செய்த புண்ணியமோ கடைசியில் காப்பாற்றிவிட்டார்கள்.
நம்ம சிவா ஏற்கனவோ மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கி தவிப்பவருக்கு இது அடுத்த பேரடியாக விழுந்தது. மனிதன் வாழ்க்கையில் நொந்து போய்விட்டார். அதுவுடன் வாழ்ந்து வருகிறார். இன்னும் ஏழரை சனி விடவில்லை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இவர் இப்பொழுது ஒவ்வொரு கோவிலாக நடந்துக்கொண்டிருக்கிறார். ஏழைகளுக்கு துன்பம் அளித்துவிட்டு மனிதர்கள் எங்கு சென்றாலும் நிம்மதி கிடைக்காது. பரிகாரமும் எடுபடாது.
நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நாம் நல்லது செய்தால் ஏழரை சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி ஒன்றும் செய்யாது. முன் ஜென்மத்தில் பாவங்களை ஏழரை சனியில் அனுபவிக்கும் போது அந்த அளவுக்கு தாக்கம் இருக்காது. இந்த பிறவியில் நாம் செய்யும் தவறுகள் தான் அதிகமாக தாக்குகிறது. ஒவ்வொருவரும் இதனை கண்டு நடுங்கிவிடுகிறார்கள்.
தவறுகளை குறைத்தால் தப்பிக்கலாம் இல்லை என்றால் அனுபவிக்க வேண்டியது தான்.
No comments:
Post a Comment