3 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாதத்தில் பரம ஏகாதசி வருகின்றது விசேஷம் . ❤️
குபேர யோகம் தரும் பரம ஏகாதசி 2023 இன்று ஆகஸ்ட் 12 ம் தேதி சனிக்கிழமை பரம ஏகாதசி ❤️
ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உள்ளது. அனைத்து ஏகாதசிகளிலும் திருமாலை உண்மையான அன்புடனும், பக்தியுடனும் வழிபட்டு வந்தால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள், வருடத்தின் சில முக்கியமான ஏகாதசிகளில் விரதம் இருப்பதால் அளவில்லாத புண்ணிய பலன்களை பெற முடியும். தொடர்ந்து ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு பிறப்பு இறப்பு இன்றி, இறைவனின் திருவடிகளை அடையும் பெரும் பேறு கிடைக்கும்.
பெருமாளுக்குரிய மிக முக்கியமான விரதம் ஏகாதசி விரதமாகும். மிகவும் புனிதமான விரதமாக கருதப்படும் ஏகாதசி விரதம் நாளில் உணவு, நீர் ஆகியவற்றை தவிர்த்து திருமாலை நினைத்து வழிபட வேண்டும். ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விரத நாட்களில் ஒன்று பரம ஏகாதசியாகும். ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு பரம ஏகாதசி என்று பெயர். திரிக் பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு பரம ஏகாதசி ஆகஸ்ட் 12 ம் தேதி வருகிறது. கிட்டதட்ட 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பரம ஏகாதசி விரதமானது ஆடி மாதத்தில் இந்த ஆண்டு வருகிறது.
பரம ஏகாதசியை, புருஷோத்தம கமலா ஏகாதசி என்றும் சொல்வதுண்டு. அதுவும் இந்த ஆண்டு வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் இந்த ஏகாதசி வருவதால் கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது. பொதுவாகவே ஏகாதசி விரதம் என்பது தெரிந்தும், தெரியாமலும் நாம் செய்த பாவங்களில் இருந்து நிவர்த்தி தந்து, வைகுண்ட பதவியை தரக் கூடியதாகம். ஏகாசி விரதம் இருப்பதால் கர்ம வினைகள் அனைத்தும் அகலும் என்பத ஐதீகம். ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு மகாவிஷ்ணுவின் அருளுடன் மகிழ்ச்சி, செல்வ வளம், வைகுண்ட பதவி ஆகியவை கிடைக்கும்.
இந்து புராணங்களின் படி, பரம ஏகாதசி விரதத்தை கடைபிடித்து தான் குபேரர், மகாவிஷ்ணுவிடம் இருந்து செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் பதவியை பெற்றார். பரம ஏகாதசி விரதம் வாழ்வில் இருக்கும் வறுமையை முழுவதுமாக நீக்கக் கூடியதாகும். இந்த விரதத்தை பக்தியுடனும், முழு அர்ப்பணிப்புடனும் இருப்பவர்களுக்கு மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இந்த ஆண்டு ஏகாதசி திதி , ஆகஸ்ட் 12 ம் தேதி . இந்த நாளில் அதிகாலையில் எழுந்து பெருமாளின் படத்துடன், ஸ்ரீயந்திரம் வைத்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். நெய் விளக்கேற்றி, 5 விதமான பழங்கள், வீட்டில் செய்த இனிப்புகள், துளசி, பஞ்சாமிர்தம் படைத்து வழிபட வேண்டும். திருமாலுக்கு நைவேத்தியம், தண்ணீர் படைத்து வழிபடுவதால் அனைத்து விதமான தீமைகளும் வாழ்வில் இருந்து நீங்கும்.
விஷ்ணு வழிபாடு தொடங்கும்போது, ஸ்ரீ ஹரிவிஷ்ணுவுடன் லட்சுமி சிலையை வைக்க வேண்டும். குங்குமம் கலந்த பால் நிரப்பப்பட்ட தக்ஷயவர்த்தி சங்கில் இருந்து அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யத பின்னர் நீரினால் ஜல அபிஷேகம் செய்ய வேண்டும்
மஞ்சள் வஸ்திரம், சந்தனம், மாலைகள் மற்றும் பிற பூஜை பொருள்களை தெய்வத்துக்கு சமர்பித்து, பிரசாதத்தில் துளசியை அர்ச்சனை செய்ய வேண்டும். இறுதியில் தூபம் ஏற்றி ஆரத்தி செய்ய வேண்டும்
மஞ்சள் வஸ்திரம், சந்தனம், மாலைகள் மற்றும் பிற பூஜை பொருள்களை தெய்வத்துக்கு சமர்பித்து, பிரசாதத்தில் துளசியை அர்ச்சனை செய்ய வேண்டும். இறுதியில் தூபம் ஏற்றி ஆரத்தி செய்ய வேண்டும்
இந்த நாளில் சனிபகவானுக்கு கடுகு எண்ணெய் சமர்பித்து, சனி பகவானின் சக்தி வாய்ந்த மந்திரமான ஓம் சம் ஷனைச்சராய நம என்று சொல்லி தீபம் ஏற்றவும். சனி மஹாராஜாவுக்கு கருப்பு எள்ளினால் செய்யப்பட்ட உணவை வழங்கவும். பின்னர் தூபம் மற்றும் தீபம் ஏற்றி ஆரத்தி செய்யவும். சனி தோஷத்தில் இருந்து விடுபட இந்த நாளில் கருப்பு எள், எண்ணெய் தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள்
இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீஹரி ஸ்தோத்திரம் ஆகியவற்றை பாராயணம் செய்வது மிகவும் விசேஷமானது. ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ஜபிப்பது சிறப்பதாகும். முழுமையாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், சாத்வீகமான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது சிறப்பானதாகும்.
As per Drik Panchang, Parama Ekadashi fast will be observed on August 12, 2023. Many devotees are going to observe Parama Ekadashi fast today i.e., on August 12, 2023. Parama Ekadashi holds a special significance among Hindus. This Ekadashi comes after a long gap of 3 years during Adhik Mas
இந்த ஆடி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் ஏகாதசி திதி பரம ஏகாதசி எனப்படும்.
புருஷோத்தம வடிவம் பூஜிக்கப்படுகிறது
இந்த ஏகாதசியின் முக்கியத்துவத்தைப் பற்றி யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்கிறார். கதை கம்பில்யாவில் சுமேதா என்ற ஏழை பிராமணனைப் பற்றியது. அவரும் அவரது மனைவி பவித்ராவும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், தங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்த அனைவரையும் மிகவும் கவனித்துக் கொண்டனர்
சுமேதா பணம் சம்பாதிக்கவும் மக்களுக்கு சேவை செய்யவும் பெரிய நகரத்திற்கு செல்ல விரும்புகிறாள். ஆனால் பவித்ரா அந்த யோசனையை விரும்பவில்லை, அவர்கள் அங்கேயே மக்களுக்கு சேவை செய்தார்கள்.
ஒரு நாள் கௌதின்ய ரிஷி அவர்கள் வீட்டிற்குச் சென்றார், அவர்கள் முழு மனதுடன் ரிஷியை சேவித்து, அவருடைய ஆசிர்வாதத்தைப் பெற்றனர்.
புறப்படுவதற்கு முன், ரிஷி அவர்களை ஆதிக் மாசத்தின் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி திதியில் ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொன்னார். அவர் சுமேதா மற்றும் பவித்ரா ஆகியோருக்கு புருஷோத்தம பிரார்த்தனை செய்யும்படி அறிவுறுத்துகிறார். அவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்த பிறகு, அவர்கள் பணக்காரர்களாகி, தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்ய சிறந்த நிலையில் இருந்தனர்.
விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு நாராயணனின் பரம பதம் கிடைக்கும். விரதம் இன்றிலிருந்து எடுக்கப்பட்டு துவாதசி நாளில் பரணத்தை எடுத்து முடிக்க வேண்டும். ❤️
Ekadashi thiti in Krishna paksha of this adhik masam is called Parama Ekadashi.
Purushottama form is worshipped
Yudhishthira asks Sri Krishna about the importance of this Ekadashi. Story is about a poor Brahmin named Sumedha in Kampilya. He and his wife, Pavitra were known for their hospitality. Even though they were poor they took great care to of all those who took shelter at their home
Sumedha wishes to move to bigger city to earn money & serve people. But Pavitra disliked that idea and they continued to serve people there itself.
Kaudinya Rishi visited their house one day, They served rishi wholeheartedly and sought his blessings.
Before leaving, rishi asked them to observe a vrat on Ekadashi Tithi, Krishna Paksha of the Adhik Maasam. He also advices Sumedha and Pavitra to pray purushottama. And after they observed this vrat, they became wealthy and were in a better position to serve those in need.
Those who observe vratham will get parama padam of Narayana. Vratham should be taken from today and ending on dwadashi day after taking parana. ❤️
No comments:
Post a Comment