Thursday, October 5, 2023

திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் தரிசனம் தொடர்பான ஒரு ரகசியம்!

திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் தரிசனம்  தொடர்பான ஒரு ரகசியம்!
திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் தரிசனம் என்றாலே மிக அற்புதமல்லவா?இந்த அற்புதத்தில் இன்னோர் அற்புத ரகசியம் உள்ளது.

அந்த அற்புத ரகசியம் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் உயிரோட்டமுள்ள கண்கள் .

எனவே,அவர் கண்கள் கொடுக்கும்
குழுமையான தரிசனத்தை 
`நேத்திர தரிசனம்' என்பார்கள்.

"நேந்திர தரிசனம்'' செய்வோர்க்கு 
எந்த அளவு கடுமையான கஷ்டங்கள் இருந்தாலும் பெருமாளின் அருள் பார்வையால் முற்றிலும் நீக்கப்பட்டு 
வளமான வாழ்வு எளிதில் கிட்டும் 
என்பது ஐதீகம்.

திருப்பதி - திருமலையில் அருள் பாலிக்கும் அருள்மிகு வெங்கடராஜலபதி சுமார் 12 அடி உயரமுள்ளவராகக் காட்சி தருகிறார்.

விரிந்த தாமரை மலர் மீது நின்ற திருக்கோலம்.இத்திருக்கோலத்தினை `ஸ்தானக் கோலம்' என்று புராணம் சொல்கிறது.

மூலவர் விக்கிரகம் சிவப்புக் கல்வகையைச் சார்ந்த சாளக் கிராமத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.

இவரை வியாழக்கிழமையில் 
தரிசிப்பது மிகவும் நல்லது. 
எளிமையான தோற்றத்துடன் 
மெல்லிய பட்டாடைகளுடன் 
கூடிய திருநாமம் சாற்றப் பெற்று 
அருள் பாலிக்கின்றார்.

எம்பெருமான் திருவேங்கடநாதன், 
ஸ்ரீநிவாசப் பெருமான் திருமலை - திருப்பதியில் மகத்தானதொரு 
சாம்ராஜ்யத்தையே ராஜாதி ராஜேஸ்வர மகாசக்கரவர்த்தியாகப் பரிபாலனம் பண்ணி கொண்டிருக்கிறார்.

எம்பெருமானுக்குள், அவரது வலது புற இதயத்தில் ஸ்ரீ ஆகிய பெரிய பிராட்டியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நிவாசம் செய்கிறார். ஸ்ரீ என்னும் பெரிய பிராட்டியின் சிந்தனையோடு ஸ்ரீக்குள் நிவாசம் செய்பவரே ஸ்ரீநிவாசன் ஆவார். 

திருப்பதி மலையிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஸ்ரீநிவாசப் பெருமாள் பத்மாவதித் தாயாரைக் காணும் பொருட்டு, திருச்சானூருக்கு (கீழத் திருப்பதிக்கு) வந்து விடுகிறார்.

 வியாழன்தோறும் ஸ்ரீ ஆதிபராசக்தி ஸ்ரீநிவாசப் பெருமாளின் சிலைக்குள் பிரதிஷ்டையாகி நின்று திருவருள் புரிந்து வருகிறார். இவ்வாறான ஓர் ஐதீகம் உள்ளது.

இதன்படி வியாழக்கிழமைகளில் ஸ்ரீநிவாசப் பெருமாள் மூலவருக்கு, பட்டுப்புடவை சாற்றி, திருமேனியில் குங்குமத்தின் குழம்பைப் பூசி, நுதலில் சிறிய நாமமிட்டு, திருவிழிகள் தெரியுமாறும் அருள் சுரந்திடும் திவ்ய அலங்காரம் செய்கிறார்கள். இதுவே நேத்திர தரிசனம், திருவிழி அழகான தரிசனம்.

அன்ன நைவேத்யமும்,தாயாருக்கு, அரிசிச் சாதப் புளியோதரை அன்னப் பிரசாதத்தால் பாவாடையையும் அப்பி, அலங்காரம் செய்கிற இந்த அலங்காரத்தில் திவ்ய தரிசனம், தருவதை பூலங்கி சேவை என்று அழைக்கிறார்கள். வியாழக்கிழமைகள் தோறும் நிகழும் நேத்திர தரிசனம் மிகவும்  விசேஷம்.

ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குப் பட்டுப்புடவை கட்டி, தாயாராக அலங்கரித்து அன்ன நைவேத்யம் செய்து, தாயாரின் கருணா உள்ளத்துடன் அந்தப் புளியோதரை அன்னப் பிரசாதம் பெற்றுக் கொள்வதை பக்தர்கள் பெரும் பேறாகக் கருதி வருகிறார்கள்.

பெருமாள் - பிராட்டி ஒன்றாகி அன்னப் பிரசாதம் அருள்கிற இந்த நேத்திர தரிசனத்தை,

"அங்கண் ரெண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழித்தேலோர் எம்பாவாய்' என்று 

ஸ்ரீஆண்டாள் அழகாகப் பாடி உள்ளாள்.

பூலங்கி சேவை புளியோதரை அன்னமும் நேத்திர தரிசனமும் அன்னமூர்த்தி -அன்னலட்சுமி சேவையாக தரிசனமாக ஒருங்கே அமைகிறது.

வரி நிஜ நேத்திர தரிசனம்-அபூர்வமான பழைய புகைப்படம் !

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...