Saturday, October 7, 2023

கருடன் பற்றிய 12 அரிய தகவல்கள்*

*கருடன் பற்றிய 12 அரிய தகவல்கள்*
மகாவிஷ்ணுவின் இரண்டு திருவடிகளையும் கருடன் தன் கைகளால் தாங்கியபடி வரும் காட்சியே கருட சேவை. மகாவிஷ்ணு, கருடன் அருள் ஒரே நேரத்தில் கிடைப்பது சிறப்பு.

திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வம் கூறுகிறது.

கருடனின் மனைவிகள் ருத்ரா, சுகீர்த்தி.

ஏகாதசி, திருவோண நாட்களில் கருடனை வழிபட்டால் நோய் தீரும்.

கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்று கருடனுக்கு பல பெயர்கள் உண்டு.

வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியில் உள்ள மூலைக் கருடன் சிறப்பு மிக்கவர். இவருக்கு சிதறுகாய் உடைத்தால் தீமை அகலும். தடை நீங்கும். 

மகாபாரதப் போரில் கடைசி நாளில் கருட வியூகம் அமைத்து போர் நடந்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. 

வைகுண்டத்திலிருந்து கருடனால் கொண்டு வரப்பட்ட வைரமுடி, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலில் உள்ளது. பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை இங்கு நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ரெங்கமன்னார், ஆண்டாள், கருடனுடன் ஒரே ஆசனத்தில் காட்சி தருகின்றனர். இங்கு பெருமாளுக்கு, மாமனார் ஸ்தானத்தில் கருடன் இருக்கிறார்.

திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சியாகும்.

கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளி யங்குடியில் கருடாழ்வார் கைகளில் 
சங்கு, சக்கரம் தாங்கிய நிலையில் இருக்கிறார்.

***சர்வம் கிருஷ்ணார்ப்பணம்***

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும்

மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும் இல்லற வாழ்க்கை என்பது மங்கலகரமானது என்பது வள்ளுவரின் வாக்கு.  மங்கலகரமான இல...