Saturday, September 9, 2023

மூன்று துர்க்கைகள் அருள் புரியும் சிறப்பு கொண்ட கோவில் இது.

ஸ்ரீஞானாம்பிகை உடனுறை             
அ/மி சார பரமேஸ்வரர் திருக்கோயில்,      திருச்சேறை 612605, கும்பகோணம் வட்டம்,     தஞ்சாவூர் மாவட்டம்.     
*மூலவர் : சாரபரமேஸ்வரர்/ செந்நெறியப்பர்
*தாயார் : ஞானாம்பிகை / ஞானவல்லி அம்மை.
*தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம், பிந்துசுத தீர்த்தம், ஞான தீர்த்தம்
*தல விருட்சம் : மாவிலங்கை.    

*பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் துயர்களை போக்கி, அவர்களின் வாழ்க்கையை சரியான வழியில் இட்டு செல்வதால் இத்தல இறைவன் செந்நெறியப்பர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.           

*இத்தலம் கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. தீராத கடன் தொல்லை   மற்றும் பிறவிக்கடன் இரண்டும் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள்  வழிபட வேண்டிய கோவிலாகும் இது.    

*மார்கண்டேய முனிவர் பூர்வ ஜென்ம கடன்களில் இருந்து விடுபட எண்ணி இத் தலத்திற்கு வந்து, சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவரது பக்தியில் மகிழ்ந்து, சிவ பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து, பிறவிக்கடன்களில் இருந்து அவரை விடுவித்து, மோட்சம் வழங்கினார்.
 
*இறைவன், ருண விமோசன லிங்கேஸ்வரராக, மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார். இவர், கடன் நிவர்த்தீஸ்வரர் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.                   

*தீராத கடன்  பிரச்சனையில் சிக்கி இருப்போர் இத்தல இறைவனுக்கு 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது திங்கட்கிழமை அபிஷேகம் செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனையாக இருந்தாலும் தீர்ந்து விடும். கடன் பிரச்சனை மட்டுமின்றி திருமணம், குழுந்தை, கல்வி, செல்வ வளம் சேரவும் இத்தல இறைவனை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.           

*மூன்று துர்க்கைகள் அருள் புரியும் சிறப்பு கொண்ட கோவில் இது. 
இங்கு சிவ துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை ஆகிய திருநாமங்களுடன் துர்க்கா தேவி காட்சி தருகிறாள்.          

*இத்தல பைரவர் கையில் திரிசூலம் மற்றும் மணியுடன் காட்சி தருகிறார்.      

*இந்த பைரவரை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும். 

*இங்குள்ள பைரவருக்கு அப்பர் தமது தேவார பதிகத் தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.     

*இக்கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.    

*இது சம்பந்தர், அப்பர் இருவராலும்தேவாரப் பாடல் பெற்ற, காவிரி  தென்கரையில் அமைந்த தலம்.           

*தல விருட்சமான  மாவிலங்கை, வருடத்தின் முதல் நான்கு மாதங்கள் இலைகளுடனும்,  அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை நிற பூக்களுடனும்,  கடைசி நான்கு மாதங்கள் பூவோ, இலையோ இல்லாமல் காணப்படும் என்று கூறப்படுகிறது  

*இங்கு
ஆண்டுதோறும் மாசி மாதத்தின் 13வ து, 14வது மற்றும் 15வது நாளில் சூரிய ஒளியானது சிவலிங்கத்தின் மீதும், ஞானாம்பிகை மீதும் காலை 06.30 மணிக்கு விழும் காட்சி நிகழும்.  இந்த சமயத்தில் சூரிய பூஜை நடத்தப்படுகிறது.                 

*கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் - குடவாசல் செல்லும் சாலையில் 15 கி.மீ., தொலைவிலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கி.மீ., தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

🙏 சிவாயநம

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...