♦♦பிரதோச திருவிழா♦♦
சூரியனைப்போன்று உலகில் உயர்ந்தும் உலகினுக்கே பேரொளியாய் இருப்பதைப்போல் நாமும் நலம்பெறலாம் நன்கு உயரலாம்
ரவி வார மகா பிரதோசம்
சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் சந்தோசமான பிரதோசம்
நான்கு யுகங்களில் நடப்பு கலியுகத்தில் ஆண்டுகள் அறுபதில் அதிகசக்திவாய்ந்த சோபகிருது என்னும் இந்த ஆண்டில் ஆடி மாதந்தன்னில் தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை பிரதோசத்திருநாள்
எப்படிப்பட்ட துன்பங்களாயினும் விலகிட ஞாயிற்றுக்கிழமை பிரதோசம் உகந்தநாள்
இந்தநாளில் சூர்யதேவனோடு சிவபெருமானோடும் நந்திகேஷ்வரோடும் இன்புற்று அருள்பாலிக்கும் அற்புததிருநாள்
இந்தநாளில் எவனொருவன் சிவலிங்கதிருமேனியையும் நந்தீஷ்வரனையும் சூர்ய தேவனையும் பூஜிப்பவன் எல்லாதுன்பங்களிலிருந்தும் விலகுகின்றான்
இந்த நாளில் ஆலயங்களில் நெய்யினால் தீபமேற்றிட பல தலைமுறையினர் நலம்வாழக்கூடும் பல துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்
இந்த ஞாயிற்றுக்கிழமை பிரதோசதிருநாளில் நந்திமற்றும் சிவலிங்க திருமேனிக்கு பால் மஞ்சள் பஞ்சாமிர்தம் தயிர் தேன் இளநீர் கரும்புச்சாறு அபிஷேகம் செய்வது மிக மிக அதிக நற்பலன்களைத்தரும்
இன்றையதினம் கோதுமையினால் செய்த உணவு வகைகளை நெய்வேத்தியமாக படைத்து பல்லுயிர்க்கு தானம் செய்தால் இருபத்தோரு தலைமுறை சேர்ந்த முன்னோர்கள் அனைவருக்கும் நண்மைகள் அடைந்து பெற்று உங்களுடைய வரும் காலம் இருபத்தோரு தலைமுறையை சேர்ந்த சந்ததியினர்க்கும் நல்ல நற்பலன்களை தரும்
இன்றைய தினம் எவனொருன் பிரதோசத்திருநாளில் சரியான முறையில் பூஜித்து வழிபாடு செய்து கோதுமையினால் செய்த உணவுப்பொருள்களை பல்லுயிர்க்கு தானம் செய்து பலரின் பசியைபோக்குகின்றானோ அவன் நீண்டகாலம் நல்லவேலையும் கிடைத்து நல்லசெல்வமும் பெற்று நலமாகவும்வாழ்வான் என்று சாத்திரங்கள் கூறுகின்றது
இன்றையதினம் பஞ்சாமிர்தம் நெவேத்தியமாக செய்து படைத்து பல்லுயிர்க்கு தானம்தர எல்லாவிதமான சம்பத்துகளும் உண்டாகும் பதினாறு வகையான செல்வங்களும் பெறலாம்
சிவ சிவ திருட்ச்சிற்றம்பலம்
சிவ சிவ நமசிவாய சிவ சிவ
No comments:
Post a Comment