🐘 அருள்மிகு ஆனைகுட்டே விநாயகர் திருக்கோயில்...!!
🙏 வளரும் விநாயகர் சிலை🙏 சிவ-பார்வதி கைலாயக்காட்சி...!!
அருள்மிகு ஆனைகுட்டே விநாயகர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
🙏 கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கும்பாசி என்னும் ஊரில் அருள்மிகு ஆனைகுட்டே விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
🙏 சம்ஸ்கிருதத்தில் கஜகிரி என்றும், கன்னடத்தில் ஆனைகுட்டே என்றும் வழங்கப்படுகிறது இத்தலம்.
🙏 ஆனை என்றால் யானை, குட்டே என்றால் குன்று, அதனால் இந்த இடத்திற்கு ஆனே குட்டே என்று பெயர் வந்தது.
🙏 யானை முகத்துடன் நின்ற நிலையில் இங்கு சுயம்புவாய் விநாயகர் காட்சி அளிக்கிறார்.
🙏 ஆனைகுட்டே விநாயகர் 12 அடி உயரம் உடையவர். ஒரே கல்லில் (யானை ரூபத்தில்) உள்ளார்.
🙏 இங்கு அமைந்துள்ள விநாயகருக்கு திருநீறுக்கு பதிலாக நெற்றியில் நாமம் அணியப்பட்டுள்ளது.
வளரும் கணபதி : வரம் தரும் வர ஹஸ்தம், சரணடைந்தோரைக் காக்கும் அபய ஹஸ்தம் என இங்கு அமைந்துள்ள விநாயகர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். தினமும் இவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்படும். இந்த விநாயகர் சிலை வளர்ந்து வருவதாகவும் பக்தர்களிடம் நம்பிக்கையுள்ளது.
வேறென்ன சிறப்பு?
🙏 இங்கு அமைந்துள்ள விநாயகரை விஷ்ணு ரூப கணபதி, விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்கின்றனர்.
🙏 இக்கோயில் வாசலில் சிவ-பார்வதி கைலாயக் காட்சியை தரிசிக்கலாம்.
🙏 இங்கு, அருகில் அமைந்திருக்கும் மகாலிங்கேஸ்வரர் கோயில் பிராகாரத்தில் உள்ள கிணற்றில் இருந்துதான் விநாயகரின் அபிஷேகத்துக்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
🙏 விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, மார்கழி பிரம்மோற்சவம் ஆகியவை இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
🙏 கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத்தில் லாபம் கிடைக்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
🙏 பிரார்த்தனைகள் நிறைவேறியவுடன் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர்.
🙏 கு பண்பரசு
No comments:
Post a Comment