Friday, October 6, 2023

திருச்சிற்றம்பலம்! எனக் கூறுவதால் என்ன பயன்?

அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய 
திருச்சிற்றம்பலம்! எனக் கூறுவதால் என்ன பயன்?
தெரிந்து கொள்வோம்!

இரு சிவனடியார்கள் சந்தித்துக் கொண்டால் திருச்சிற்றம்பலம் எனச் சொல்லிவிட்டே பேசத் தொடங்குவர்.

சித்+அம்பலம் = சித்தம்பலம் என்பதே சிற்றம்பலம் என்றானது. அடியவரின் மனமாகிய அம்பலத்தில் ஆடும் இறைவனே சிவபெருமான். 

அம்பலம்= வெளி ஆகாயம். நமது இதயத்தில் ஒரு சிறு இடத்தில் கட்டைவிரல் அளவில் ஆன்மா இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன.

மனிதனின் உள்ளம் பெருக்கோயில்! நமது உடம்பே ஆலயம்.
திருச்சிற்றம்பலம் என்பது நம்முள் இருக்கும் ஆன்மாவே.

நமது ஜீவனே (உயிர்) சிவம்; உடலே சிவன் குடியிருக்கும் ஆலயம்.
இதை உணர்ந்த சைவப் பெரியோர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது “திருச்சிற்றம்பலம்” என்று ஒருவர் கூற, அதற்கு மற்றவர் தில்லையம்பலம் என்று கூறுவார்.

இதன் பொருள் “உன்னுள் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறட்டும்” என்பதாகும்.
நம்மைப் பார்த்து யாராவது “திருச்சிற்றம்பலம்” என்று சொன்னால் “உன் ஆன்மா நிறைவு பெறட்டும்” என வாழ்த்துகிறார்! என்று தெரிந்துக் கொள்வோம்.

உடனே பதிலுக்கு நாமும் “தில்லையம்பலம்” எனக் கூற வேண்டும்.
அத்துடன் தில்லையம்பலத்தில் கோயில் கொண்ட ஆனந்தக்கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும்.
உருவத்தில் தினமும் அருவமாக உன் ஆன்மா கரைய வேண்டும் என்றால், தில்லைக்குப் போக முக்தி கிடைக்கும்! எனப் பொருள்.

இதனை உணர்த்தவே திருச்சிற்றம்பலத்தில் நடராஜ பெருமான், மனித ரூபத்தில் ஆனந்தக் கூத்தாடுகிறார்.
மனித உடலே கோயில் தான்! அதிலுறையும் உயிரே சிவம் என்பதைத் தில்லையம்பலம் உணர்த்துகிறது.

நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் .
மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் .
மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!
சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை,எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது .

திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்
திருச்சிற்றம்பலம் என்று சொல்லச் சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்குப் புண்ணியம் சேர்க்கிறோம்.

அப்போது அறியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்குத் தெரியாது
அதனால் நாம் திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா?
மேலும் திருச்சிற்றம்பலத்தைத் தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது.

ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒருரகசியமந்திரமாக  இதைஇறைவனே திருச்சிற்றம்பலமுடை
யான் என்று தன்பெயரை குறிப்பிட்டான்.

எனவே திருச்சிற்றம்பலம் என்று சொல்லச் சொல்ல, நம்மை அறியாது செய்யும் பாபங்கள் எல்லாம் நீங்கி, நமது ஆன்மா புண்ணியம் பெறும்.
எனவே தினமும் “திருச்சிற்றம்பலம்” என இயன்றவரை அடிக்கடி சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...