தை பூசம்
வள்ளலாரின் அற்புதங்கள்
********************************
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அன்பு உருவம் பெற்று அருள் நிலை அடைந்து இந்த மண் உலகினில் உயிர்கள் எல்லாம் வருந்தும் வருத்தத்தைப் போக்க வும் அகத்தே கருத்து புறத்தே வெளுத்திரு க்கும் மக்கள் அனைவரையும் உலகத்தில் திருத்துவதற்காக இறைவனால் வருவிக் கவுற்றவர் திருவருட் பிரகாச வள்ளலார்.
வாழையடிவாழையாக வந்த திருக்கூட்ட மரபில் வந்தவர் வள்ளலார். அன்றைய தென்னாற்க்காடு மாவட்டம் இன்றைய கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மருதூ ர் என்ற ஊரில் 05-10-1823 ஆம் வருடம் தமிழ் சுபானு வருடம் புரட்டாசி மாதம் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தில் பிறந்து முத்திரைப் பதிக்க வந்தவர் வள்ளலார். இவர் இயற்பெயர் இராமலிங்கம்.
பெற்றோர்கள்:
தந்தையார் : இராமையா பிள்ளை
தாயார் : சின்னம்மையார்
உடன் பிறந்தோர் :
சபாபதி - அண்ணன்
சுந்தரம்மாள் - அக்கா
பரசுராமன் - அண்ணன்
உண்ணாமலை - அக்கா
ஐந்தாவது மகனாக வள்ளலார் பிறந்தார்.
வள்ளலார் வாழ்ந்த இடங்கள்:
மருதூர் : 1823 - 1824
சென்னை : 1825 - 1858
கருங்குழி : 1858 - 1867
வடலூர் : 1867 - 1870
மேட்டுக்குப்பம் : 1870 - 1874
வள்ளலார் இந்த உலகத்துக்கு வந்ததின் நோக்கம்:
மனிதன் மாமனிதனாக வாழ்ந்து மரணமி லாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பது தான் வள்ளலார் நோக்கம். அதற்காகத் தான் அகம் கருத்தவர்களையும் புறத்தில் வெளுக்கச் செய்யும் நோக்குடன் கருணை நிறைந்த திருவருட்பா பாடல்களையும் உரைநடைப் பகுதிகளையும்திருமுகங்கள் (கடிதங்கள்) மூலமும் பேருபதேசம் மூலமா கவும் ஆன்ம நேயத்துடன் இந்த மனித குலத்தை வாழ்விக்க தேனினும் இனிய திருவருட்பாக்கள் அளித்து மனிதன் நீடுழி வாழ நமக்கு அருள் புரிந்தார்கள்.
வள்ளலார் கொள்கைகள்:
1. எத்துணையும் பேதமுறாது எல்லா உயிரும் தம் உயிர்போல் எண்ணும் உயர்ந்த நோக்கம் வேண்டும்.
2. ஜீவகாருண்யம் தான் மோட்ச வீட்டின் திறவுகோல்.
3. கடவுள் ஒருவரே: அவர் ஒளி வடிவானவர் (அருட்பெருஞ்ஜோதி).
4. ஜாதி சமய மதங்கள் எல்லாம் கடந்து ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமை உணர்வாளராக இருக்க வழி செய்ய வேண்டும்.
5. கண்மூடி வழக்கெல்லாம் மண்மூடி போக வேண்டும்.
6. தானம் தவம் இரண்டும் இரு கண்கள் அதன் நுட்பங்களை விளக்கினார்.
7. புலால் மருப்பு உயிர் ஓம்புதல் பசித்தவர்க ளுக்கு பசித்தவிர்த்தல் புரிய வேண்டும்.
8. கடவுள் பெயரால் பலியிடக் கூடாது.
9. சிறு தெய்வ வழிபாடு கூடாது.
10. கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க வேண்டாம்.
11. மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம்.
12. இறந்தவர்களை புதைக்க வேண்டும். எரிக்கக் கூடாது.
13. கருமாதி திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம்.
14. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
வள்ளலார் அருளிச் செய்தவைகள்:
தேனினும் இனிய திருவருட்பாக்கள் 5818 பாடல்களை அருளியுள்ளார்கள். இவை ஆறு திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் முத்தாய்ப்பானது அருட் பெருஞ்ஜோதி அகவல்.
உரை நடை நூல்கள்:
1. மனுமுறை கண்ட வாசகம்
2. ஜீவ காருண்ய ஒழுக்கம்
3. வியாக்கியானங்கள்
4. மருத்துவக் குறிப்புகள்
5. உபதேசங்கள்
6. திருமுகங்கள் (கடிதங்கள்)
7. அழைப்பிதழ்கள் அறிவிப்புகள் கட்டளைகள்
8. விண்ணப்பங்கள்
வடலூரில் வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையங்கள்
1. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 1865
2. சத்திய தருமச்சாலை 1867
3. சத்திய ஞான சபை 1872
4. மேட்டுக்குப்பம் சித்தி வளாகம்
வள்ளலார் ஒரு பன்முக படைப்பாளி:
1. நூலாசிரியர்
2. உரை ஆசிரியர்
3. பதிப்பாசிரியர்
4. பத்திரிகை ஆசிரியர்
5. போதகாசிரியர்
6. ஞானாசிரியர்
7. சித்த மருத்துவர்
8. வியாக்கியான கர்த்தர்
9. அருள் கவிஞர்
10. அருள் ஞானி
வள்ளலார் மணி ,மந்திரம், மருந்து இந்த மூன்றிலும் கைத்தேர்ந்தவர். இந்த தேகம் நீடிக்க வேண்டி பல்வேறு மருந்துகளை நமக்கு வள்ளலார் வழங்கியுள்ளார்.
485 வகையான மூலிகைகள் மற்றும் அதன் குணங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார்.
ஞான மூலிகைகள் என ஐந்து மூலிகைக ளை கூறியுள்ளார். அவை 1.கரிசலாங்க ண்ணி 2.தூதுவளை 3.வல்லாரை 4.முசுமுசுக்கை 5.பொன்னாங்கண்ணி
இவையல்லாமல் ஐந்து சஞ்சீவி மூலிகை கள் அதன் குணம் பற்றி கூறியுள்ளார்.
இந்ததேகம் நீடிப்பதற்கு நித்திய கருமவிதிகள் கூறியுள்ளார்.
உபதேசங்கள் பேருபதேசங்கள் செய்துள்ளார்.
1. ஆகாரம் அரை
2. நித்திரை அரைக்கால்
3. விந்து வீசம்
4. பயம் பூஜ்ஜியம்
நான்கு விதமான ஒழுக்கங்கள் கூறியுள்ளர்
1. இந்திரிய ஒழுக்கம்
2. கரண ஒழுக்கம்
3. ஜீவ ஒழுக்கம்
4. ஆன்ம ஒழுக்கம்
மனிதன் துர்மரணம் அடைவதற்கான காரணத் தை வள்ளலார் கூறியுள்ளார்.
1. அருந்துதல் (அதிகமான சாப்பாடு)
2. பொருந்துதல் (அதிகப்படியான உடல் உறவு)
வள்ளலார் ஒரு வெள்ளாடை துறவி:
துறவியான வள்ளலார் பசித்த அனைவரு க் கும் சத்திய தருமச்சாலையை நிறுவி 152 ஆண்டுகளாக அவர் மூட்டிய அடுப்பு இன்று வரை எரிந்து வருகிறது. சத்திய ஞான சபை யில் வள்ளலார் ஏற்றிவைத்த ஜோதி தரிசனம் 148 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சித்தி வளாகம் மேட்டுக்குப்பத் தில் வள்ளலார் திருக்கரங்களால் ஏற்றப் பட்ட திருவிளக்கு 146 ஆண்டுகளாக சுடர் விட்டு பிரகாசித்து கொண்டு வருகிறது.
" சாலை நடந்து வருகிறது, சங்கம் செயல் பட்டு வருகிறது, சபையில் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது, நானே சன்மார்க்கம் நடத்துகிறேன்
எனக்குள் தனித்து.." என்றார் வள்ளலார்..
அவர் சொல்படியே இன்றளவும் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த செயல் பாடு களே வள்ளலாரால் தான் நடைபெறு கிறது என்பதற்கு வேறு சான்று வேண்டா ம். “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” இந்த ஒற்றை வரி தான் வள்ளலார் வழிபாடு. உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறுகள் எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக் மகிழ்கசுத்த சன்மார்க்க சுக நிலைப் பெறுக உத்தமன் ஆகுக: ஓங்குக என்பதே வள்ளலார் திருவாக்கு.
கருங்குழி 1858 – 1867
*************************
வடலூரின் தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர் கருங்குழி. இந்த ஊரில் தான் வள்ளலார் தந்தையார் இராமையாப் பிள்ளை கிராம கணக்கராக பணி செய்தார். இந்த ஊரி ன் கிராம மணியக்காரர் வேங்கடா ரெட்டியார் இல்லத்தில் தான் வள்ளலார் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார். வேங்கடா ரெட்டியார் துணை வியார் பெயர் முத்தாலம்மை.
இங்கிருந்து செய்த அருள் செயல்கள்:
*****************************************
1. தண்ணீர் விளக்கெரித்த இடம்
2. சன்மார்க்க சங்கம் 1865ல் ஆரம்பிக்கப்பட்ட இடம்
3. சத்திய தருமச்சாலையை இங்கிருந்து தான் துவக்கினார்
4. செம்பருக்கை கற்களில் நடந்து வந்து இறைவன் வள்ளலாரை ஆட்கொண்டது.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 1865:
***********************************************
வள்ளலார் 1865-ம் ஆண்டு சன்மார்க்க சங்கத்தை ஆரம்பித்தார். சங்கத்திற்கென்று சில கொள்கை நெறிகளை வகுத்தார்.
சத்திய தருமசாலை:
**********************
40 அன்பர்கள் வடலூரில் வள்ளலாருக்கு 80 காணி நிலம் தானமாக தந்தார்கள். அந்த இட த்தில் தான் 23-05-1867 தமிழ் பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாள் சத்திய தருமச் சாலையை நிறுவினார். அவர் ஏற்றிவைத்த அடுப்பு 152 ஆண்டுகளாக அணையா அடுப்பா க எரிந்து கொண்டு வருகிறது. பசித்து வருபவர்களுக்கு பசிப்பிணி நீக்கும் அட்சயப் பாத்திரமாக தருமச் சாலை விளங்குகிறது.
தருமச் சாலையின் சிறப்பு:
*****************************
ஒரு மனிதன் கருவறைத்; தொடங்கி கல்லறை வரை தொடரும் பெரும் பிணி பசிப்பிணி. உலகத்தில் புண்ணியம் செய்ய விரும்புபவர் கள் 32 வகையான தானங்களை செய்கிறார் கள். இதில் தலையாய தானம் அன்னதானம்.
தருமம் என்றால் என்ன?
**************************
* ஒருவனுக்கு வேண்டியது உணவு மட்டும் அன்று
* உடுக்க உடை
* இருக்க இடம்
* உழுவதற்கு நிலம்
* செலவிற்குப் பணம்
* பொருந்துவதற்கு மனைவி
இத்தனையும் இருப்பவர்கள் இல்லாதவர்களு க்கு கொடுப்பதே தருமம் என்று பெயர்.
பசி வேதனை:
***************
நரக வேதனை ஜனன வேதனை மரண வேத னை இந்த மூன்று வேதனையும் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை. பசி இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் உபகார கருவியாகும். இவைகளில் முக்கியமான து பசியே ஆகும். பசி தவிர மற்றவர்களால் வருந்துவோர் எல்லாவற்றையும் மறந்து உணவு தேட முற்ப டுவர். மனிதனின் உடலில் இருந்து உயிரைப் பிரிகின்ற விதம் 8 வகையாகும் அவை:
1. பசி
2. தாகம்
3. இச்சை
4. எளிமை
5. பயம்
6. ஆபத்து
7. பிணி
8. கொலை
அன்ன தருமம் செய்வதால் வரும் நன்மைகள்
*************************************************
1. சூலை குன்மம் குட்டம் போன்ற நோய்கள் நீங்கும்.
2. பல நாட்கள் சந்ததியில்லாதவர்களுக்கு பசித்தவர்களுக்கு அன்னதானம் செய்வதை விரதமாக கொண்டவர்களானால் நல்ல அறிவுள்ள சந்ததி பிறக்கும்.
3. அற்ப வயது என்று அஞ்சி இறந்து போவத ற்கு விசாரப்படுபவர்கள் அன்னதானம் செய்தால் ஆயுள் நீடிக்கும்.
4. பசித்த ஜீவர்களுக்கு உணவு கொடுப்பதை யே விரதமாகக் கொண்ட சம்சாரிகளுக்கு கோடை வெய்யில் வருத்தாது. இயற்கை பேரிடர்களால் துன்பம் செய்விக்க மாட்டார் கள். விளை நிலத்தில் பிரயாசம் இன்றி விளைவு மென்மேலும் உண்டாகும் வியாபார த்தில் தடையில்லாத இலாபங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் கெடுதி இல்லாத மேன்மை உண்டாகும்.ஊழ்வினையாலும் அஜாக்கிரதை யாலும் சத்தியமாக ஒரு துன்பமும் நேரிடாது.
வள்ளலார் பசித்தவர்களுக்கு உணவு கொடுக் கும் சம்சாரிகளுக்கு எத்தகைய நன்மைகள் கிடைக்கும் என்று மேற்கண்ட செய்திகள் மூலம் அறியலாம்.
சத்திய ஞான சபை:
*********************
வள்ளலார் பார்வதிபுரம் பகுதியைச் சார்ந்த நாற்பது அன்பர்கள் கொடுத்த 80 காணி நிலத்தில் சத்திய தருமச் சாலையைக் கட்டின பின்பு 1871ல் சத்திய ஞான சபையை கட்ட ஆரம்பித்து 1872ல் முடிக்கிறார்.
உலகத்தில் உள்ள அனைத்து சாதி சமய மக்கள் எல்லாம் பொதுவாக வழிபடக்கூ டிய ஓர் சபைதான் ஞான சபை. எண் கோள வடிவம் தலைத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. தெற்கு நோக்கி வாயிலை உடை யது ஞான சபையில் சிற்சபை பொற்சபை என இருப்பிரிவுகளை உள்ளே அமைத்துள்ளார்.
பன்னிருகால் மண்டபம் மற்றும் நாற்கால் மண்டபம் ஒன்றினுள் ஒன்றாக உள்ளன. நாற் கால் மண்டபம் நடுவே அருட்பெருஞ் ஜோதி இறைவன் உள்ளார்.
இந்த அருட் பெருஞ் ஜோதி இறைவனை மறைத்து கொண்டு ஏழுதிரைகள் வெவ்வேறு வண்ணங்களில் தொங்கவிடப்பட்டடுள்ளது.
திரை விளக்கம்:
******************
1. கருப்பு திரை - மாயா சக்தி
2. நீலத்திரை - கிரியா சக்தி
3. பச்சைத் திரை - பராசத்தி
4. சிவப்புத் திரை - இச்சா சக்தி
5. பொன்மைத் திரை - ஞான சக்தி
6. வெண்மைத் திரை - ஆதி சக்தி
7. கலப்புத் திரை - சிற்சக்தி
25-01-1872 ஆம் ஆண்டு தமிழ் பிரஜோற்பதி தை மாதம் 13-ந் தேதி சத்திய ஞான சபையில் முதல் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.
சத்தி வளாகம்:
****************
வள்ளலார் மேட்டுக்குப்பத்திற்கு 1870-ல் சென்று 1874 வரை நான்கு ஆண்டுகள் உறை விடமாகக் கொண்டார். மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் தங்கி இருந்த இடத்திற்கு சித்தி வளாகம் என்று வள்ளலார் பெயர் இட்டார்.
சித்தி - வீடுபேறு
வளாகம் - இடம்.
வீடு பேறு அளிக்கும் இடம் சித்தி வளாகம் என்று பெயர். இந்த இடத்தில்தான் பல முக்கிய நிகழ்வுகள் நடந்த இடம் ஆகும்.
1. சமாதி கட்டளை அறிவித்தது.
2. சமரச வேத பாடசாலை நிறுவியது
3. சத்தி ஞான சபை நிறுவி முதல் ஜோதி தரிசனம் கட்டப்பட்டது.
4. ஒரே இரவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் எழுதப்பட்டது.
5. சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டது.
6. உள்ளே உள்ள விளக்கை வெளியே வைத்து வழிபடச் சொன்னது
7. ஞான சரியை பாடியது
8. முத்தேக சித்தி பெற்றது.
முத்தி என்பது முன்னூறு சாதனம். சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்று முத்தி சித்திகள் பற்றி வள்ளலார் விளக்குவார்.
சித்திகளின் வகைகள்:
*************************
1. கரும சித்தி
2. யோக சித்தி
3. ஞான சித்தி
முத்தி வகைகள்:
******************
1. பத முத்தி: பதவி பெற நம்மை தகுதியாக் குவது
2. பர முத்தி: இறைவனுடன் இரண்டறக்கலக்க நம்மை தகுதி செய்து கொள்வது.
அட்டமா சத்திகள்:
*******************
1. அணிமா - துரும்பை மேருவாக்குவது
2. மகிமா - மேருவை துரும்பாக்குவது
3. கரிமா - மேருவை ஒன்றும் இல்லாமல் செய்வது
4. இலகிமா - ஒன்றுமில்லாத இடத்தில் பல வகைகளை செய்தல்
5. பிராத்தி - வேண்டுவன செய்தல்
6. ஈசத்துவம் - குளிகை வல்லபத்தால் எங்கும் செல்வது
7. பிரகாமியம் - பரகாயப் பிரவேசம்
8. வசித்துவம் - ஏழுவகை தோற்றங்களையும் தன் வசப்படுத்துவது.
கரும சித்தி:
*************
இறந்த உயிரை மூன்றே முக்கால் நாழிகை முதல் மூன்றே முக்கால் வருடத்திற்குள் எழுப்பு வது.
யோக சித்தி:
*************
இறந்த புதைத்த உடலை 12 வருடம் முதல் 108 வருடத்திற்குள் உடலை நாசம் அடையாமல் உயிர்ப்பித்தல் ஆற்றல் படைத்தவர் யோகசித் தர் ஆகும்.
ஞான சித்தர்:
**************
64 ஆயிரம் சித்திகளையும் தன் வசத்தால் நடத்துவது வள்ளலார் முத்தேக சித்தி பெற்றது
ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19-ஆம் நாள் ஆங்கி லம் 30-01-1874ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை புனர்பூசமும் பூசமும் கூடிய நன்நாளில் நள்ளி ரவு 12 மணிக்கு வள்ளலார் முத்தேக சித்தி பெற்றார். அருட்பெருஞ்ஜோதி இறைவனுடன் உடம்போடே ஒளி உடம்பு பெற்றார்.
முத்தேகம்:
***********
1. சுத்த தேகம் - ஒளி உடம்பு
2. பிரணவதேகம் - ஒலி உடம்பு
3. ஞான தேகம் - அருள் உடம்பு
இதுகாறும் நாம் கூறிவந்தபடி ஒழுகி அருட்பெ ருஞ் ஜோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்க ள் என்று வாழ்த்தி தமது திரு அறைக்குள் நுழைந்து கதவைத் திருகாப்பிட்டுக் கொண்டு இரண்டரை நாழிகையில் சித்தி பெற்றார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
சற்குரு நாதா சற்குரு நாதா சன்மார்க்க சங்கம் தழைக்க அருள் தாதா வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment