தை பூசம் என்றதுமே பெரும்பாலும் நமக்கு வள்ளல்பெருமானின் வடலூர்மட்டுமே நினைவுக்கு வரும் .
"என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே "என இறவாமைக்கு வழிகூறிய வள்ளலாரை நினைவுறுத்தும் நாள் .இது .
இறவாமையை ஏன் ஒழிக்கவேண்டும் என்றால் அப்போதுதான் பிறவாமை கிடைக்கும் .
பிறவாமை கிடைக்க நம்மிடம் சேர்ந்திருக்கும் கர்ம வினைகள் தீரவேண்டும் .
பிறவாமை எனினில் ஆன்மா உற்பத்தி யாகும் இடத்தில் ஒடுக்குதல் வேண்டும் ,அதுவே தானே இறை ஆகுதல் .நிலை ஆகும்
இதற்க்கு வேண்டிய சன்மார்க்க மார்க்கங்களை அருளிய வள்ளல் தான் அருட்பெருஞ்சோதி ராமலிங்கர் .அவர்கள்
வடலூர் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் ஆண்டு வள்ளலார் அமைக்கத் தொடங்கினார். அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை‘ என்று பெயர் சூட்டினார்.
25.1.1872, தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது. அது அவரின் அருளால் இன்றுவரை தொடர்கிறது .
ஆயினும் தை பூசத்திருநாள் வடலூரில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை அது முருகனுக்கும் உகந்த நாள் .
சைவ திருத்தலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .
அவர்களைப்பற்றிய வரலாற்று செய்திகளையும் ,இதர செய்திகளையும் இங்கேகாணப்போகிறோம் .
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் பெயர்.
தை என்ற சொல், திஷ்யம் என்ற சொல்லில் இருந்து வந்தது.எனப்படுகிரது திஷ்யம் என்றால் பூச நட்சத்திரம்.
திஷ்யம்-தைஷ்யம்- தைசம்- தை என, மாற்றம் கொண்டது.
தைசம் என்றால் பூச நட்சத்திரம் என, கதிரைவேற்பிள்ளையின் சங்கத்து அகராதி கூறுகிறது.
பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப் பூசம்.
அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான், தை மாதத்திற்கு அந்தப் பெயர் வந்தது. சங்க இலக்கியங்களில், 'தைஇயத் திங்கள்' என, தை மாதம் குறிப்பிடப்படுகிறது. தைசப்பூசத்தன்று, முழுநிலா நாளில், நிலத்தில் நீர் ஊறும் என்பது சங்க கால மக்கள் நம்பிக்கை.
புஷ்யம் என்ற சொல்லுக்கு புஷ்டி என்று அர்த்தம். அந்த அடிப்படையில், தையில் நீர் வளம் பெருகி, உணவு உற்பத்தி அதிகரித்து நாடு நலமாக இருக்க வேண்டும் என, நோற்பது தான் தைந்நீராடல்.
சந்திரமான கணக்கின்படி, மார்கழிப் பவுர்ணமியில் விரதத்தை துவக்கி, தை பவுர்ணமியில் அதாவது தைசப் பூசத்தன்று முடிப்பது தைந்நீராடல். சங்க இலக்கியம் இதனை 'தவத் தைந்நீராடல்' என, குறிப்பிடுகிறது
இந்த விரதத்தை பெண்கள் தான் இருப்பர்.
மேலும் தைப்பூசம் பற்றிய குறிப்பு, மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு பற்றிய நூலில் முதன்மையாக காணப்படுகிறது. புத்தர் வான்வழியாக இலங்கை சென்ற போது, இலங்கையின் பூர்வ குடிகளான யட்சர்கள், மாவலி கங்கையாற்றின் கரையில், தைப்பூச விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் என, மகாவம்சம் குறிப்பிடுகிறது. யட்சர்கள், மங்கோலிய இனத்தவர்கள். அவர்களின் தலைவன் குபேரன். மிகப் பழமையான, தர்ம சூத்திர நூலான ஆபஸ்தம்ப சூத்திரத்தில், தைப்பூசத்தன்று, குபேரனுக்கு பால் பொங்கல் படைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உள்ளது.அதைக்கொண்டு தைப்பூசம் கொண்டாடும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே வந்திருக்கிறது என்பது தெரியவருகிறது .
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும்.
தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும்.
தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.
இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும்( பிரகஸ்பதி )குரு பகவான்,பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றதுஇது நிகழ்ந்த இடம் சிதம்பரம் .
அந்த சிதம்பரத்தில் தை பூசம் சிறப்பாகக்க்கொண்டாடப்பெறுகிறது .
அன்று "திருப்பாவாடை" எனும் மிகுதியான திருவமுது விதவிதமாக செய்து இறைவனை ஆராதிப்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது .
அதற்க்கு தேவையான கட்டளைகளை தக்க சாசனங்கள் மூலம்
தரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது .சோழர்களின் கல்வெட்டுகளும் இது குறித்து உள்ளதாகக் கூறப்படுகிறது .
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும் “தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைந்துள்ளது .
No comments:
Post a Comment