விஷ்ணு சகஸ்ரநாமம்
***************************
தினமும் ஒரு திருநாமம்
****************************
இன்று 211 ஆம் திருநாமம்.
********************************
🌹குருதமோ குரவே நமஹ:🌹
***********************************
(Guruthamo Gurave namaha)
(211-வது திருநாமமான ‘குருதமோ குரு:’ முதல், 225-வது திருநாமமான ‘ஸமீரண:’ வரையுள்ள 15 திருநாமங்கள் மத்ஸ்ய அவதாரத்தின் பெருமைகளை விளக்க வந்தவை)
12 ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ் ந்த தேவராஜன் என்பவருக்குவரதன் என்றொரு மகன் இருந்தார்.
தேவராஜன், தமது மகனான வரதனுக்கு ராமாநுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம்என்னும் நூலை உபதேசித்து வந்தார்.
வரதன் அவ்வப்போது கேட்கும் கேள்விக ளுக்குத் தந்தையால் சரிவர பதிலளிக்க இயலவில்லை.
அதனால் தன் மகனிடம், “நீ மிகவும் கெட்டி க்காரனாக இருக்கிறாய். உனக்கு ஏற்றபடி ஸ்ரீபாஷ்யத்தை உபதேசிக்க வேண்டும் என்றால், திருவெள்ளறையில் வாழும் எங்களாழ்வான் என்னும் குருவால் தான் முடியும். நீ அவரிடம் செல்!” என்று சொல்லி வரதனைத் திருவெள்ளறைக்கு அனுப்பி வைத்தார் தேவராஜன்.
திருவெள்ளறையில் உள்ள எங்களாழ்வா னின் இல்லத்தை அடைந்த வரதன், வீட்டி ன் கதவைத் தட்டினார். “யார் அங்கே?” என்று எங்களாழ்வான் கேட்டார்.
“நான் வரதன் வந்திருக்கிறேன்!” என்று சொன்னார் வரதன்.
“நான் செத்த பின் வாரும்!” என்று உள்ளே இருந்தபடி பதிலளித்தார் எங்களாழ்வான். ஒன்றும் புரியாமல், காஞ்சியிலுள்ள தனது தந்தையிடமே திரும்ப வந்தார் வரதன்.
“தந்தையே! நீங்கள் காட்டிய குருவிடம் சென் றால், நான் செத்தபின் வாரும் என்கி றார் அவர் செத்தபின் யாரிடம் செல்வது?” என்று கேட்டார் வரதன்.
தேவராஜன், “வரதா! நான் என்று அவர் தன்னைச் சொல்லிக் கொள்ளவில்லை. நீ கதவைத் தட்டியவுடன், நான் வரதன் வந்தி ருக்கிறேன் என்று சொன்னாய் அல்லவா? நான் என்ற அந்த அகங்காரம் செத்த பின் வரும்படி அவர் உனக்கு அறிவுரை கூறியு ள்ளார். அடுத்தமுறை செல்லும் போது, அடியேன் வரதன் வந்திருக்கிறேன் என்று சொல்!” என்று கூறினார் தேவராஜன்.
அவ்வாறே அடுத்தமுறை எங்களாழ்வானி ன் வீட்டு கதவை தட்டிய வரதன், “அடியேன் வரதன் வந்திருக்கிறேன்!” என்று கூற,
“உள்ளே வாரும்!” என்று அழைத்தார் எங்களாழ்வான்.
“ராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யத்தை அடியேனு க்கு உபதேசித்தருள வேண்டும்!” என்று
வரதன் பிரார்த்தித்தார்.
“இவ்வூரில் எனக்கு உறவினர்கள் அதிகம். ஆகையால் அவ்வப்போது ஜனன-மரணத் தீட்டுச் செய் திகள் வந்து கொண்டே இருக் கும். நமது பாடங்களும் தடைபடும். அத னால் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்வோம்.
அங்கே உமக்கு ஸ்ரீபாஷ்யம் முழுவதையும் உபதேசிக்கிறேன்!” என்று சொன்னார் எங்களாழ்வான்.
இருவரும் திருவெள்ளறையிலிருந்து ஸ்ரீ வில்லிபுத்தூரை நோக்கி புறப்பட்டார்கள். வழியில் மதுரையில் உள்ள கள்ளழகரைத் தரிசனம் செய்தார்கள்.
அப்போது எங்களாழ்வான் வரதனிடம், “வரதா! இந்தக் கள்ளழகர் தான் முன்னொ ரு சமயம் இப்பாண்டிய நாட்டில் மீன் வடி வில் மத்ஸ்யாவதாரம் செய்தார்.வைகை நதியில் மீனாகத் தோன்றி, மதுரையை ஆண்ட சத்தியவிரதன் என்ற மன்னருக்கு நிறைய வேதாந்த விஷயங்களை உபதே சித்தார்..."
"மத்ஸ்ய மூர்த்தி செய்த உபதேசங்களின் தொகுப்பு தான் மத்ஸ்யபுராணம் ஆகும். அப்பெருமாளின் நினைவாகத் தான் பாண்டிய மன்னர்கள் தங்கள் கொடியில் மீன் சின்னத்தை வைத்தார்கள். சத்தியவி ரதனுக்குக் கருணையோடு பல உபதேச ங்கள் செய்த அந்த மத்ஸ்ய மூர்த்தியே
குருமார்களுக்கெல்லாம் குருவாக விளங் குபவர். அதனால் இவருடைய அருள் இரு ந்தால், நீ விரைவில் ஸ்ரீபாஷ்யத்தைக் கற்றுத் தேர்ந்திடுவாய்!” என்று கூறினார்.
வரதனும் கள்ளழகரை வணங்கி விட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலுள்ள கொல்லங்கொண்டான் என்னும் இடத்தில்
எங்களாழ்வானோடு தங்கி ஸ்ரீபாஷ்யம் கற்றார்.
அதன்பின் காஞ்சிபுரத்துக்கு வந்து தான் கற்ற பாஷ்யத்தைத் தமது சீடர்களுக்கெ ல்லாம் உபதேசம் செய்தார். ஸ்ரீபாஷ்யத் துக்கு விளக்கவுரையான சுருதப் பிரகாசி கை என்னும் நூலையும் உருவாக்கினார்.
அந்த வரதன் தான் பின்னாளில் ‘நடாதூர் அம்மாள்’ என்று போற்றப்படும் மிகப்பெரி ய வைணவ குரு ஆனார். தாம் இத்தகைய குருவாய் உருவெடுத்தமைக்குப் பாண்டிய நாட்டில் மீனாய் அவதரித்த மத்ஸ்ய மூர்த்தியின் அருளே காரணம் என்பதை
உணர்த்தும் விதமாக, நடாதூர் அம்மாள், தாம் இயற்றிய பிரபன்ன பாரிஜாதம் என்ற நூலில்,
“லக்ஷ்மீ சக்ஷு: அநுத்யானாத் தத் ஸாரூப்யம் உபேயுஷே|நமோஸ்து மீன வபுஷே வேதவேதி விபன்முஷே||”
என்று சுலோகம் அமைத்து மத்ஸ்ய மூர்த்தியைத் துதிசெய்துள்ளார்.
‘குருதமோ குரு:’ என்றால் குருவுக்கெல்லா ம் குருவாக விளங்குபவர் என்று பொருள். அவ்வாறு குருவுக்கெல்லாம் குருவாக விளங்கி நடாதூர் அம்மாள் போன்ற குரு மார்களை எல்லாம் உருவாக்கியபடியால், மத்ஸ்யாவதாரப் பெருமாள் ‘குருதமோ குரு:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 211-வது திருநாமம்.
“குருதமோ குரவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் நல்வழிகாட்டும் சிறந்த குருநாதர்.
ஓம் நமோ நாராயணாய....
No comments:
Post a Comment