Sunday, December 11, 2022

நந்தி என்பது சிவபெருமானின் பெயர்.

சிவ சிவ

வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
நந்தி என்பது சிவபெருமானின் பெயர். 

அந்த நந்தியே நமக்கு குருவாகவும் இருந்து வழிகாட்டுகிறார். 

உயிர்களாகிய ஆன்மாக்கள் முப்பெரும் மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றுடன் ஒட்டியே உள்ளன. 

நெல்லும் உமியும் போல. 

மலங்களோடு உழல்வதால், இறைவனை மறந்து சிற்றின்பங்களில் திளைத்து திரிகின்றன. 

இதனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. 

இந்த மலத்தை நீக்கினால், இறைவன் திருவருளைப் பெறலாம். 

இந்த மலத்தை நீக்குவதற்கே இறைவன் திருவருள் வேண்டும். 

அதை அவ்வுயிர்கள் வேண்டி நிற்க வேண்டும். 

அவ்வாறு அந்த மலத்தை அறுத்து ஞானத்தை அளிக்க வல்லது அந்த சிவம் ஒன்றே. 

ஆகவே, அந்த மலங்களை அறுக்க வல்லவன் திருப்பாதம் வாழ்க என்கிறார் #திருமூலர். 

மலமறுத்து நலமுற மன்னுவித்தது திருவடியுணர்வு. 

அதனால் சிவ சிவ

அதனால் மெய்ஞ்ஞானத்தவன்தாள் வாழ்க என்றனர். 

அவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவனாதலின் மலமிலான் பாதம் வாழ்க என்று ஓதியருளினர். 

திருவடி, பதம், தாள், பாதம் நான்கும் ஒருபுடையொப்பாக நன்னெறிநான்மை நற்றவப்பேற்றினைக் குறிக்கும். 

இதனை, 'சீலமடி நோன்புபதம் தாள்செறிவு பாதமே, ஏலுமறி வாமால் இசை' என நினைவுகூர்க. இதன்கண் காணப்படும் வாழ்த்து எட்டினாலும் சிவபெருமானின் வான்குணம் எட்டும் குறிப்பாகக் குறிக்கப்படும் தனித் தமிழ் மாண்பின் இனித்த மாறா வனப்போர்க. இதனை, 'வாழ்த்தெட்டால் வள்ளல் சிவபெருமான் எண்குணமும், வாழ்த்து தமிழ் தாடலைவாழ் மாண்பு' என நினைவுகூர்க.

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
   
 : #திருமூலர்.

#திருச்சிற்றம்பலம். பாதம் வாழ்க என்று ஓதியருளினர். 

#திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...