Sunday, December 11, 2022

சிவத்தின் அடையாள சின்னமான உத்திராட்சம் அணிந்து வந்துள்ளீர்களா?"

நமச்சிவாய வாழ்க

பிறவாமையைப் பெறுவதற்கு எளிய வழி
********************************************
ஒரு நாள் திருநாவுக்கரசு சுவாமிகள் சிவலாயம் ஒன்றில் திருப்பணி முடித்து வருங்கால் தன் எதிரில் ஒரு பெரியவர் அப்பர் பெருமானிடம் அய்யா முதுமை அடைந்து விட்டேன், எனக்கு விரைவில் பிறப்பற்ற இறப்பு கிடைக்குமா? என்று வினவினார், அப்பர் சுவாமிகளிடம்.

 உடனே அப்பர் சுவாமிகள் அப்பெரியவரிடம் கேட்டார், " அய்யா ! தாங்கள் இந்நாள் வரை தினமும் ஒருபொழுதேனும் இறைவனின் திருநாமமாகிய திருஐந்தெழுத்தை வாயாரா கூறி வந்துள்ளீர்களா?,

 அனுதினமும் இறைவனுடைய பெருமைகளையும், கேட்டும் ஏனையோருக்கு கூறியும் பாடியும் உள்ளீர்களா? , தினமும் உணவு அருந்தும் முன் அருகிலுள்ள சிவலாயம் சென்று வலம் வந்து அவரை சேவித்துள்ளீர்களா? , 

இறைவனுக்கு மலர் பறித்து அவன் பாதங்களில் சமர்த்துள்ளீர்களா?, சைவ நெறியின் அடையாள சின்னமாகிய அனுதினமும், சிவாயநம என்று கூறி திருநீரு அணிந்து வந்துள்ளீர்களா?,

 சிவத்தின் அடையாள சின்னமான உத்திராட்சம் அணிந்து வந்துள்ளீர்களா?"

 என்றார், அதற்கு அப்பெரியவர் அய்யா இவற்றை எல்லாம் ஒருநாளும் ஒரு பொழுதேனும் செய்ததும்இல்லை, கேட்டதும் இல்லை என்றார், உடனே அப்பர் பெருமான் மனம் நொந்து " அய்யா, இவ்வளவு காலமும் இதையெல்லாம் செய்யாமல் வீணாக காலத்தை கழித்து விட்டீரே !

 கிடைத்தற்கரிய வாய்ப்பை இதுவரை நலுவ விட்டுவிட்டேரே! செய்த பாவங்களை குறைக்க எடுத்த மனிதப் பிறவியை வீணே துலைத்து விட்டு மேலும் மேலும் பாவ சுமைகளை ஏந்தியுள்ளீர்களே ! " என்றார். 

   இதன்  பொருட்டு அப்பர் பெருமான் பாடிய பாடல்

"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்

தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்
ஒருகாலுந் திருக்கோவில் சூழாராகில்

உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்

அருநோய்கள் கெட வெண்ணீ றணியாராகில்

அளியற்றார் பிறந்த வாறு ஏதோ என்னில்

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்

பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே " நாவுக்கரசர் தமிழ் வேதம் 6
இறைவருடைய திருநாமமாகிய திரு ஐந்தெழுத்தை சொல்லாமலும், இறைவருடைய பெருமைகளை ஒரு முறையாவது பேசாமலும், தினமும் ஒருமுறையாவது சிவாலயத்தை வலம் வராமலும் , உண்பதற்கு முன் இறைவருக்கு மலர் பறித்து இடாமலும், சைவ சின்னமான திருவெண்ணீரு அணியாமலும் வாழ்பவர்கள் நோய்களால் துன்புற்று இறப்பர், மீண்டும் மீண்டும் பிறப்பர், அப்பிறவியிலும் பயனின்றி மீண்டும் இறப்பர், இதுவே இவர்களுக்கு தொழிலாகி விடும்.

மிக முக்கியமான செயல் திருஐந்தெழுத்தைச் சொல்லுவதாகும், இதனால் நோய்களும் நீங்கும், இனிமேல் பிறக்கவும் நேரிடாது. இதனை சொல்பவர், திருநாமத்தை சொல்லி (சிவாயநம) (நமசிவாய) செபித்து, பிறவாமையை அடைய திருநாவுக்கரசர் சுவாமிகள் ஆவார்,

பெரும் பொருள் செலவு செய்து அர்த்தமற்ற சடங்குகள் ஆரவாரத்துடன் செய்வதால் பிறவாமையைப் பெற்றுவிட முடியாது.

திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...