தங்கைக்காக திருமணச்சீர் கொண்டுவந்த
மாங்காடு பெருமாள்...!
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தங்கை பார்வதிக்காக திருமணச்சீர் கொண்டு வந்த வைகுண்டவாசர் கோவில் கொண்டிருக்கிறார்.
சீதனத்துடன் வந்த சீனிவாசரான இவரை தரிச்சித்தால் பணத்தடை நீங்கி திருமணம் விமரிசையாக நடந்தேறும் என்பது தலத்தின் ஐதீகம்.
கைலாயத்தில் ஒரு சமயம் அம்பிகை சிவனின் கண்களை விளையாட்டாக மூடவே உலகம் இருளில் மூழ்கியது.
அம்பிகை மீது கோபம் கொண்ட சிவன்,அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார் பூலோகம் வந்த அம்பிகைமானிடப் பெண்ணாக சிவன் மீது பக்தி கொண்டு வாழ்ந்தாள். தங்கைக்கு திருமணச் சீராக மோதிரம் கொண்டு வந்த மாங்காடு பெருமாள்
சிவன் தன்னைத் திருமணம் செய்ய வேண்டுமென தவத்தில் ஆழ்ந்தாள். தங்கை பார்வதிக்காக வைகுண்டத்தில் இருந்து மகாவிஷ்ணுவும் சீர் கொண்டு வந்தார்.
அச்சமயத்தில்அசுரகுருவான சுக்ரச்சாரியரும் சிவனை வேண்டி பூலோகத்தில் தவமிருந்து வந்தார்.தனது குடும்பத்தை விட பக்தனுக்கே முதலிடம் தந்த சிவன், சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார்.
அம்பிகையும்.சுக்ராச்சாரியாரும்தவம்புரிந்துகொண்டி
ருந்த இடம் இன்றைய மாங்காடு (சென்னை) என சொல்லப்படுகிறது.
சுக்ராச்சாரியருக்கு வரமருளிய சிவன், அம்பிகைக்கும் காட்சி தந்து, காஞ்சிபுரத்தில் மணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.
அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தவ வாழ்க்கையைத் தொடர்ந்தாள் பூலோகம் வந்த மகாவிஷ்ணு, மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்த சமயத்தில், மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு நடந்ததைக் கூறினார்.
புண்ணியதலமான மாங்காட்டில் தங்கும்படி கேட்டுக் கொண்ட. பெருமாளும்
வைகுண்டவாசர்என்னும்.
திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளினார்
சீதனுத்துடன் பெருமாள்
வைகுண்ட பெருமாள் கையில் பிரயோக சக்கரம் வைத்த நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார். அருகில் மார்க்கண்டேயர் தவம் செய்த நிலையில் இருக்கிறார்.
தங்கைக்கு திருமணச்சீராக பெருமாள் கொண்டு வந்த மோதிரம் வலது கையில் இருக்கிறது. கனகவல்லித் தாயார் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
பிரகாரத்தில்ஆண்டாள், ஆஞ்சநேயர், திருக்கச்சிநம்பிகள், நம்மாழ்வார், ராமானுஜர், விஷ்வக்சேனர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபட்டால் பொருளாதாரத் தடை நீங்கி திருமணம் விமரிசையாக நடந்தேறும் என்பது ஐதிகம்.
வைகுண்டத்தில் இருந்து நேரடியாக பூலோகம் வந்ததால், வைகுண்டவாசர் என்று பெயருடன் விளங்குகிறார்.
இத்தலமே வைகுண்டமாக திகழ்வதால், சொர்க்கவாசல் தனியாக இங்கு அமைக்கப்படவில்லை ஏகாதசி நாட்களில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார்.
கருவறைக்கு எதிரே கருடாழ்வாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இவருக்கு சிறகு இரண்டும் மூடிய நிலையில் உள்ளது மாறுபட்ட துவாரபாலகர் பெருமாள் கோவில்களில் ஜெயன், விஜயன் ஆகியோரே துவாரபாலகர்களாக இருப்பது வழக்கம்.
இங்கு அவிரட்சகன், அக்னி என்னும் பெயரில் துவாரபாலகர்களாக இருப்பது மாறுபட்ட அமைப்பாகும்.
தலவிருட்சமாக மாமரம் உள்ளது மாங்காடு காமாட்சியம்மன் கோவிலும், சிவன் சுக்ராச்சாரியருக்கு காட்சி தந்த வெள்ளீஸ்வரர் கோவிலும் சற்று தூரத்தில் உள்ளன.
No comments:
Post a Comment