Saturday, March 30, 2024

பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் #ஸ்ரீநாராயண தீர்த்தர்

#ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்!

மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.

பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் #ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி. ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.
'இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன...' என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார். அதற்கு சீடர்கள்,

 'குருவே... காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார். அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை...' என்றனர்.

உடனே நாராயண தீர்த்தர், 'இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம்...' என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், பகவானை நோக்கி, தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். 

அதன் விளைவாக, பெருமான், பூபதிராஜபுரம் எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, 'நாராயண தீர்த்தரே... நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய்.
'அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய்.
'நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது...' என்றார்.

இதன் பின், பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் பாடல்களைப் பாடி, தன் துயரம் தீர்த்தார் நாராயண தீர்த்தர். தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அருளால் மட்டுமே, துயரம் தீரும் என்பதை விளக்கும் வரலாறு இது.

திருமாலை ஆண்டானும்,திருமலை ஆண்டானும்
இந்த மாசி மகத்தில் தான்,
உடையவரின் ஐந்து ஆசார்யர்களுள் ஒருவரான திருமலை ஆண்டான் என்னும் ஞானபூரணர் அவதரித்தார்.
திருமாலிருஞ்சோலையில் அவதரித்த இவரின் முன்னோர்களில் ஒருவரான
கண்ணுக்கினியான் என்பவர் காலத்தில்,மலையாள நாட்டில் இருந்த மாந்திரீகர்கள் சிலர் தங்கள் கண்களில் மாந்திரீக மையிட்டு
வந்து,அழகரின் சக்தியை அபகரிக்க திட்டமிட்டனர்.இதை அறிந்த கண்ணுக்கினியான் அவர்கள் பிரசாத த்தில் நிறைய மிளகுதூள்
தூவிவிட்டார்.அவர்கள்சாப்பிடும் போது கண்ணில் நீர் வழிந்து மை கரைந்து விட்டது.எனவே அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இவ்வாறாக அவர் திருமாலைக் காப்பாற்றியதால் திருமாலை ஆண்டான் என்ற பெயர் ஏற்பட்டது.
அவர் சந்த தியினர் அனைவரும் இந்தப் பட்டப் பெயரை வைத்துக் கொண்டனர்.இன்றும் திருமாலை ஆண்டான் வம்சத்தவர் தான் அழகர் கோயில் புரோகிதர்களாக உள்ளனர்.
சித்திரைத் திருவிழாவில் அழகர் மதுரைக்குச் செல்லும் போது,அழகர் பல்லக்குக்கு முன்னால்.ஆண்டான் வம்சத்தினர் இன்னொரு பல்லக்கில்
செல்வார்கள்.அங்கு "ஆண்டான் பல்லக்கு முன்னே,அழகர் பல்லக்கு பின்னே" என்று ஒரு சொல்வடையும் உண்டு.
திருமலைத் தெய்வமான திருவேங்கடவரின் அடையாளங்களை மாற்றி,தவறான அர்த்தம் கூறி அவர் பெருமாளே அல்ல என்று பலர் வாதிட்டனர்.அந்த நேரத்தில் தேசிகேந்திரன் ராமானுஜர் தலையிட்டு,திருவேங்கடவர்,பெருமாளின் இலட்சினைகளான சங்கு,சக்கரங்களை ஏந்தச் செய்தார்(ஒரு நாள் இரவு அவர் பெருமாள் அல்ல,வேறு கடவுள் என்று சொன்னவர்களும்,ராமானுஜரும்
வேங்கடவரின் கருவறையில் வேறு,வேறு கடவுளரின் இலட்சினைகளையும்,சங்கு,சக்கரத்தையும் வைத்துப் பூட்டிவிட்டு வந்துவிட்டனர்.மறு நாள் காலையில் கதவைத் திறந்து பார்க்கும் போது,சீனிவாசப் பெருமாள் சங்கு,சக்கரங்களை ஏந்திக்கொண்டு பெருமாளாகச் சேவை சாதித்தார்.
இதனால் உடையவரை அப்பனுக்கு சங்காழி அளித்த ஆசார்யர் என்று கொண்டாடினர்.
எனவே திருமலைப் பெருமாளை நிலைநிறுத்திய உடையவரை
'திருமலை ஆண்டான்'என்றும் போற்றலாமே!! மேலும் கண்ணுக்கினியான் திருமாலை ஆண்டானின் முன்னோர் என்றால்,மனத்துக்கு இனியான்(ஶ்ரீராம பிரான்) இலட்சுமண முனியின் முன்னோர் என்றும் கொள்ளலாமேதிருமாலை ஆண்டானும்,திருமலை ஆண்டானும்
இந்த மாசி மகத்தில் தான்,
உடையவரின் ஐந்து ஆசார்யர்களுள் ஒருவரான திருமலை ஆண்டான் என்னும் ஞானபூரணர் அவதரித்தார்.
திருமாலிருஞ்சோலையில் அவதரித்த இவரின் முன்னோர்களில் ஒருவரான
கண்ணுக்கினியான் என்பவர் காலத்தில்,மலையாள நாட்டில் இருந்த மாந்திரீகர்கள் சிலர் தங்கள் கண்களில் மாந்திரீக மையிட்டு
வந்து,அழகரின் சக்தியை அபகரிக்க திட்டமிட்டனர்.இதை அறிந்த கண்ணுக்கினியான் அவர்கள் பிரசாத த்தில் நிறைய மிளகுதூள்
தூவிவிட்டார்.அவர்கள்சாப்பிடும் போது கண்ணில் நீர் வழிந்து மை கரைந்து விட்டது.எனவே அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இவ்வாறாக அவர் திருமாலைக் காப்பாற்றியதால் திருமாலை ஆண்டான் என்ற பெயர் ஏற்பட்டது.
அவர் சந்த தியினர் அனைவரும் இந்தப் பட்டப் பெயரை வைத்துக் கொண்டனர்.இன்றும் திருமாலை ஆண்டான் வம்சத்தவர் தான் அழகர் கோயில் புரோகிதர்களாக உள்ளனர்.
சித்திரைத் திருவிழாவில் அழகர் மதுரைக்குச் செல்லும் போது,அழகர் பல்லக்குக்கு முன்னால்.ஆண்டான் வம்சத்தினர் இன்னொரு பல்லக்கில்
செல்வார்கள்.அங்கு "ஆண்டான் பல்லக்கு முன்னே,அழகர் பல்லக்கு பின்னே" என்று ஒரு சொல்வடையும் உண்டு.
திருமலைத் தெய்வமான திருவேங்கடவரின் அடையாளங்களை மாற்றி,தவறான அர்த்தம் கூறி அவர் பெருமாளே அல்ல என்று பலர் வாதிட்டனர்.அந்த நேரத்தில் தேசிகேந்திரன் ராமானுஜர் தலையிட்டு,திருவேங்கடவர்,பெருமாளின் இலட்சினைகளான சங்கு,சக்கரங்களை ஏந்தச் செய்தார்(ஒரு நாள் இரவு அவர் பெருமாள் அல்ல,வேறு கடவுள் என்று சொன்னவர்களும்,ராமானுஜரும்
வேங்கடவரின் கருவறையில் வேறு,வேறு கடவுளரின் இலட்சினைகளையும்,சங்கு,சக்கரத்தையும் வைத்துப் பூட்டிவிட்டு வந்துவிட்டனர்.மறு நாள் காலையில் கதவைத் திறந்து பார்க்கும் போது,சீனிவாசப் பெருமாள் சங்கு,சக்கரங்களை ஏந்திக்கொண்டு பெருமாளாகச் சேவை சாதித்தார்.
இதனால் உடையவரை அப்பனுக்கு சங்காழி அளித்த ஆசார்யர் என்று கொண்டாடினர்.
எனவே திருமலைப் பெருமாளை நிலைநிறுத்திய உடையவரை
'திருமலை ஆண்டான்'என்றும் போற்றலாமே!! மேலும் கண்ணுக்கினியான் திருமாலை ஆண்டானின் முன்னோர் என்றால்,மனத்துக்கு இனியான்(ஶ்ரீராம பிரான்) இலட்சுமண முனியின் முன்னோர் என்றும் கொள்ளலாமே

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...