Friday, February 10, 2023

மயிலம் முருகனின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்....!

மயிலம் முருகனின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்....!
மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். மயிலம் முருகன் கோவிலின்  சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.

தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் மயிலத்தில் வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்கு உள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது.

முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன.

மயிலம் கோவில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை.

மயிலம் ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.

மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது.

பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

தல புராணத்தின்படி ‘சங்ககுணா’ ஒரு அசுரன். அழகில்லாத, நிலையில்லாத அசுரன். ஆகவே தான் அவன் பெயரில் உள்ள சங்க மற்றும் சங்கு என்ற வார்த்தை கள் ஒலி தரும் சங்கைக் குறிக்கும்.

சங்கு ஊதும் பல பூத கணங்களிலும் அவரும் ஒன்றாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட உருவ சிலைகள் அங்குள்ள தேர்களில் நிறையவே செதுக்கப்பட்டு உள்ளன.

ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்க இரண்டு தேர்கள் செய்யப்பட்டு உள்ளன. அவற்றை பங்குனி பிரும்மோத்ச வத்தில் உபயோகிக்கின்றார்கள்.

மைலத்தில் உள்ள சிற்பத்தில் கிருத்திகைகள் ஆறு குழந்தைகளாக தாமரையில் இருந்த முருகனை தங்களுடைய கரங்களில் எடுத்துக் கொள்வதைப் போன்ற காட்சி உள்ளது.

இதற்கு பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் எல்லாவற் றையும் தரிசிக்கும் ஏற்பாடுகளோடு பக்தர்கள் வரலாம்.

வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. 

இது தவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.

எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.

ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்...
வழிபட்டால் நிச்சயமாக மன அமைதி கிடைக்கும்...

ஓம் முருகா.....!!!

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...