Friday, February 10, 2023

_அகத்தியர் பெருமான் வாழும் பொதிகை

_அகத்தியர் பெருமான் வாழும் பொதிகை



அகத்தியம் எனும் தமிழ் இலக்கண நூலை முதன்முதலில் தந்தவர் அகத்தியமுனிவர். தமிழ் மொழியின் முச்சங்க வரலாற்றில் தலைச் சங்க புலவர்களின் தலைவராக போற்றப்படுகிறார். வடக்கு மலையில் வாழ்ந்துவந்த அகத்தியர், ஏதோ ஒரு காரணத்துக்காக தெற்கு நோக்கி வந்து பொதிகை மலையில் நிரந்தரமாக தங்கிவிட்டார். அது என்ன காரணம், மறைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பொக்கிஷங்கள் எவை, பொதிகை மலைக்கு எப்படி செல்லலாம் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

கைலாய மலைக்கு இணையான அகத்திய மலை உச்சியில் உள்ள அகத்தியர் சிலை...

பொதிய மலையில் இருந்து கொண்டுஅகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கதைகள் கூறுகின்றன. இந்த மலையின் உச்சியில் அகத்தியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்ல, வாகனங்கள் செல்ல முடியாத அடர் வனத்தின் வழியே, இரண்டு நாள் இரவு, மூன்று நாள் பகல் என்று கடுமையான நடைபயண யாத்திரையை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். 

1995 ஆண்டுக்கு முன் வரை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாண தீர்த்தம் அருவி, பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, பொதிகைக்குப் பக்தர்கள் சென்று வந்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய 
பாதுகாப்பைக் காரணம் காட்டி, இவ்வழியாக பொதிகை மலை செல்வதற்கு, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக வனத்துறை தடை விதித்து விட்டது. 

இதனால் மலையின் மறு பக்கத்தில் உள்ள திருவனந்தபுரம் வழியாக பொதிகை யாத்திரை செல்ல, கேரள வனத்துறை அனுமதிக்கிறது. இணையம் மூலம் முன் பதிவு செய்பவர்களிடம், உரிய கட்டணம் பெற்றுக் கொண்டு, பயிற்சி பெற்ற காணிகள் துணையுடன் கேரள வனத்துறை பொதிகைக்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சிவராத்திரி வேளையிலும், அதன் பின், மே மாதத்தில் மட்டும் இப்பயணத்தை கேரள வனத்துறை அனுமதிக்கிறது. 

எங்குள்ளது
---------------------

மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்த பொதிகை மலை கடல்மட்டத்திலிருந்து 6200 அடி உயரமுள்ளது. இது ஆனைமலையின் தொடர்ச்சியாகவும், மகேந்திரகிரி, பாபநாசம் மலைகளையும், முண்டந்துரை காடுகளையும், கேரளாவின் சில காடுகளையும் கொண்டுள்ளது.

அகத்திய மலை
----------------------------

இந்த மலையில்தான் தனது பெரும்பான்மையான காலத்தை அகத்தியர் கழித்தார் என்பதால், இம்மலை அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது தலைநகர் சென்னையிலிருந்து 596 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மலை.

இந்த மலை கேரள மாநிலத்தில் ஒரு பகுதியாகவும், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. இதனால் இரண்டு வழிகளில் இந்த மலையை அடைய முடியும்.

பொதிகை மலையை எப்படி அடைவது?
---------------------------------------------------------------------

பொதிகை மலை அல்லது அகத்திய மலையில் இருக்கும் தமிழர்களின் பொக்கிஷங்களைத் தேடி இரண்டு வழிகளில் இம்மலையை அடையமுடியும். அவை தமிழ்நாட்டின் திருநெல்வேலி வழி, கேரளத்தின் திருவனந்தபுரம் வழி.

புலிகளின் பொற்காடு
---------------------------------------

இந்த மலைகளில்தான் இந்தியாவிலேயே அதிக புலிகள் இருந்தது. இது புலிகளின் பொற்காடு என்றும் கூறப்பட்டது. தற்போது புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், அதை பெருக்க அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டுவருகிறது. புலிகள் உள்பட காட்டு விலங்குகள் அதிகம் இருப்பதால் இம்மலை ஒன்றும் அந்த அளவுக்கு சுலபமாக ஏறக்கூடியது அல்ல.

தடை
---------

திருநெல்வேலி வழியாக மலையை அடைய வனத்துறை தடை விதித்துள்ளது. மரங்கள் அடர்த்தி, மற்றும் விலங்குகளின் புகலிடமாதலால், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு பிறகு இந்த மலையில் நடமாடக்கூடாது என்பது சட்டம். மேலும் சிறப்பு அனுமதி பெற்று காடுகளில் சுற்றித் திரியலாம். ஆனால் அந்த அனுமதி அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைப்பதில்லை. வனவிலங்கு ஆர்வலர்கள், விலங்குகள் கணக்கெடுப்பாளர்கள் மட்டுமே சென்று வரமுடியும்.

கேரளத்தின் வழி டிரெக்கிங்
-------------------------------------------------

கேரளமாநிலம் திருவனந்தபுரம் வழியாக இம்மலையை அடைவது சற்று சுலபம் என்றாலும், அந்த அளவுக்கு சுலபம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

வருடத்தில் ஒரே ஒரு முறை
-------------------------------------------------

ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சீசன் வருகிறது. அப்போது கேரள வனத்துறை இந்த மலையில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கிறது. அதுவும் சுலபமாக அல்ல. அதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது.

மழை மற்றும் வனவிலங்குகள்
-------------------------------------------------------

மழைக்காலம் மற்றும் வனவிலங்குகளின் வாழ்வாதாரம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக மற்ற நேரங்களில் இதுபோன்ற பயணங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. சரி நாமும் மலையேறலாமா?

மலையேற்றம்
--------------------------

முதலில் பொதிகை மலை ஏற, திருவனந்தபுரம் மாவட்டம் பேய்ப்பாறை வனச் சரகத்திடம் அனுமதி பெறவேண்டும். அதன்பின்னர் அவர்கள் பரிந்துரைக்கும் வழிகாட்டிகளுடன், நமக்கு தேவையான பொருள்களையும் தயார் செய்யவேண்டும்.

இரண்டு நாள் பயணம்
-----------------------------------------

இந்த பயணம் இரண்டு நாள்களுக்கானதாகும். உணவுகள் சேகரிக்கவேண்டும். முழுமையான பயணத்துக்கும் திட்டமிடவேண்டும். அனுமதி மறுக்கப்பட்ட பொருள்களை வனச்சரக அலுவலகத்திலேயே ஒப்படைத்துவிட்டு பயணத்தை தொடரலாம்

வரவேற்கும் அகத்தியர்
------------------------------------------

மலையேற்றத்தின் முதலிலேயே அகத்தியர் உங்களை வரவேற்பார். அவருக்கு கோயில் கட்டி பூசை செய்கிறார்கள் இந்த இடத்தில். சற்று தொலைவில், பிள்ளையார் சன்னதி ஒன்று உள்ளது. இதையெல்லாம் தாண்டி, தமிழர்களின் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களைத் தேடிய நம் பயணம் தொடங்கும்.

உயிர்காக்கும் மூலிகை
------------------------------------------

சஞ்சீவினி மலை என்று புராணத்தில் குறிப்பிட்டது இந்த மலையைத்தான் என்றும் சிலர் கூறுகின்றனர். நீண்டநாள் வாழும் அரிய வகை மரங்கள், ஆயுள் நீட்டிக்கும் மூலிகைகள் எல்லாம் இங்கு கிடைக்கின்றன.

உயிர் போகும் அம்சங்கள்
----------------------------------------------

உலகிலேயே கொடுமையான விசமுள்ள உயிரினங்களையும் இந்த மலைக் கொண்டுள்ளது. அரிய வகை பாம்புகள், எட்டுக்கால் பூச்சி, அட்டை பூச்சிகள் என பலவற்றிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பட்டபகலில் இருளாகும்
------------------------------------------

மிகவும் அடர்த்தியான மரங்கள் இருப்பதனால் பட்டபகலிலேயே இருள் சூழ்ந்து காணப்படும் இடங்களும் இங்குள்ளன. ஏறுவதற்கு கடுமையான பாறைகளும் இருப்பதால், முடிந்தவரை வயதானவர்கள் இங்கு செல்வதை தவிர்க்கவேண்டும்

தங்கும் வசதிகள்
-------------------------------

மலையேற்றத்தின் முதல் நாள் இறுதியில், தங்குவதற்கு ஒரு இடம் உள்ளது. இங்கு கிடைப்பதை சமைத்து உண்டு சகோதரத்துவத்துடன் மக்கள் தங்குகிறார்கள். யார் யாரென்றே தெரியாதவர்களுடனும் நட்பு பாராட்டும் அளவுக்கு, நல்லிணக்கம் உருவாக்கும் மலையாக உள்ளது இந்த அகத்தியமலை.

தமிழர்களின் பொக்கிஷங்கள்
------------------------------------------------------

அகத்தியரைப் பற்றி தெரிந்தவர்கள், அவர் வல்லமை இல்லாத துறையே இல்லை என்றுகூறுவார்கள். மருத்துவத்தில் முதன்மையாக திகழ்ந்தவர் அகத்தியர். உயிர்கொல்லும் பல நோய்களுக்கு கூட மருந்து கண்டுபிடித்து ஓலைச்சுவடிகளில் வைத்திருக்கிறார் என்பவர்களும் உண்டு.

இரண்டாம் நாள் பயணம்
---------------------------------------------

அடுத்த நாள் பயணம்தான் முதல் நாளை விட சவாலானது. பின்னாடி வரும் நபரையே முகம் தெரியாதமாதிரி ஆக்கிவிடும் இங்குள்ள மேகங்கள். அந்த உயரத்துக்கு மேல் அனைத்தும் மேகங்கள்தான். குளிரைத் தாங்கிக்கொண்டு, சரிவான பாதைகளில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு பயணிக்கவேண்டும்.

அகத்தியர் தரிசனம்
------------------------------------

இவ்வளவு கடினங்களையும் தாண்டி வந்தபிறகு, 6200 அடி உயரத்துக்கு மேல், அகத்தியர் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சன்னதியை அடையலாம். 

மர்மங்கள்
-------------------

இன்னும் எண்ணற்ற மர்மங்கள் விடைதெரியாமல் அகத்திய மலையில் இருக்கிறது. அதை தெரிந்துகொள்வதற்கும்ஸ புரிந்துகொள்வதற்கும் ஒரு நாள் பயணம் போதாது. மூலிகைகளையும், அதிசயங்களையும் அரசு வெளிக்கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டவண்ணம் உள்ளது.

தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டும் என, பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்தியரை வேண்டி, பக்தர்கள் அங்கு சிறப்பு பூசைகள் நடத்துவர்.[18]

அடிக்குறிப்பு
----------------------

↑ பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நிலீஇயர் - புறநானூறு 2

↑ கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84

↑ பொதியிற்செல்வன் பொலந்தேர்த் திதியன் - அகநானூறு 25

↑ அவை இருந்த பெரும்பொதியில் பேய்மகளிர் ஆடத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்றான் - மதுரைக்காஞ்சி 161

↑ திருந்திலை நெடுவேள் தென்னவன் பொதியில் அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின் ததும்புசீர் இன்னியம் - அகநானூறு 138

↑ தொன்மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய நான்மொழிக் கோசர் வாய்மொழி போல அலர் பரவிற்று - குறுந்தொகை 15

↑ புனைதேர்க் கோசர் தொன்மூதாலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியாமையின், வம்ப மோரியர் வந்தனர் அகநானூறு 251

↑ மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில் சந்தனம் போல் அவள் தண்ணியள் - குறுந்தொகை 376

↑ பொதியில் பூத்த காந்தள் போன்ற கை அவளுக்கு - நற்றிணை 379

↑ அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும் கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - புறநானூறு 128

↑ இயங்குநர் செகுக்கும் எய்படு நனந்தலை, பெருங்கை எண்கு இனம் குரும்பி தேரும், புற்றுடைக் கவர புதல் இவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாள் கந்தத்து, புறா இருந்து பயிரும் - அகநானூறு 307

↑ கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரைமூதாளர் நாய் இடம் குழித்த வல் விளையாட்டு - புறநானூறு 52

↑ பொதியிலில் இருந்துகொண்டு நரைமூதாளர் வல் என்னும் சூதாட்டம் ஆடுவர் - அகநானூறு 377

↑ தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் லகர-ஈறு

↑ சிதலை வேய்ந்த போர்மடி நல்லில் பொதியில் - அகநானூறு 167

↑ முருகன் குடி கொள்ளும் இடங்களில் ஒன்று பொதியில் - முருகு 226

↑ வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில் பெண்யானையைத் பெருந்தூணில் கட்டிவைத்து யானையைப் புணரவிடுவர் - பட்டினப்பாலை 249

ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...