*தாமிரபரணி தவழும் நவகைலாயங்கள்.!!*
தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும்
நவகைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை.!
பொதிகைமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடையவேண்டி சிவபெருமானை வணங்கினார்.!
சிவபெருமான்,
மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார்.
அகத்திய மாமுனிவர்
தன்சீடரிடம் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்தமலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு. நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார்.!
*பாபநாசம்:*
இதுமுதல் கோயில் ஸ்ரீபாபநாசநாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர் உலகம்மை கோயில் உள்ளது. சூரியபகவான் அம்சம் கொண்டது.!
*சேரன்மகாதேவி:* ஸ்ரீஅம்மைநாதர் என்ற கைலாசநாதர் ஆவுடைநாயகி திருக்கோயில் சந்திரபகவான் அம்சம் கொண்டதலம்.!
*கோடகநல்லூர்:* ஸ்ரீகைலாசநாதர்
சிவகாமி அம்மை திருக்கோயில். செவ்வாய்பகவான் அம்சம் கொண்டதலம்.!
*குன்னத்தூர்:* அருள்மிகு ஸ்ரீகோதை பரமேஸ்வரன் என்ற கைலாசநாதர் சிவகாமசுந்தரி திருக்கோயில் ராகுபகவான் அம்சம் கொண்டதலம்.!
*முறப்பநாடு:* அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர் சிவகாமி அம்மை திருக்கோயில். குருபகவான் அம்சம் கொண்டதலம்.!
*ஸ்ரீவைகுண்டம்:* அருள்மிகு கைலாசநாதர்-சிவகாமி அம்மை திருக்கோயில். சனிபகவான் அம்சம் கொண்டதலம்.!
*தென்திருப்பேரை*: அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர்
அழகிய பொன்னம்மை திருக்கோயில். புதன்பகவான் அம்சம் கொண்டதலம்.!
*ராஜபதி:* அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர் பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில்.
கேதுபகவான் அம்சம் கொண்டதலம்.!
*சேர்ந்தபூமங்கலம*: அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர்-
அழகிய பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில்.
சுக்கிரன்பகவான் அம்சம் கொண்டதலம்.!
*நவகைலாய நாயகனை*
*வலம்வருவோம்.!!*
வாழ்க வளமாக
.
No comments:
Post a Comment