Monday, October 16, 2023

கரிகாற் சோழனுக்குத் துணையிருந்த இவ்விநாயகர்..

🙏🏻 *ஓம் கம் கணபதயே நமோ நமஹா*  🙏🏻

🙏🏻கோபுர தரிசனம் , கோடி புண்ணியம் இன்றைய கோபுர தரிசனம்🙏🏻


அருள்மிகு ஶ்ரீ  பெரியநாயகி அம்மன் சமேத சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர். (தேவாரம் பாடல் பெற்ற கோயில்)


🙏🏻தென்னாடுடைய  சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻


தென்னிந்திய  கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 1400 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .



🛕மூலவர்:
சவுந்தரேஸ்வரர் (அழகியநாதர், தாலவனேஸ்வரர்)


🛕அம்மன்/தாயார்:
பிரஹந்நாயகி, பெரியநாயகி


🛕தல விருட்சம்:
பனைமரம்



🛕தீர்த்தம்:பராசர தீர்த்தம், அமிர்த தீர்த்தம்



🛕புராண பெயர்:
தாலவனம், பனையூர்



🛕ஊர்:திருப்பனையூர்


🛕மாவட்டம்:திருவாரூர்


🛕மாநிலம்:தமிழ்நாடு



🛕பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்



🛕தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 73வது தலம்.


🛕திருவிழா:
சிவராத்திரி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது


🛕தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


🛕சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 136 வது தேவாரத்தலம் ஆகும்.



🛕பொது தகவல்:

பிரகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து விநாயகர் சன்னதி உள்ளது.



🛕 கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சன்னதி உள்ளது. 



🛕இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் “”இராசேந்திர சோழப் பனையூர்” என்று குறிக்கப் பெறுகின்றது சொல்லப்படுகிறது.


🛕பிரார்த்தனைபதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.



🛕நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.



🛕தலபெருமை:
கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது- ராஜகோபுரமில்லை. வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது.



🛕 உள்நுழைந்ததும் வலதுபுறம் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் – தெற்கு நோக்கியது. 



🛕இத்தலத்தின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது. இப்பெயர்க்குச் சொல்லப்படும் காரணம் வருமாறு:-



🛕தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய “இரும்பிடர்த்தலையார்’ என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். 



🛕அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தான். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் “துணையிருந்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார். .



🛕அடுத்துத் தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்துள்ளவை முதிர்ச்சியுறுங் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.



🛕இத்தல விநாயகர் சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக இவ்விநாயகரும், “மாற்றுரைத்த விநாயகர்’ என்றழைக்கப்படுகின்றார். 


🛕பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி – தாலவனேஸ்வரர் – மேற்கு நோக்கியது – சதுர ஆவுடையார் இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார். 


🛕மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை – நடராஜர் சந்நிதி உள்ளன.



🛕 துவாரபாலகர்கள் முகப்பில் உள்ளனர். உள்ளே சிவலிங்கத் திருமேனி அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன் விளங்குகின்றது.



🛕 இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்புடையது- இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.


🛕தல வரலாறு:
சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று “”தம்மையே புகழ்ந்து” என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வந்தார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, “அரங்காட வல்லார் அழகியர்’ என்று பதிகம் பாடி, அருள் பெற்றார்.



🛕 இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் “சந்தித்த தீர்த்தம்’ என்றும் பெயருடன் திகழ்கிறது.


🛕சிறப்பம்சம்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்



🛕ராஜகோபுரம் இல்லை. கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது. அந்த வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது மற்றொரு வாயில் உள்ளது.



🛕 இரு வாயில்களுக்கிடையே பெரியநாயகி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியில் விநாயகர் உள்ளார். இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. அருகே தல மரமான பனை மரம் உள்ளது.



🛕 அடுத்து உள்ள கருவறையில் மூலவர் சௌந்தரேஸ்வரர் உள்ளார். அவருக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. கோஷ்டத்தில் பராசர முனிவர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மாற்றுரைத்த விநாயகர் சன்னதி உள்ளது.


🛕 அடுத்து வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். அடுத்து சண்டிகேஸ்வரர் சன்னதியும், தாலவனேஸ்வரர் சன்னதியும் உள்ளன. பனை மரத்தை தலமரமாகக் கொண்ட ஊர்களாக வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர் என்ற ஐந்து ஊர்களும் அமையும். அவை பஞ்சதல சேத்திரங்கள் எனப்படுகின்றன. கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது.



🛕சப்த ரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.



🛕 திருக்கோயில் முகவரி

அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில் திருப்பனையூர் – 609 504, திருவாரூர் மாவட்டம்.

போன்:
+91-4366-237 007



🙏🏻 நற்றுணையாவது நமசிவாயமே 🙏🏻


சித்தமெல்லாம்  சிவமயத்துடன் கடையேன் ஞான சிவம் என்கின்ற ஜெயம் ஶ்ரீ கா பா.ஞானசேகரன்.
9976460143


 🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻

No comments:

Post a Comment

Followers

வயலூர் முருகன் குமரன் இங்கு குன்றில்லாத சமவெளியில் உள்ளார்

வயலூர் முருகன் கோவில் அருணகிரி நாதர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடிப் பரவசமடைந்ததலம்.  வயலூர்.  வ...