#விஜயதசமியில்_வேண்டியவை_கிடைத்திட
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் முவ்வாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான வன்னி மரம் உள்ளது. இங்கு வசித்து வந்த விபசித்தி முனிவரால் கட்டப்பட்ட கோயில் இது. அவர் சிவாலயம் கட்ட உத்தேசித்து, வேலையாட்களை திருப்பணியில் ஈடுபடுத்தினார். வேலையாட்களுக்கு கூலியாக, இங்குள்ள வன்னி மரத்தின் இலைகளை உருவி கொடுப்பார். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அதற்குத் தகுந்த பொன்னாக அந்த இலைகள் மாறும். இது கல்வெட்டுச் சான்றுகளிலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை இந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் இந்த பழமையான வன்னி மரமும் இதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் உள்ளது. இதனை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும்.
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த வன்னி மரத்தையும் விருத்தகிரீஸ்வரையும் விஜய தசமி நன்னாளில் பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது தெய்வீக நம்பிக்கை.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment