Monday, March 13, 2023

#தென்னாடுடைய #சிவனே_போற்றி #என்பதன்_அர்த்தம்_என்ன?

#தென்னாடுடைய 
#சிவனே_போற்றி 
#என்பதன்_அர்த்தம்_என்ன? 
நவகிரகத்தில் உள்ள குரு வடக்கு நோக்கியும்,  குரு தட்ஷணாமூர்த்தி தெற்கு நோக்கியும் அமைக்கப்பட்டிருப்பது ஏன்?

தென் தமிழும், வடஆரியமும் ஆகிய இரு மொழிகளே தாய்மொழியாகவும், தந்தை மொழியாகவும் இருந்து கலந்து பல நூறு குழந்தை மொழிகளை பெற்றெடுத்தனர்.

அப்பர் பெருமான் "ஆரியம் தமிழோடு இசையானவன் "என்று பாடி இக்கூற்றை மெய்ப்பித்துள்ளார்.

பஞ்ச பூதங்களில் நிலமும்,  ஆகாயமும் வெளிப்புறத்தில் இருந்து நம்மை இயக்குகிறது.

மீதியுள்ள நெருப்பு, நீர், காற்று ஆகிய 3பூதங்களும் உள்ளிருந்து நம்மை இயக்குகிறது.

உள்ளிருந்து நம்மை இயக்கும் 3 பூதங்களை ஆண் தன்மை என்றும், வெளியிலிருந்து நம்மை இயக்கும் 2 பூதங்களை பெண்தன்மை என்றும் யோககலாச்சாரத்தில் குறிப்பிட்டனர்.

தமிழில் இதை 3சுழி "ண "என்றும், 2சுழி "ன "என்றும் குறித்துள்ளனர்.

இதை நம் உடலமைப்பில் நுரையீரலிலும், இதயத்திலும் தெள்ளத்தெளிவாக காணலாம்.அதாவது வலது நுரையீரலில் 3பிரிவுகளும் (ண), இடது நுரையீரலில் 2பிரிவுகளும் (ன) அமைந்துள்ளது. 

இதுவே அர்த்தநாரீ எனப்படுகிறது.இடப்புறம் பெண்தன்மையும், வலப்புறம் ஆண்தன்மையும் அமைந்துள்ளது.

பாகம் பெண்ணுரு ஆனாய்போற்றி என சிவனை பாடுவதும் இதன்காரணமாகவே பாடப்பட்டது.

நம் உடலில் இடவலமாக இவ்வாறு பெண் தன்மையும், ஆண்தன்மையும் அமைந்திருக்க மேல் கீழாக தலையிலிருந்து கண்டம் வரை ஆண்தன்மையும்(வடக்கு), கண்டத்திலிருந்து கீழ்பகுதியாகிய உடல் பகுதி பெண்தன்மையும் (தெற்க்கு -பிண்டம்) அமைந்திருக்கிறது.

எனவே நமக்கு உள்ளிருக்கும் நவகிரக குரு வடக்காகிய தலையை (அறிவு)  நோக்கி நம்மை வழிநடத்துகிறார்.

இந்த உள்குரு நன்றாக அமையப்பெற்றவர்களே பிறவிஞானியாகவும், குருவாகவும் வாழ்ந்து சீடர்களை வெளியிலிருந்து வழிநடத்தி அவர்களின் குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து, மேல் நோக்கி செலுத்தி ஞானமடைய உதவுகிறார்.

பொதுவாக வெளியிலிருக்கும் ஸ்தூலகுரு சீடர்களுடனேயே  வாழ்ந்து உடலுடன் (தெற்க்கு) இருந்து வழிநடத்துதுவதால் இவர் தெற்க்கு நோக்கி அமர்ந்திருக்கும் தஷிணாமூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார்.

குருவே சிவம் என கூறினான் நந்தி என்ற திருமூலர் வாக்கிற்கிணங்க ஸ்தூல குரு தென்னாடுடைய சிவன் என போற்றப்படுகிறார்.

எந்நாட்டவர்க்கும் குரு இன்றியமையாத இறைவனாகையால் எந்நாட்டவர்க்கும் இறைவாபோற்றி என பாடப்படுகிறது.

- யோகி ஆடலரசன் வாகீசர் தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம் மற்றும் அகில உலக சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம் திருக்கோவிலூர்.
செல் - 8675371212

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...