இறைவன் - ஆரண்யேசுவரர்
இறைவி - அகிலாண்டேஸ்வரி.
ஊர் - திருக்காட்டுப்பள்ளி
மாவட்டம் - நாகப்பட்டினம்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு
காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 12 வது தலம் ஆகும்.
2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது ஆரண்யேஸ்வரர் கோயில்.
“ஆரண்ய” முனிவர் இங்கு வந்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டதால் அந்த முனிவரின் பெயராலேயே ஆரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார் இங்குள்ள சிவபெருமான்.
இந்திரனின் சாபத்தை போக்கி, அவனுக்கு மீண்டும் தேவலோக பதவி கிடைக்கச் செய்த தலம் இத்தலம்.
இக்கோயில் பிரகாரத்தில்
தச லிங்க சந்நிதி இருக்கிறது. இங்கு ஏழு லிங்கங்கள் இருக்கின்றன.
மேலும் ஒரே லிங்கத்தில் இரண்டு நாண்கள் இருக்கும் லிங்கம் எங்கும் காணக்கிடைக்காத அம்சமாகும்.
இக்கோயிலில் சுவாமியே பிரதானம் என்பதால் இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது. இங்கு கோயில் கொண்டிருக்கும் “ராஜயோக தட்சிணாமூர்த்தி” வழக்கமான நான்கு சீடர்களுக்கு பதிலாக ஆறு சீடர்களுடன் இருப்பது ஒரு அதிசய அமைப்பாகும்.
அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் திருக்காட்டுப்பள்ளி என்கிற ஊரில் அமைந்துள்ளது.
இந்த ஊருக்கு செல்ல சீர்காழி, நாகை நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
No comments:
Post a Comment