பிறப்பு முதல் இறப்பு வரை மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள் (3 sivan temples secrets) எங்கே இருக்கு தெரியுமா ?
உலகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் போற்றப்படுபவன் சிவபெருமான். இயற்கையை அகமாகக் கொண்ட சிவன் அண்டத்தினை ஆளும் கடவுளாக கருதப்படுகிறார். இப்பூவுலகின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவனது கட்டளைக்கு இனங்கே நடைபெறுகின்றது என்ற நம்பிக்கையும் உள்ளது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இடைப்பட்ட வாழ்நாள் என ஒவ்வொரு அங்கத்தையும் அவன் வழிநடத்துவதாகவே பூஜிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிவனின் ஆலயங்கள் இன்றளவும் பல்வேறு மர்மங்களை நிகழ்த்தி வருவது வியக்கத்தகுந்த ஒன்று.
இந்தியாவில் பெருன்பான்மையாக காணப்படும் சிவன் கோவில்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி ஒட்டுமொத்த பூலோகத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அதேப் போன்றே தமிழகத்தில் கிழக்கே அமையப்பெற்றுள்ள சிவன் கோவில்கள் மனித குளத்தின் மொத்த சரித்திரத்தையும் அடக்கிய மர்மம் நிறைந்த கோவிலாக காணப்படுகின்றனது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்து நெல்லிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது பூலோகநாதர் கோவில். இது கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டிய இராஜேந்திர சோழரால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இதில் வியக்கத்தகுந்த விசயம் என்னவென்றால் இதன் அருகே ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிவன் கோவில்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளன.
நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் உள்ள அ/மி புவானாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் (பூலோகம்) என்றும், பூலோக நாதர் கோவிலுக்கு அருகில் வெள்ளபாக்கம் கிராமத்தில் உள்ள அ/ மி சிவகாமி சுந்தரி உடனுறை சிவலோக நாதர் ஈஸ்வரன் கோவில்(சிவ லோகம்)என்றும் நெல்லிக்குப்பம். பிரதான சாலையில் பேரூந்து நிலையம் அடுத்து மூன்றாவது வலது புற சாலையில் சென்றால் ஒரு வைணவ கோயிலை தாண்டி ஊரின் வடகிழக்கில் உள்ள
அ/மி அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவில் (கைலாசம்)
என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கோண வடிவிலான பிறப்பு முதல் வாழ்ந்து முக்தியை அடைவது வரையிலான மூன்று நிலைகளை குறிக்கக்கூடிய பூலோகம், சிவலோகம், கடைசியில் இந்த கைலாசத்தினையும் தரிசிக்கும் வகையில் இந்த ஆலயங்கள் அமைந்து உள்ளது.
உலகில் வேறெங்கும் காண முடியாத வகையில் அற்புதத் தலங்களாக விளங்குகிறது.
வீடு, நிலம் உள்ளிட்ட பிரச்சனைகள் நீண்ட நாட்களாக தொடர்ந்துகொண்டே இருப்பவர்கள், மண்ணுக்கு அதிபதியான பூலோகநாதரை வழிபடுவதன் மூலம் விரைவில் பிரச்சனைகள் தீரும் என்பது தொன்மையான நம்பிக்கை. மண் தொடர்பான எந்தவிதமான பிரச்சனைகளையும் எளிதில் தீர்க்கும வல்லமைகொண்டவர் பூலோகநாதர்.
பல்வேறு சிறப்புகளையும், அதிசய வடிவிலும் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வருவதன் மூலம் உலகில் வேறெங்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது, ஒரே சமயத்தில் அண்டத்தில் ஆன்டவரான ஈஸ்வரனையும், பெருமாளையும் தரிசிக்கக் கூடிய உன்னத திருத்தலம் இது.
மேலும், இத்திருத்தலத்தில் உள்ள புவானம்பிகை பெண்களுக்கு திருமணத் தடைகளை நீக்கி, சுமங்கலி வாழ்வழிக்கும் கடவுளாவார்.
பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற மூன்று நிலைகளை குறிக்கும் வகையில் முதலில் பூலோக நாதர்,பிறகு சிவலோக நாதர்,கடைசியாக கைலாசநாதர் கோவில்களை தரிசித்து முக்தியை அடையுங்கள்.,
No comments:
Post a Comment