Friday, April 12, 2024

தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எப்படி இருக்கும்.

இந்த தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வளர்பிறை சஷ்டி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில், மிதுன ராசி அதிகண்ட யோகத்தில் 
நவகிரகங்களின் உச்ச நாயகனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒவ்வொரு முறையும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இந்த சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரிய பகவான் உச்சம் ஆகின்றார்.

உதயத்தில் கொட்டும் புதன்.. ராஜயோக வாழ்க்கை.. பணமழை கொட்டுது.. திருமண யோகம்

அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. இதில் மேலும் சிறப்பு என்னவென்றால் குரு பகவானோடு சூரியன் அமர்கின்றார். இது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய கோச்சார அமைப்பாகும். குருபகவானோடு சூரியன் சேர்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். இந்த சம்பவம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

இந்த தமிழ் புத்தாண்டான குரோதி புத்தாண்டு பலருக்கும் நன்மையாக அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக சூரியன் மற்றும் குரு இவர்கள் இருவரும் இணைவது சிறப்பாகும். சூரிய பகவானால் ஏற்பட்டு வந்த பல தோஷங்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது. சூரிய பகவான் உச்ச நிலைகள் இருக்கும் பொழுது குருபகவானோடு சேர்கின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அறிவுக்கூர்மை அதிகமாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

குரோதி வருட தமிழ் புத்தாண்டு
 

இந்த தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வளர்பிறை சஷ்டி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில், மிதுன ராசி அதிகண்ட யோகத்தில் தைதுளை காரணத்தில் உதயமாகின்றது.


தமிழ் புத்தாண்டு நேரம்
 

வாழ்க்கையில் புதுமையை பெற வேண்டும் என்பதற்காக புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த தமிழ் புத்தாண்டு திருநாள் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வருகின்றது. இன்றைய தினத்தில் காலை 7.30 முதல் 8.30 வரை நல்ல நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இலங்கை மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வழிபாட்டு முறைகள்
 

தமிழ் வருடப்பிறப்பு தினத்தில் செய்யும் நமது செயல்கள் அனைத்தும் நமது வாழ்க்கையை வளமாக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. சித்திரை மாதத்தில் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு தொடங்குகிறது.

இன்றைய தினத்தில் மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகளை கொண்டு நெல், நகைகள், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்களப் பொருட்களை தாம்பூலத்தில் வைத்து அதிகாலை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் மிகவும் சிறப்பு என கூறப்படுகிறது.

அதிகாலை எழுந்து குளித்துவிட்டு புது உடைகளை அணிந்து கோயிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இன்றைய தினத்தில் அறுசுவைகளும் இடம்பெறும் அளவிற்கு உணவை செய்து இறைவனுக்கு படைப்பது பாரம்பரிய செயலாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அதாவது கசப்பு புளிப்பு உப்பு காரம் துவர்ப்பு ஆகிய அறுசுவைகளும் இருக்கக்கூடிய உணவுகளை சமைத்து வழிபடுவது மேலும் சிறப்பாகும். பொதுவாக இது போன்ற திருவிழா நாட்களில் பாகற்காய் பலரும் சேர்ப்பது கிடையாது. ஆனால் தமிழ் புத்தாண்டு திருநாளில் பாகற்காய் சேர்க்கப்பட்டு படையலில் வைக்கப்படுவது சிறப்பு விசேஷம் ஆகும்.

இந்த அறுசுவை உணவுகளை படைப்பதற்கு காரணம் வாழ்க்கையில் அனைத்து தருணங்களும் நம்மை நோக்கி வரும் அதனை நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த படைகள் வைக்கப்படுகிறது.


தமிழ் புத்தாண்டு தினத்தில் மற்றவர்களுக்கு தானம் செய்து வழிபட்டால் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். தண்ணீர் மோர் குடை செருப்பு உணவு உள்ளிட்ட அனைத்தையும் தானமாக கொடுக்கலாம். சித்திரை மாதம் வெயில் காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு மக்களுக்கு தான உங்களை செய்து வழிபாடு செய்யலாம்.

குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது உணவு கொடுப்பது உள்ளிட்ட அனைத்து செயல்களும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும் என்பது ஐதீகமாகும்.

தமிழ் புத்தாண்டு தினத்தில் இளநீர் தர்பூசணி நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சி மிகுந்த பலன்களை தானம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் உணவு பஞ்சம் ஏற்படாது என்பது ஐதீகமாகும். மேலும் தமிழ் புத்தாண்டு தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட நகைகளை வாங்கினால் குறையாத செல்வம் உங்களைத் தேடி வரும் எனக் கூறப்படுக

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...