Friday, December 15, 2023

முதலில் நடராஜர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் !!

#சிதம்பரம்_உணர்ந்து_அனுபவிக்க !! என்றும் திளைத்திருக்க !! - இவனது அனுபவ உரை, எப்படி என்பது உங்கள் சுகந்திரம் !! ( கொஞ்சம் தனித்திருந்து இப்பதிவை படிப்பது நலம் ?? )
முதலில் நடராஜர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் !!

நடராஜா என்பது தேவர்களுக்கான சிவரூபம், மனிதர்களுக்கான சிவரூபமோ சிவலிங்க வழிபாடு !!

அந்த தில்லை வனத்தில் உள்ள ஆதிமூலட்டநாதரை பதஞ்சலி - வியக்கரபாதர் வழிபட்டு தவம் புரிந்து வேண்டி பெற்ற வரமே நாம் தில்லையில் காணும் ஆனந்த நடராஜ ரூபம் !!

அவ்வுருவை ஏதோ நாம் கண்ட பல்வேறு திருமேனிகள் போல அல்லாது, அவ்வுருவை கண்டு கொண்டு அதிலிருந்து வெளிப்படும் பிரபஞ்ச பேராற்றல் என்ற இறைப்பேரற்றல் அதிர்வலைகளை உங்களுள் உள்வாங்கி அனுபவித்து இருந்து பாருங்கள் !!

அது உங்களை யார் என்றும், எத்தகைய திறனுடையவர் என்றும், யாரின் இயக்கமாகிய அரவணைப்பில் அனுப்பொழுதும் இருந்து எதற்கோ அஞ்சி, எதுவோ நம்மால் முடியாது என்று வேண்டி, எதன் பின்னோ திரிகிறோம் என்ற மெய்யை உணர்த்தும் !!

அவ்வனுபவத்தை பெற !!
அந்த அற்புதத்தின் அற்புதத்தை நாம் புரிந்துகொள்ள !! நம்மை தயார்படுத்த !! நாம் உணர்ந்தனுபவிக்கும் ஆற்றலும் பெற !!

தில்லை சிதம்பர ஆலயத்துள் நுழைந்தவுடன், நேராக நடராஜபெருமான் சன்னதிக்கு செல்லும் முன் !!

முதல் பிரகாரத்தில் உள்ள ஆதிமூலட்டநாதரை சன்னதியில், யாதொரு இடைஞ்சல் இல்லாது, அமைதியாக அமர்ந்து

" இவ்வகிலத்தின் ஆதியும் மூலமும் ஆனா பெருமானே, பிரபஞ்சத்தையே இயங்கி இயக்கும் அற்புதனை நடராஜா பெருமானை உணர்ந்து அனுபவிக்கும் தகுதியை எனக்கு அருளி !! அந்த ஆனந்த தாண்டவ அற்புதத்தை என்னுள்ளே அனுபவிக்க என்னை தயார்படுத்திக் அருளும் "

என்று இருந்து

உங்கள் அகத்தால் உங்கள் ஆன்மா வழியே அந்த ஆதிமூலட்டனாதனை பற்றி உங்களுள் தோன்றும் சிவ நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள் !!

உங்கள் உடலுள் ஓர் மாற்றம்,
உங்கள் அணுக்களுள் ஓர் புத்துணர்ச்சி,
உங்கள் சிந்தையில் ஓர் நிர்வாணம்,
அகத்தில் ஓர் தெளிவு, போன்ற வெளியே சொல்ல முடியாத ஓர் அற்புத அனுபவம் தொடங்கும்,
அது அப்படியே பரவி உங்களுள் ஆக்கிரமித்து ஓர் உச்சத்தை தொட்டு அடங்க்கி, உங்களுள் ஓர் விழிப்பு வரும் !!
அதுவரையில் பொறுமையாக இருந்து, இடையூறுகள் தவிர்த்து, தனித்து விழித்து எழுங்கள் !!

இப்போது அந்த ஆனந்தநடராஜ மூர்த்தி இருக்கும் சன்னதிக்குள் நுழையுங்கள் !!

இப்போது தெரியும் சிதம்பரம் என்றால் என்ன என்று வெளியே இப்படித்தான் என்று விவரிக்க முடியாத பிரபஞ்ச வாயிலில் ஓர் பயணமாக உங்கள் அடியை எடுத்து வைத்து !!

அந்த நம் உடலோடு பொருந்திய கருவறையில், இருதயம் இருக்கும் இடது பக்கமாக நடராஜ தரிசனம்,

உங்கள் இருதய துடிப்பாக " லேப் டப் " என்ற ஓசை கூட " தைய தக்க " என்று அவன் ஆடும் அற்புதமாக !!

அந்த இயக்கத்தின் பிரதிபலிப்பை செயல்படும் ஒவ்வொரு அணுவிலும் அவன் ஆக்கிரமிப்பு அப்படியே பரவும் !!

ஆகா ஆகா ஆனந்தம் ஆனந்தம் சிவானதம் !!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...