Friday, December 15, 2023

ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட அன்று பொன்னம்பல மேட்டில் புனித சுடர் தெரிந்தது.

ஐயப்பன் யார்?
ஆர்யன் எனும் அய்யன் 
காயங்குளத்தில் இருந்து புறப்படும் முன்,

வாவர்
என்பவர் அரேபிய கடற்கொள்ளையர்.
அவர் கடற்கரை ஓரம் முகாமிட்டு கடற்கொள்ளை நடத்துவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து அவரோடு சண்டையிட்டார் ஆர்யன்.

கடற்கொள்ளையனான வாபர் 
ஆர்யனோடு சண்டையில் தோற்றார்.

தோற்றவர் ஆர்யனின் நண்பர் ஆனார்.

தனது படைகளை ஆர்யனின் படைகளோடு இணைத்து
ஆர்யனுக்கு தோள் கொடுக்கும் நண்பர் ஆனார்.

பந்தள மன்னரின் சம்மதத்துடன் 
பல ஊர்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.

ஆர்யனின் போர் படையில்
கொச்சு கடுதா வாள் சண்டையில் வல்லவராக இருந்தவரை
அந்த வாள் சண்டையின் தலைவராக ஆக்கினார்.

தலபாறை  வில்லன்
மற்றும்
தலபர மல்லன் 
சிறந்த வில்லாளர்கள் ஆவர்,
இவர்கள் ஆர்யனின் படையை அலங்கரித்தனர்.

சேர்தலாவில்
ஆர்யன் தங்கி இருந்த போது,
சீரம் சிர மூப்பன் 
களரி பயிற்சியை தனது போர்வீரர்களுக்கு சொல்லி கொடுத்து 
ஆர்யனின் படையில் இணைந்தார்.

சீரம் சிர மூப்பனார் மகள் ஆர்யாவின் மேல் காதல் கொண்டார்.

ஆர்யன் அவளது காதலை நிராகரித்து 
அறிவுரை வழங்கினார்.

தனது படைவீரர்களோடு உதயணனை எதிர்த்து
போருக்கு அழைத்தார்.

அந்த போரில் உதணனின்
வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதை கண்டு 
பின் வாங்கினர்.

பின்னர் 
எருமேலியில் படைவீரர்களை ஒன்று கூட்டினார்.

படைவீரர்கள் தங்களை ஆதிவாசிகள் போல உடையணிந்து நடனமாடி குழு குழுவாக வந்து இணைந்தார் இருந்தனர்.

முன்பு மகிஷியை வதம் செய்த ஐயப்பன்
அவள் உடல் மேல் ஆடிய ஆட்டமே பேட்டை துள்ளல் 
மறுபடி படைவீரர்கள் ஆடிய
இன்றைய பேட்டை துள்ளல்...

சீரம் சிர மூப்பனின் மகளை கடத்தி சென்ற உதயணன் அவளை கொன்றார்.

எரிமேலிக்கு  வரும் படைவீரர்கள் 56 நாட்கள் விரதம் இருந்து வரச்சொன்னார் ஆர்யன்.

அனைவரும் விரதத்தை எரிமேலியில் முடித்து கிரக சாஸ்தாவை வணங்கினர்.

தனது படையை மூன்றாக பிரித்தார்.

வாபர் தலைமையில் 
அலங்கார யோகம் எனவும்,

கடுதாவின் தலைமையில் 
அமல்புழா யோகம்,

வில்லன்
மற்றும்
மல்லன் தலைமையில்
பந்தளம் யோகம் 

என படையை பிரித்து
படையின் மையப்பகுதியை தான் வைத்துக்கொண்டு,
உதயணனனை தேடத் தொடங்கினர்.

மூன்று பக்கங்களில் இருந்து தாக்குதல் தொடங்கியது.

இஞ்சிப்பாறை,
கரிமலை,
உடும்பாறை
போன்ற பகுதிகள் உதயணனின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அந்த இடங்களில் அவரின் படையை வென்று 
பந்தளத்தோடு சேர்த்தனர்.

கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை உதயனின் 
ஆளுமையில் இருந்து மீட்டனர்.

உதயனின் படைகளை எதிர் கொண்ட ஆர்யனின் படை ஆக்ரோசமாக தாக்கியது.

கரிமலை கோட்டையில்
உதயணன், 
கொச்சு கடுதாவின் கைகளால் கொல்லப்பட்டார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற படையினர் தங்களுடைய ஆயுதங்களை 
பெரிய ஆலமரத்தின் அடியில் வைத்துவிட்டு கோவில் இருந்த பகுதிக்கு வரச்சொன்னார் ஆர்யன்.

இப்படி படைவீரர்கள் ஆயுதங்கள் வைத்த இடம்
சாரம்குட்டி எனும் சரம்கொத்தி...

கோவிலில் இருந்த 
ஆர்யனின் தந்தை ஜெயந்தனிடம்
உதயணனினை வென்ற செய்தி தெரிவித்து,

படைதலைவர்கள்,
வீரர்கள்,
பந்தமன்னர் உதவியுடன் 
ஐயப்பனின் கோவில்  நிறுவப்பட்டது.

கோவில்பணிகளின் போது ஆர்யன் இன்றைய மணிமண்டபம் இருக்கும் பகுதியில் 
தியானத்தில் அமர்ந்தார்.

கோவிலில் ஐயப்பனின் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட அன்று பொன்னம்பல மேட்டில் 
புனித சுடர் தெரிந்தது.

பின்னர் வந்த நாட்களில்
ஆர்யனை
ஆர்ய கேரள வர்மனை
யாருமே பார்க்கவில்லை..

ஸ்ரீ தர்மசாஸ்தாவின்
அம்சமாக ஆர்யனை பார்க்க ஆரம்பிதனர்..

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 

இரா.இளங்கோவன்  
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...