Tuesday, October 17, 2023

திருமால் சிவன் ஆனது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா..??

திருமால் சிவன் ஆனது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா..??
கயிலையில் #மீனாட்சி_சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயந்தது. இறைவன், #அகத்தியரை நோக்கி தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் #பொதிகையில் வாழக்கடவாய் என ஆணையிட்டார். அப்போது முனிவர் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தயும், திருநடனத்தையும் காண இயலாதே என வருந்த, இறைவன் #திரிகூடமலையின் மகிமையை கூறி அங்கு விஷ்ணுவாயிருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூசித்து வழிபட, தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் கானலாம் என் கூறி அனுப்பி வைத்தார்.

அகத்தியரும் அவ்வாரே தென்திசை சென்று #வைணவர் வேடம் பூண்டு, கோயிலுள் சென்று விஷ்னுவை வேதமந்திரத்தால் #சிவலிங்கமாக்கி வழிபட்டார். அன்று முதல் இக்கோயில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது. வைணவர்கள் #விஷ்ணு மூர்த்தியை கானாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். முனிவர், அவர்களிடம் கோயிலின் தென்மேற்கு மூலையில் வைத்து பூசைசெய்யுங்கள் #ஹரியும் #சிவனும் ஒன்றே. வேறுபாடு காட்டாதீர்கள் என உரைத்தார்.

#அகத்தியர், திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால், #சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான #தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு #தைல அபிஷேகம் நடைபெறுகின்றது..!!

அமைவிடம்: #சத்தியவாகீஸ்வரர் கோவில், #களக்காடு, #திருநெல்வேலி மாவட்டம்.

No comments:

Post a Comment

Followers

நல்லாத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர்...

            செல்வங்களை வாரித்தரும் நல்லாத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டம்                          தன்னை நாடி ...